நாம் வாழும் பூமியின் மிகப் பிரபலமான புகைப்படம் என்பது 1972ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அப்பலோ – 17 என்கிற விண்கலம் 1972ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று நிலவை நோக்கி பயணம் செய்தது. இந்த விண்கலத்தில் ரோனால்டு ஈவன்ஸ், யூஜினி செர்னான் மற்றும் ஹாரிசன் ஸ்மித் ஆகிய மூவரும் பயணம் செய்தனர். அந்த விண்கலம் 45000 கி.மீ. உயரம் சென்றபோது முழு பூமியை கண்டனர். அப்போது பூமியை புகைப்படம் எடுத்தனர். பூமி பளபளக்கும் நீல நிறத்தில் (Blue Marble) காட்சியளித்தது. இந்தப் படம் மிகப் பிரபலமான படமாகக் கருதப்படுகிறது. இந்தப் புகைப்படத்தை நாசா அமைப்பு 2012ஆம் ஆண்டில் வெளியிட்டது.
உண்மையான புகைப்படத்தில் பூமியின் தென்துருவம் மேல் பகுதியில் இருந்தது. ஆனால் நாசா அமைப்பு அதனை 180 டிகிரி திருப்பி, கிழக்கத்திய பகுதிகள் தெரியும்படி செய்து புகைப்படத்தை வெளியிட்டது. தென் துருவத்தின் பனிக் கட்டிகள் அதிகம் மூடியிருப்பது தெரிகிறது. ஆப்பிரிக்காவின் கடற்கரை, ஆப்பிரிக்காவின் வடகிழக்கு எல்லையில் அரேபியன் தீபகற்பம், மடகாஸ்கர் தீவு, ஆசியாவின் நிலப்பரப்புகள் உள்பட இந்தப் புகைப்படத்தில் தெரிகின்றன.