மனித குலம் சந்தித்திராத மோசமான விளைவுகளை இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் நாடு சந்திக்க நேர்ந்தது. மனித இனத்திற்கு ஏற்பட்ட மிக மோசமான பேரழிவாகக் கருதப்படுகிறது. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களின்மீது அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வீசிய அணுகுண்டினால் உடனடியாக மக்கள் மாண்டு போனார்கள். உடனடியாக மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டது. இரு நகரங்களும் அதன் சுற்றுப்புறங்களும் அடியோடு நாசம் ஆயின. இதுவே முதன்முதலாக போரின்போது அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிகழ்வாகும். குண்டு விழுந்த அடுத்த நொடியில் 30 சதவீத மக்கள் சாம்பலானார்கள். ஷிரோஷியாமீது சிறு பையன் (Little Boy) என்ற அணுகுண்டும், நாகசாகி மீது பருத்த மனிதன் (Fat Man) என்ற குண்டும் வீசப்பட்டது.
குண்டுகள் வீசப்பட்ட 2 முதல் 4 மாதங்களில் 2.5 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இதில் பாதி பேர் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே இறந்து போனார்கள். குண்டு விழுந்த அடுத்தகணம் மூன்று மைல்களுக்கு இடைப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டம் ஆகின. பல மைல் தூரம் பரவிய தீ மீதமிருந்த அனைத்தையும் சாம்பலாக்கின. 90 சதவீத நகரம் ஒரு நொடியில் தரைமட்டமானது. அணுகுண்டு வெடித்தபோது காளான் மேகம் ஏற்பட்டது. மீதமிருந்தவர்கள் கதிர் வீச்சால் தொடர்ந்து இறந்தனர். இதில் இறந்தவர்கள் சாதாரண குடிமக்களே. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் நிலைத்துள்ளது.