18

சரணாலயங்களில் நடந்தோ, யானை மீதோ, நீர் தேக்கங்களில் படகிலோ சென்று, பார்த்தல்,விலங்குகளைப் படம் பிடித்தல் என்பது ஒரு இன்ப மயமான அனுபவம்.
நீங்கள் சுவாசித்திடும் சுத்தமான காற்றும், மனித ஆரவாரமற்ற நிலையும், பறவைகளின் சங்கீதமும், ஓடைகளில் ஓடிடும் நீரின் சலசலப்பும் உங்களை உடலோடு தூக்கி வேறு ஒரு உலகத்திற்கே கொண்டு சென்று விடும்.
படம் பிடித்திடும் ஆர்வத்தில் தனியாக மட்டும் சென்றிட வேண்டாம்.  வனக் காவலர்கள் துணையுடனோ அல்லது அனுபவம் மிகுந்தவர்களுடனோ செல்வது எப்போதுமே நல்லது.
#1
 
(பெரியாறு ஏரிக் கரையில் ஒரு யானைக் கூட்டம்)
தனியாக இருக்கும் யானைக்குத் தக்க மரியாதை கொடுத்து வெகு தூரத்திலே இருந்தே அதைப் பாருங்கள்.  யானைக கூட்டமாக இருக்கும் போது அவ்வளவு ஆபத்தானது அல்ல.
காட்டு விலங்குகளில் சிங்கம், சிறுத்தை, புலி இவையும் சற்று ஆபத்தானவையே.
ஒரு முறை கர்னாடகாவில் உள்ள கெமன்குண்டி மலைப் பிரதேசத்தில், ஆளுயரப் புல் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த ஒற்றையடிப் பாதை வழியே எனது குரு பெருமாள் அவர்களும் மற்றொரு நண்பருமாக நடந்து சென்று கொண்டிருந்தோம்.  ஓரிடத்தில் ஒரு புதிய வாடையை நுகர்ந்து ஒரு வினாடி நின்று சுற்று முற்றும் பார்த்தேன்.  என் பின்னே வந்து கொண்டிருந்த பெருமாள் சைகையால், “நிற்காதே.  போ” என்றார்.  நானும் நடந்தேன்.  சற்று தூராம் சென்ற பின் பெருமாள் கேட்டார், “ஏன் தெரியுமா உன்னை நிற்காதே என்றேன்?  அங்கு ஒரு புலி நம் கண்ணுக்குப் புலப்படாமல் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்த்து” என்று.  பதிலுக்கு நான் சொன்னேன், “நானும் அதற்காகத் தான் நின்றேன்.  புலி கண்ணில் படுகிறதா என்று பார்த்திடலாம்” என்று.
விலங்குகளை அவற்றின் இயற்கையான் சூழலில் இருப்பது போன்ற படங்களைப் பிடித்திட சரணாலயங்களுக்குத் தான் போகவேண்டும் என்பதில்லை.  உங்கள் ஊரிலோ அல்லது அருகாமையிலோ இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு சென்றால் கூட நல்ல படங்கள் பிடித்திடலாம்.  அப்படிப் பிடிக்கும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று விலங்குகள் இருக்கும் கூண்டுகளின் கம்பிகளோ தடுப்புச் சுவர்களோ படத்தில் வராத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  உதாரணத்துக்கு நான் பிடித்த சில படங்கள் கீழே:
#2
 
 (யோவ்…. பொண்ணு குளிக்கற எடத்துலெ ஒனக்கு என்னையா வேலெ?)
#3 
(கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம்னா இங்கெயும் வந்துட்டாங்கையா படம் புடிக்க)
#4
 
 (ராஜா ராணி)
#5
 
(புலி சிங்கம் இருந்தா ஒரு மான் இருக்க வேண்டாம்?)
 
#6 
 

(என்னெயெப் போல சோம்பேறியா இருக்காதீங்க.  சுறு சுறுப்பா இருங்க.)

 

#7
 
(உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…………….கிட்டெ வராதீங்க!)
பறவைகள் ஆச்சு. விலங்குகள் ஆச்சு.  மனுசங்களெப் பத்தி சீக்கிரத்துலெ பாக்கலாம். அதுக்கு முந்தி பூச்சிகளெப் பத்தி அடுத்த பகுதிலெ பார்க்கலாம்.
(படங்கள் – நடராஜன் கல்பட்டு)
*** 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

புகைப்பட அனுபவங்கள் Copyright © 2015 by கல்பட்டு நடராஜன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book