இலவச மென்பொருள் எனும் கருத்து 1980ம் ஆண்டு கணினி ஆராய்ச்சியாளரான ரிச்சர்டு எம். ஸ்டால்மென் என்பவரால் தொடங்கப்பட்ட குனூ GNU எனும் திட்டத்தின் விளைவாகும். குனூ என்பது மற்ற வணிகம் சார்ந்த மென்பொருட்களுக்கு ஒரு மாற்றாக இருந்தது. குனு GNU என்பது “GNU is Not Unix” என்பதின் குறுக்கம் ஆகும். இது ஒரு முற்றிலும் இலவசமான, கட்டற்ற  இயங்கு தளத்தை உருவாக்குவதற்காக தோன்றிய ஒரு யோசனை.
இங்கு இலவசம் எனும் வார்த்தை கவனிக்கத்தக்கது. இலவசம் எனும் சொல் மென்பொருளின் விலையை குறிப்பது அல்ல. இலவசம் எனும் சொல் அதையும் தாண்டி அதன் சுதந்திரத்தன்மையை குறிக்கிறது. அதன் சுதந்திரத்தன்மை பின்வரும் பாங்கில் பொருந்துகிறது.

  • பயனர் மென்பொருளை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தும் சுதந்திரம்.
  • பயனர் தன் தேவைக்கு ஏற்றார் போல மென்பொருளை மாற்றிக்கொள்வதற்கான சுதந்திரம்.
  • பயனர் மென்பொருளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதற்கான
    சுதந்திரம்.(இலவசமாகவோ அல்லது சிறு தொகைக்காகவோ)
  • பயனர் தான் மாற்றி அமைத்த மென்பொருளை மற்றவர்களுடன் பகிர முழு சுதந்திரம்.

இதனால் அதன் குழுமத்தை சார்ந்த்தவர்கள் அதனை மேலும் மேம்படுத்தி பயன் பெற முடியும். கடந்த 20ஆண்டுகளாக இந்த கட்டற்ற  மென்பொருளானது மற்ற வணிக ரீதியான மென்பொருட்களுக்கு ஒரு சக்திவாய்ந்த ஒரு மாற்றாக உள்ளது. இது பயனரின் உரிமையை மதிக்கிறது.

ரிச்சர்டு ஸ்டால்மன் குனூ எனும் குழுமத்தின் தந்தை ஆவார். முழுவதும் வணிக ரீதியான மென்பொருட்களற்ற தொழில்நுட்பம் கொண்ட ஒரு உலகை படைப்பதில் ஆவல் கொண்ட முன்னோர் ஆவர். அவருடைய ‘copy left’ எனும் யோசனை ஒரு புரட்சியை ஏற்படுத்தியது எனலாம்.

டாக்டர் ஸ்டால்மன் கட்டற்ற  மென்பொருள் வழங்கும் தன் சேவையில் இவ்வுலிகினை சுற்றி வந்து பல உரைகளை ஆற்றிவருகிறார்.

http://www.gnu.org

http://en.wikipedia.org/wiki/Richard_Stallman

http://stallman.org

 

http://www.kaniyam.com/rms/

License

Icon for the Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License

கட்டற்ற மென்பொருள் by ம. ஸ்ரீ. ராமதாஸ் is licensed under a Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book