3
வெட்டும் கோடுகள்: ஒரு கடற்கரைக் காட்சியையோ அல்லது சூரிய உதயம் அல்லது அஸ்தமனம் இவற்றையோ நீங்கள் படம் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் படத்தில் அடிவானக் கோடோ (Horizon) அல்லது கடற்கரையோ படத்தின் வெட்டும் கோடாகக் குறுக்கே ஓடும். கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.
படம் A யில் வெட்டும் கோடு படத்தினை இரு சம பாதிகளாகப் பிரித்திருக்கிறது. படம் B யிலும் C யிலும் கோடு அதனை 1/3, 2/3 எனப் பிரித்திருக்கிறது. இப்போது கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.
முதல் படத்தில் வெட்டும் கோடான அடிவானக் கோடு படத்தினை இரண்டாக வெட்டுகிறது. படத்தினை உங்கள் கேமிராவில் சிறிது பார்க்கும் கோணத்தில் மாற்றம் செய்து இரண்டாவது படத்தில் இருப்பது போல எடுத்திருந்தால் எப்படி இருக்கும்?
இப்போது சொல்லுங்கள் இந்த இரண்டு படங்களில் எது உங்கள் மனதைக் கவருகிறது என்று.
வெட்டும் கோட்டினை எங்கு வருமாறு எடுக்க வேண்டும் என்ப்பது நீங்கள் எந்தப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது.
அடுத்த மடலில் இழுத்துச் செல்லும் கோடுகள் (Leading lines) பற்றிப் பார்ப்போம்.
ஆங்கிலத்தில் விளக்குவது எளிதாக இருந்திருக்குமோ என்னவோ. நான் சொல்ல நினைப்பது உங்களுக்குப் புரிகிறதா? இதற்கு பதில் கிடைப்பதைப் பொறுத்து இருக்கிறது நான் இந்த இழையைத் தொடருவதும் நிறுத்துவதும்.