சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கின் சதுக்கத்தில் (Tiananmen Square) அரசுக்கு எதிரான போராட்டம் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 4 வரை நடந்தது. இந்தப் போராட்டம் மாணவர் சங்கம் சார்பாக நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க பீரங்கிகள் அணி வகுத்து வந்தன. இதனை ஒரு மாணவர் வழி மறித்து தடுத்து நிறுத்தும் காட்சியை பால்கனியில் இருந்து ஜெப் வைட்டனர் (Jeff Widener) என்பவர் புகைப்படம் எடுத்தார். இப்புகைப்படம் 1989ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று எடுக்கப்பட்டது. முகம் தெரியாத, பெயர் தெரியாத அந்த மாணவனை கவச தாங்கிக்காரன் (Tank man) என்று அழைத்தனர்.
பீரங்கிகளை மறிக்கும் காட்சியானது மறுநாள் பத்திரிகைகளில் புகைப்படமாக வெளிவந்தது. இதனால் அந்த மாணவர் டேங்க் மேன் என்றப் பெயரில் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். அந்த மாணவனின் பெயர், அவன் யார் என்ற தகவல்கள் தெரியவில்லை. பீரங்கிகளை மறிக்கும் புகைப்படமானது 20ஆம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.