20
கிராமப் புறங்களில் அழகான படங்கள் பிடித்திட பல வாய்ப்புகள் கிடைக்கும். குடிசை வீடுகள், வயல் வெளிகள், களத்து மேடு, கிராம மக்கள் என இப்படிப் பல உங்கள் கண்களைக் கவரும். அவற்றை சரியான கோணத்தில், தேவையான வெளிச்சம் பட, சரியான தருணத்தில் எடுத்திருந்தால் கதை சொல்லும் பல அழகிய படங்களை நீங்கள் எடுத்திடலாம். உதாரணத்திற்கு சில படங்கள்:
#1
(உழைப்பாளிகள்) |
#2
(வறுமைக்கோட்டின் கீழே) |
#3
(தொழிலாளி) |
#4
(இயற்கை வைத்தியம்) |
#5
(கண்ணீர் இன்றித் தண்ணீர்) |
கிராமப் புறங்களில் படம் பிடிக்கும் போது மிகுந்த கவனம் தேவை. இல்லை என்றால் நீங்கள் அனாவசியமாகப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்க நேரிடும். முதலில் நீங்கள் அவர்களோடு பேசி உங்களை அவர்களோடு ஒருவராக ஆக்கிக் கொண்டு, பின் அவர்களது அனுமதியுடன் படம் பிடிக்க வேண்டும். இந்த விதி பெண்களைப் படம் பிடிக்கும் போது கட்டாயம் அனுசரிக்க வேண்டிய ஒன்று. இல்லை என்றால் ஒரு கிராமத்தில் நாங்கள் பட்ட அவஸ்தையினை நீங்களும் பட வேண்டி வரும்.
ஒரு முறை ஏரிக்கரையில் தலையில் புல்லுக் கட்டோடு வந்து கொண்டிருந்த பெண்கள் பக்கம் தன் கேமிராவைத் தூக்கி என் நண்பர் நோட்டம் விட, அவள் கன்னடத்தில் ஏதோ கத்த, வயல்களில் இருந்து ஐந்தாறு ஆட்கள் கையில் அரிவாளோடு ஓடி வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டு மிரட்ட, அன்று அவர்களிடம் இருந்து தப்பிக்கப் பட்ட பாடு, அப்பப்பா, சொல்லி மாளாது!
படங்கள் அனைத்தும்: நடராஜன் கல்பட்டு.