மூலம் – https://commons.wikimedia.org/wiki/File:Logozyrtare.jpg
இதுவரை நாம் பார்த்த html-ஆனது html5 என்று புதுப்பிறவி எடுத்துள்ளது. இது பல புதிய அம்சங்களை வலைத்தளங்களில் உருவாக்கப் பயன்படுகிறது. இதன் துணைகொண்டு ஒலி/ஒளி கோப்புகள் மற்றும் 2D/3D படங்கள் ஆகியவற்றை நமது வலைத்தளத்தில் வெளிப்படுத்தலாம். மேலும் தகவல்களை application-ல் சேமிப்பது, அவற்றைப் பயன்படுத்துவது மற்றும் real-time protocols மூலம் சேமித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வது போன்ற பல சிறப்பான வேலைகளையும் javascript மற்றும் css ஆகியவற்றின் துணைகொண்டு html5 செய்கிறது.
மேலும் வலைத்தளங்களை கணினி, அலைபேசி, Tablet போன்ற பல்வேறு கருவிகளின் வழியாகப் பார்க்கும்போதும், அதன் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல், வலைத்தளமானது சீராகக் காட்சியளிக்க பின்வரும் நுட்பங்கள் பயன்படுகின்றன.
மூலம் – http://daphyre.deviantart.com/art/HTML5-Logos-and-Badges-380429526
HTML5 – இணையப் பக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பைக் கூறுகிறது.
CSS 3 – இது நாம் திரையில் பார்ப்பவற்றை அழகாக்குவதுடன் user interface-ஐயும் கவனித்துக்கொள்கிறது.
Javascript – சாதாரண html பக்கங்களை dynamic-ஆக மாற்றி அந்தப் பக்கங்களுக்கு பல புதிய செயல்பாடுகளை அளிக்கிறது.
HTML5-ம் ஒரு சாதாரண html program-க்கான syntax-ஐயே பெற்றிருக்கும். இது பின்வருமாறு.
<!DOCTYPE html>
<head>
<title> </title>
<meta charset=”utf-8″ />
</head>
<body>
Code for html/html5
</body>
</html>
முதலில் உள்ள <!DOCTYPE html> என்பது இதுவும் ஒரு் html document தான் என்பதை உணர்த்துகிறது. அடுத்ததாக head tag-க்குள் புதிதாக உள்ள meta tag-ஆனது நமது html document பற்றிய தகவல்களை சேமிக்க உதவுகிறது. மேலும் இதன் charset எனும் attribute, UTF-8 எனும் மதிப்பினை பெற்றிருப்பதை கவனிக்கவும். இது நமது program-ல் உள்ள code அனைத்தையும் Unicode Transformation Format-8 ல் மாற்ற உதவுகிறது.