ஒரு html program-க்குத் தேவையான அடிப்படை tags பின்வருமாறு:
<html> – முதன்முதலில் கொடுக்கப்படும் இந்த tag-ஆனது browser-க்கு இது ஒரு html program என்பதை உணர்த்துகிறது.
<head> – அடுத்ததாக உள்ள இந்த tag-ஆனது browser-ன் தலைப்பை அமைக்கப் பயன்படுகிறது.
<title> – head-ஐத் தொடர்ந்து வரும் title எனும் tag-க்குள் அமையும் வார்த்தைகளே வலைதளத்தின் தலைப்பாக அமைகிறது. </title> எனும் tag தலைப்பு வார்த்தை முடிவுற்றதை உணர்த்துகிறது. இதன் பின்னர் </head> எனும் tag-ஐயும் நாம் முடித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: தலைப்பினை நீங்கள் கொடுத்தாலும், கொடுக்காமல் போனாலும், இத்தகைய tags-ஐ ஒவ்வொரு html program-லும் பயன்படுத்த வேண்டும்.
<body> – வலைதளத்தில் இடம்பெற வேண்டிய மொத்த சாராம்சமும் இந்த tag-க்குள் தான் அமையும். </body> எனும் tag வலைதளத்தில் இடம்பெற வேண்டியவை முடிவுற்றதை உணர்த்துகிறது.
இறுதியாக அமைந்துள்ள </html> எனும் tag, program முடிவுற்றதை browser-க்கு உணர்த்துகிறது.
இது போன்று <html></html>,<title></title>,<head></head>,<body></body> போன்ற ஒவ்வொரு tag-ம் /-ஐத் தொடர்ந்து அதே வார்த்தைகளைப் பெற்று முடிக்கப்படுவதை இணை tags அல்லது ஜோடி tags என்பர். html-ல் இடம்பெறும் ஒவ்வொரு tag-க்கும் இணை tag என்றொன்று இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை இல்லாமலும் ஒருசில tags உள்ளன.
இப்போது இத்தகைய tags-ஐப் பயன்படுத்தி gedit-ல் உருவாக்கப்பட்ட ஒரு program-ஐ பின்வரும் படத்தில் காணலாம்.
File: sample.html
<html>
<head>Rhymes</head>
<body>
Most children love being told Nursery Rhymes. Even elders love to hear these rhymes. They are sweet to our ears forever. The rhymes speak volumes about the interest shown by the education department to enthuse the children to speak out.
</body>
</html>
இந்த sample.html எனும் program, firefox browser-ல் open செய்யப்படும்போது அது பின்வருமாறு அமைகிறது. இதில் title tag-க்குள் கொடுக்கப்பட்ட Rhymes எனும் வார்த்தை browser-ன் தலைப்பாக “Rhymes – Mozilla Firefox” என்று அமைவதை கவனிக்கவும். பின்னர் body tag-க்குள் கொடுக்கப்பட்டவை content-ஆக வெளியாகி உள்ளது.