"

பூமியின் மிக உயரமான வளிமண்டலத்திலிருந்து ஒலியின் வேகத்தில் குதித்து உலக சாதனை படைத்த மனிதர்தான் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் (Felix Baumgartner) ஆவார். இவர் ஆகாயத்திலிருந்து குதிக்கும் சாகச வீரர். இவர் 2012ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று ஹீலியம் பலூன் மூலம் 39 கி.மீ. உயரம் (1,27,852 அடி) உயரம் வரை சென்றார். இந்த உயரம் செல்வதற்கு அவருக்கு 2 மணி நேரம் ஆனது. அவர் பலூனில் இருந்த கலத்திலிருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு காற்றின் அடர்த்தி என்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே. ஆக்ஸிஜன் மிகமிக குறைவான அளவே இருந்தது. அதனை வெற்றிடம் என்று கூடச் சொல்லலாம். அவ்விடத்தில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அந்த உயரத்திலிருந்து அவர் கீழ் நோக்கி பாய்ந்தார். அவர் குதித்தவுடன் இரண்டு குட்டிகரணங்கள் அடித்தார். பின்னர் இரு கைகளையும் உடலோடு ஒட்டிய நிலையில், நீச்சல் குளத்தில் குதிக்கின்ற நீச்சல் வீரர் போல் கீழே பாய்ந்தார்.

அவர் குதிக்கும் அந்த கணத்தில் கைகளால் பூமியை நோக்கி ஒரு சல்யூட் அடித்துக்கொண்டு நான் வீட்டுக்கு வருகிறேன் எனக் கூறிவிட்டு குதித்தார். அவர் மணிக்கு 1110 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வந்தார். ஒரு கட்டத்தில் மணிக்கு 1357.64 கி.மீ. வேகத்தில் பாய்ந்தார். இது ஒலியின் வேகத்தைவிட அதிகம். இதனை மனித குலத்தின் பாய்ச்சல் என வர்ணித்தனர். அவர் தன்னிச்சையாக (Freefall) 4 நிமிடம் 19.17 வினாடிகளில் விழுந்தார். பிறகு பாராசூட் உதவியுடன் தரையைத் தொட்டார். அவரது பயணம் 20 நிமிடங்களுக்குள் முடிந்தது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book