கெவின் கார்ட்டர் (Kevin Carter) என்ற புகைப்படக் கலைஞர் சூடான் நாட்டில் நிலவிய பஞ்சத்தை நேரில் காண மார்ச் 1993 இல் சென்றார். அவர் தெற்கு சூடானில் அயோடு (Ayod) என்னும் கிராமம் அருகில் கண்ட காட்சியை 20 நிமிடங்கள் காத்திருந்து புகைப்படம் எடுத்தார். பசியினால் உடல் மெலிந்த சிறுமி ஐக்கிய நாடுகள் சபையின் உணவளிக்கும் கூடாரத்திற்கு தவழ்ந்து சென்றுகொண்டிருந்தாள். அச்சிறுமியின் உயிர் எப்போது பிரியும், அவளை இரையாக்கிக் கொள்ளலாம் என ஒரு வல்லூறு காத்திருப்பதை சேர்த்துப் படம் எடுத்தார். இது சூடான் பஞ்சத்தை எடுத்துரைக்கும் படமாக 1993ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. இந்தப் புகைப்படம் உலகையே உலுக்கியது.
இந்தப் புகைப்படத்திற்காக இவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. அச்சிறுமி உயிர் பிழைத்தாளா என்ற கேள்வி உலகம் முழுவதும் இருந்து எழுந்தது. அந்தச் சிறுமியை காப்பாற்றாத குற்ற உணர்ச்சி கெவின் கார்ட்டருக்கு இருந்தது. அவர் மன அழுத்தத்தால் 3 மாதத்திற்குள் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதம் இப்படி தொடங்கியது. I am Really, Really Sorry. பத்திரிகைக் குழு அச்சிறுமியின் நிலையை கண்டறியச் சென்றபோது அச்சிறுமி உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.