மனிதர்கள் முதன்முதலாக நிலவில் 1969ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று காலடிகளைப் பதித்தனர். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்டிரின் ஆகிய இருவரும் நிலவில் சுமார் 3 மணி நேரம் நடந்தனர். நிலவில் நடந்த இந்த அரியக் காட்சியை சுமார் 600 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பாகக் கண்டு வியந்தனர். பூமியின் தரையில் நடந்த மனிதன் நிலவின் தரையில் நடந்தது மனித குலத்தின் சாதனையாகும். அது மனித குலம் உள்ளவரை வரலாற்றில் அழியாத ஒரு சாதனையாகும். சந்திரனின் மேல்பரப்பில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் எடுத்து வைத்த முதல் காலடி தடயம் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் வரை அழியாமல் அப்படியே இருக்கும். ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்டிரின் நிலவில் நடந்த காலடி தடங்கள் அப்படியே மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் அழியாமல் இருக்கும்.
நிலவில் காற்று கிடையாது. ஆகவே காற்று வீசாது. ஆகவே காலடிகள் என்றைக்கும் மறையாது. அவர்கள் நடந்த பகுதியில் விண்கற்கள் மோதினால் மட்டுமே அவர்களின் காலடிகள் மறைய வாய்ப்பு உண்டு. விண் கற்கள் அந்த இடத்தை தாக்காதவரை அவர்களின் காலடிகள் என்றும் அழியாமல் அப்படியே இருந்துகொண்டு மனித குல வரலாற்றின் சாதனையை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும்.