ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிமாவரி – 8 (Himawari – 8) என்கிற செயற்கைக்கோள் பூமியின் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படம் மிகப் பிரபலமானது. ஏனென்றால் அது நாம் வாழும் பூமியின் உண்மையான வண்ணத்தை முதல்முறையாக புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பல்வேறு அலை நீள பட்டைகளைக் கொண்டு பூமியின் வண்ணத்தை புகைப்படம் எடுத்துள்ளது. இந்த படங்களில் எவ்வித வடிகட்டிகளும் உபயோகிக்கப்படவில்லை. இந்தப் புகைப்படத்தை ஹிமாவரி செயற்கைக் கோளானது பூமியிலிருந்து சுமார் 35,790 கி.மீ. தொலைவில் இருந்து எடுத்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் 2014ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று UTC நேரப்படி 05.16 மணிக்கு ஏவப்பட்டது. இது 3500 கிலோகிராம் எடை கொண்டது. இது 8 ஆண்டுகள் இயங்கக் கூடியது. ஆனால் 15 ஆண்டுகள்வரை செயல்படும் தன்மையுடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் எடுத்து அனுப்பிய புகைப்படமே பூமியின் உண்மையான வண்ணம் கொண்ட பூமி படமாகும்.