"

6496b0_63d5a2a7cd3044cca0d623b1d0c9df98.jpg_srz_p_380_262_75_22_0.5_1Dts, dolby digital, dts hd போன்ற வார்த்தைகள் எல்லாம் சினிமா தியேட்டர்கள் பற்றி நாம் பரவலாக பேசும்போது சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் நமது மக்களிடையே உங்ககிட்ட dts song இருக்கா, HD print ல படம் இருக்கா என்று கேட்பது வழக்கம். இந்த stereo, dts, 5.1 surround sound, 7.1 surround sound, HD videoஅப்படினா என்னது? படத்தொட குவாலிட்டிக்கும் சவுண்டுக்கும் சம்பந்தம் இருக்கானு உங்களுக்கு தோணுச்சுனா அதுக்கான பதில் தான் இங்க இருக்கு.

பொதுவாக வீடியோக்கும் ஆடியோக்கும் சம்பந்தமே இல்லை. வீடியோவை பொறுத்த வரையில் அதன் quality பிக்சல் அளவில் குறிக்கப்படும். அதாவது 720p, 1080p, 2k, 4k (இதைப் பற்றி மற்றொரு கட்டுரையில் காண்போம்). ஆடியோவை பொறுத்தவரையில் அதன் தன்மை mono, stereo, 5.1 channel, 7.1 channel, dts, dts hd, dolby digital, Auro 3d 11.1 ,போன்றவையாக குறிக்கப்படும்.  தெளிவான அதிக பிக்சல் உடைய வீடியோ கூட வெறும்  stereo sound உடையதாக இருக்கும். அதே சமயத்தில் குறைந்த பிக்சல் உள்ள வீடியோ கூட 5.1 sound ல் இருக்கும்.  சாதாரணமாக நாம் மொபைலில் கேட்கப்படும் mp3 அனைத்தும் ஸ்டீரியோ வகையை சார்ந்தது. இது மட்டும் இல்லை, அனைத்து mp3களும் stereo format சேர்ந்தவையே. நம்மில் பெரும்பாலானோர் 5.1 mp3 ஆடியோ சாங்க்ஸ் என்று கேட்பார்கள். உண்மையில் 5.1 ஆனது wav, dts, dtshd போன்ற  பார்மட்டில் தான் இருக்கும். இதனை dvd player மூலமாக கூட கேட்க முடியாது. கணினியில் vlc player மூலமாக மட்டுமே கேட்க முடியும். Dvd dvix player ஐ பொறுத்தவரையில் வீடியோவுடன் கூடிய 5.1, 7.1 ஆடியோவாக இருந்தால் கேட்க முடியும். தனியாக wav, dts ஆடியோவை ப்ளே செய்யும் dvd player கள் பரவாலக இல்லை.

அப்படியென்றால் எனது மொபைலில் ஆடியோ ப்ளேயரில்  5.1 ஆப்சன் உள்ளதே என்று நீங்கள் கேட்கலாம். அது வெறும் சவுண்ட் எபக்ட் மட்டுமே தவிர உண்மையான 5.1 surround sound கிடையாது.

சரி அப்போ உண்மையான 5.1, 7.1 surround sound கேட்பது எப்படி?

முதலில் 5.1, 7.1 என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அது என்ன பாயிண்ட் ஒன் (.1)? ஹோம் தியேட்டர் வைத்திருப்பவர்கள் இதனை உணர்ந்து கொள்ள முடியும். தியேட்டர் சென்று படம் பார்பவர்கள் கூட இதை கண்டு கொள்ளலாம்.

5 என்பது ஐந்து தனித்தனியான audio track, audio channel ஐ குறிக்கும். 1 என்பது woofer ஐ (ஒத்ததிர்வு) குறிக்கும்.  இதே போல் தான் 7.1 என்பது ஏழு தனித்தனியான audio trackயும்  ஒரு woofer யும் குறிக்கும். 5.2 என்றால் ஐந்து audio track களையும் இரண்டு woofer யும் குறிக்கும். இங்கு woofer என்பது low frequency sound ஆகும். அதாவது தியேட்டரில் சண்டை காட்சிகள், பாடல் ஆகியவை வரும் போது டம், டமார் என்று தியேட்டரை அதிர வைக்கும் சப்தம் ஆகும். Stereo என்றால் வெறும் left, right என்ற இரண்டு track மட்டும் கொண்டிருக்கும் (உ.ம். சாதரணமாக நாம் பார்க்கும் tv, மொபைல் headset மூலமாக கேட்கும் புது பாடல்கள் ).

நாம் ஏற்கனவே சொன்னது போல் dvd, divx , mobile ஆகியவற்றில் தனியாக 5.1ஆடியோ சாங்ஸ் ப்ளே செய்ய முடியாது. சிடி கடைகளில் கூட 5.1 mp3 சாங்க்ஸ் என்று லேபில் கவர்  செய்து  விற்பனை செய்வார்கள், இன்டர்நெட்டில் தேடினால் கூட 5.1 சாங்க்ஸ் என்று அதிகமான வெப்சைட்களில் போடப்பட்டிருக்கும். இவைகளும் stereo வகையை சேர்ந்தவையே. சில குறிப்பிட்ட வெப்சைட்டில் மட்டுமே 5.1 பாடல்களை வைத்துள்ளார்கள். www.tamilhdaudio.net என்ற இணையதளம்5.1 பாடல்களை வழங்குகிறது.    இதனை vlc player மூலமாக ப்ளே செய்யலாம்.  

படத்தில் காட்டியவாறு 5.1 surround sound க்கு மொத்தம் ஐந்து தனித்தனி ஸ்பீக்கர் மற்றும் ஒரு woofer  தேவைப்படும். சினிமா தியேட்டர்களும் இதே முறையை பின்பற்றிதான் ஒலிஅமைப்பு வைத்துள்ளனர். இவ்வாறு 5.1 ஆடியோ கேட்பதற்கு குறைந்த பட்சம் ஐந்து ஸ்பீக்கர்களாவது வேண்டும். மொபைல் போனில் ஐந்து ஸ்பீக்கரா உள்ளது. ஹெட்செட் ல் போட்டால் இரண்டு தானே இருக்கிறது. எனவே மொபைல் போனை பொறுத்தவரையில் 5.1 கேட்க முடியாது. Stereo மட்டுமே கேட்க முடியும்.

சரி இதனால் என்ன பயன் என்று நினைப்போரும் உண்டு.

5.1 ல் ஸ்பீக்கர் வைக்கபடும் போது திரையில் தோன்றும் கதாப்பாத்திரங்களின் குரல் நடுவில் உள்ள ஸ்பீக்கரில் மட்டும் கேட்கும். இதர பின்னணி இசை அனைத்தும் சுற்றியுள்ள ஸ்பீக்கரில் கேட்கும். இதனால் நேரில் பேசுவது போன்ற பிரம்மையை உணர முடியும். பாடல் ஒலிக்கப்படும் போதும் இதே போல தான் பாடகருடைய குரல் மட்டும் தனியாகவும், இசை முழுவதும் வலது மற்றும் இடது புறத்தில் வைக்கப்பட்ட ஸ்பீக்கரில் கேட்கும்.

ஒரு தனி ஆடியோ அல்லது வீடியோவில் உள்ள ஆடியோ என்ன பார்மட்டில் உள்ளது என vlc player ல் ப்ளே செய்து ctrl + j அழுத்தினால் அதில் stream audio வில் காடும். சாதரணமாக mp3 ப்ளே செய்யும் பொது channels: stereo என்றும் 5.1 ப்ளே செய்யும் போது 3F2R/LFE என்று காட்டும்.

எனவே மூன்று தகவல்களை நாம் பெறுகிறோம்.

  • தனியாக 5.1, 7.1 ஆடியோ சாங்ஸ் dvd, mobile ஆகிய எதிலும் கேட்க முடியாது.

  • கணினியில் vlc player மூலமாக கேட்க முடியும்

  • 5.1 ஆடியோ கேட்பதற்கு குறைந்த பட்சம் ஐந்து தனித்தனியாக கனக்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர்களாவது வேண்டும்.

 

  • அசோக்
  • vedhon@gmail.com

License

Icon for the Public Domain license

This work (இல்லம் மாத இதழ் - 2 by illammonthly) is free of known copyright restrictions.

Share This Book