"

HTML5-ல் புதிய பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Audio & Video:

Flash, silverlight போன்ற plugin ஏதுமின்றி பாடல், காணொளி ஆகியவற்றை இணையப்பக்கங்களில் சேர்க்கலாம்.

Geolocation API:

இந்த API-ஐப் பயன்படுத்தி பயனர்களின் இருப்பிட விவரம், IPaddress போன்ற விவரங்களைப் பெறலாம். அதன்மூலம் அவர்களின் இடத்திற்கேற்ற தகவல்களை வழங்கலாம்.

Local storage:

இணையதளத்திற்குத் தேவையான தகவல்கள் database-ன் துணையின்றி browser-லியே சேமிக்கப்படும் வசதியை HTML5 தருகின்றது. இதுவே Local Storage எனப்படும். இவ்வாறு சேமிக்கப்படும் விவரங்கள் தேவையான போது மட்டுமே பயன்படுத்தப்படுவதால், இவற்றை அதிக அளவில் சேமித்தாலும் தளத்தின் திறனும், வேகமும் குறையாது.

Drag & Drop:

ஒரு இணையப் பக்கத்தின் மீது, பயனர் படம் அல்லது கோப்பு ஒன்றை இழுத்து விடும் வசதியை எளிதாகத் தரலாம். இதற்கு HTML4 ல் JavaScript கொண்டு நிறைய நிரலாக்கம் செய்ய வேண்டும்.

பல புதிய input வசதிகள்:

Form உருவாக்கப் பயன்படும் input tag-ல் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறங்களை கொடுத்து அதிலிருந்து ஒரு நிறத்தை தேர்வுசெய்யுமாறு அமைக்கும் வசதி, ஒரு calender-ஐ வெளிப்படுமாறு செய்து அதிலிருந்து தேதியை தேர்வுசெய்யும் வசதி, பயனர் கொடுக்கும் input-ஐ சோதிக்கின்ற வசதி போன்ற பல வசதிகளை javascript-ன் துணையின்றி html5-ல் இயல்பாகவே பெறலாம்.

புதிய canvas:

திரையை javascript மூலம் ஒரு வரைபலகையாகவே பயன்படுத்தலாம்.

புதிய semantic/structural elements:

 

section, nav போன்றவை ஒரு பக்கத்தின் பல்வேறு பகுதியைக் குறிக்கின்றன. article பக்கத்தின் முக்கியப் பகுதியின் உரையைக் குறிக்கிறது.

Browser ஆதரவு :-

HTML5-ல் பக்கங்களை உருவாக்கும்போது பயனரின் browser-ஐயும் கருத்தில் கொள்ள வேண்டும். மிக சமீபத்தில் வெளியான browsers மட்டுமே HTML5-ஐ ஆதரிப்பவை. பழைய browser-களில் HTML5 சரியாக இயங்காது.

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

எளிய தமிழில் HTML Copyright © 2015 by து. நித்யா is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book