உலகிலுள்ள சோசலிசப் புரட்சி இயக்கங்களின் சார்பாக மிகவும் மரியாதைக்குரிய நபராக சேகுவேரா விளங்குகிறார். இவர் 1928ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் பிறந்தார். கியூபா, காங்கோ, பொலிவியா போன்ற நாடுகளின் புரட்சிகளில் ஈடுபட்டவர். மருத்துவரான இவர் ரக்பி என்னும் விளையாட்டில் சிறந்து விளங்கினார். இவரை சே என்று அழைத்தனர். இது நண்பர் அல்லது தோழர் என்ற பொருள் கொண்ட அர்ஜெண்டீனாச் சொல்லாகும். இவர் பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆயுதம் தாங்கிய புரட்சி மூலமே சமூக ஏற்றத்தாழ்வுக்குத் தீர்வு காண முடியும் என சேகுவேரா நம்பினார். அவர் உண்மையான புரட்சியாளனாகவே விளங்கினார்.
அமெரிக்க சிறப்பு ராணுவம் மற்றும் சி.ஐ.ஏ. மூலம் கைது செய்யப்பட்டார். எந்த விசாரனையும் இன்றி 1967ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று கொல்லப்பட்டார். தன்னை சுட்டுக்கொல்ல வந்தபோது அவர் காலில் குண்டடிபட்டிருந்தது. மரணத்தை தைரியமாக வரவேற்றார். தன்னை கொல்ல வந்தவனை பார்த்தும் ஒரு நிமிடம் பொறு, நான் எழுந்து நிற்கிறேன். பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றார். அவரின் இந்தப் புகைப்படம் 1960ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று எடுக்கப்பட்டது. அவரின் உருவம் பதிந்த பனியன்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் போட்டு மகிழ்கின்றனர்.