4
நீங்கள் பிடிக்கும் படங்களில் ஒரு கோடு வெளியில் இருந்து பட்த்தின் உள்ளே செல்லலாம். அது ஒரு குச்சியாகவோ மரக் கிளையாகவோ, சாலையாகவோ, நதியாகவோ இருக்கலாம்.அப்படிப் பட்ட கோடுகள் வெளியில் இருந்து உள்ளே வருபவையாக இருக்க வேண்டும். அவை பார்ப்பவர் கண்களை படத்தின் முக்கிய அம்சத்திற்கு இழுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்குக் கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
இந்தப் படத்தில் தூரத்தில் இருந்து கேமிராவை இயக்கிடும் காற்றுக் குழாய் ஒரு இழுத்துச் செல்லும் கோடு என்று சொல்லலாம். ஆனால் அது என்ன செய்கிறது? பார்ப்பவரின் கண்களை படத்தின் பிரதான கதா நாயகனான தேன் சிட்டுக்கு இழுத்துச் செல்கிறது.
அடுத்து இழுத்துச் செல்லும் கோடு தேன் சிட்டின் அலகும் நாக்கும் ஆகும். ஆனால் இதுவும் ஒரு நல்ல வேலையே செய்கிறது. உங்கள் கண்களை கேமிராவிற்கு எடுத்துச் சென்று உங்களுக்கு ஒரு கதை சொல்கிறது.
இதே படத்தில் ஒரு பக்கத்தில் இருந்து ஒரு மரத்தின் கிளையோ, சாய்ந்த கம்பமோ நீட்டிக் கொண்டிருந்தது என்று எண்ணிப் பாருங்கள். அது என்ன செய்யும் உங்கள் கண்களை படத்தில் இருந்து வெளியே இழுத்துச் சென்று விடும்.
ஒரு ஆளோ. ஆடோ, மாடோ படத்தின் வெளி வரம்பு அருகே படத்திற்கு வெளியே பார்த்தது போல நடந்து வந்து கொண்டிருந்தாலும் இதே வேலையை செய்து விடும். இப்படிப் பட்டவை எல்லாம் தவிர்க்கப் பட வேண்டியவை.
இழுத்துச் செல்லும் கோட்டிற்கு இதோ மற்றுமொரு உதாரணம்..
இந்தப் படத்தில் சாலையும் அதன் வேலியும் இழுத்துச் செல்லும் கோடுகள். அவை உங்கள் கண்களை நேராக அந்த் அழகிய சிவப்பு வீட்டிற்கு இழுத்துச் செல்கின்றன. அதே சாலை நேராகச்சென்றோ அல்லது வலது பக்கமாகத் திரும்பியோ படத்தின் வ்ரம்புக்கு வெளியே சென்றிருக்குமானால் அது கண்களை வெளியே இழுத்துச் செல்லும் கோடுகளாக அமைந்திருக்கும்.
என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா?