உலகின் ஆடம்பரமான கப்பல் என்று ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) பயணிகள் கப்பலை வர்ணிக்கின்றனர். இதனை கடல் ராணி என்றனர். இது வட அயர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டது. இக்கப்பல் தனது முதல் பயணத்தை இங்கிலாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று புறப்பட்டது. இக்கப்பலில் 2223 பயணிகள் இருந்தனர். மூன்றாவது கீழ் வகுப்பில் அமெரிக்காவில் குடியேறுவதற்காக பயணம் செய்தவர்கள், முதல் வகுப்பில் கோடீஸ்வரர்களும் பயணித்தனர். இக்கப்பல் இரவு 11.40 மணிக்கு பனிப்பாறையுடன் மோதியது. 2 மணி 40 நிமிடங்களில் கப்பல் முழுவதும் நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் 1503 பேர் உயிரிழந்தனர். இது ஒரு மோசமான கடல் விபத்தாகக் கருதப்படுகிறது.
டைட்டானிக் கப்பலே உலகின் மிகப்பெரிய நீராவிக்கப்பலாகும். இது மூழ்காது என மக்கள் நம்பினர். கப்பல் மூழ்கியதை கேள்விப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்தவர்கள் பெரும்பாலும் குளிர் தாங்காதக் காரணத்தால் இறந்தனர். கடலில் மூழ்கிய இக்கப்பல் 1985 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கிறது. இங்கு நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கு 2700 கி.கி. ஆக உள்ளது.