யுத்தத்தின்போது ஜப்பான் போர் விமானங்கள் சீனாவின் ஷாங்காய் ரயில் நிலையத்தின்மீது குண்டு வீசியது. 1937ஆம் ஆண்டு ஆகஸ்டு 28ஆம் நாள் சனிக்கிழமை அன்று குண்டு மழை பொழிந்து மக்களைக் கொன்றது. பத்திரிகை நிரூபர் ஹெச்.எஸ். நியூசிரீல் (H.S. Newsreel) என்பவர் அந்த துயரச்சம்பவத்தை புகைப்படம் எடுக்கச் சென்றார். ரயில் நிலையத்தில் உடல் உறுப்புகளும், கை, கால்களும் தனித் தனியாகக் கிடந்தன. நடந்து செல்லும்போது தேங்கிக் கிடக்கும் ரத்தத்தில் அவரின் காலனி முழுவதும் மூழ்கியது. ஒரு மனிதன் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து ஒரு குழந்தையை பிளாட்பாரத்தில் விட்டார். அடுத்ததாக பலத்த காயம் அடைந்த குழந்தையை எடுத்து வந்து தாயின் அருகில் கிடத்தினார். அக்குழந்தையின் தாய் இறந்து கிடந்தார்.
இந்த துயரச் சம்பவத்தை அவர் புகைப்படமாக எடுத்தார். அவர் எடுத்த அழுதுகொண்டிருக்கும் குழந்தையின் புகைப்படம் 1937ஆம் ஆண்டு செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் வெளி வந்தது. சுமார் 136 மில்லியன் மக்கள் அந்தப் புகைப்படத்தை பார்த்து கொதித்து போனார்கள். தாய் இழந்த சீனக் குழந்தை (Motherless Chinese Baby) என அப்புகைப்படம் பெயரிடப்பட்டது. இது ஒரு மிகச் சிறந்த புகைப்படமாகும். இந்த புகைப்படத்துடன் போருக்கு எதிராக சீன மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.