62
ஒரு காலத்தில் சென்னையில் குடியிருக்க வாடகை வீடு கிடைப்பதே பெரும்பாடாக இருந்ததாம். அதையொட்டி ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுவதுண்டு. மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் தவறி விழுந்துவிட்ட ஒருவன் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான். கரையில் போன ஒருவன் “யாரப்பா நீ? உன் பெயர் என்ன? எந்தத் தெரு? வீட்டு நம்பர் என்ன?” என்று விசாரித்தார். “அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன். முதலில் என்னைக் காப்பாற்றுங்களேன்” என்றான். “முதலில் உன் விலாசத்தைச் சொல்” என்றான் கரையிலிருந்தவன். தண்ணீரில் கிடந்தவன் திக்கித் திணறி விலாசத்தைச் சொன்னான். அவ்வளவுதான் அவனை அம்போ என்று விட்டு விட்டு அநத் விலாசததை நோக்கி ஓடினான் விசாரித்தவன். வீட்டுக்காரரிடம் “உங்கள் வீட்டில் கு டியிருந்தவர் மயிலாப்பூர் குளத்தில் விழுந்து விட்டார். அந்த வீட்டை எனக்கு வாடகைக்கு கொடுங்கள்” என்றான். “அது முடியாதே அரை மணி நேரத்துக்கு முந்தி ஏற்கனவே ஒருவர் அதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். அவர்தான் இதற்கு முந்தி குடியிருந்தவரை தெப்பக்குளத்தில் தள்ளி விட்டாராம். அவர் உறுதி சொன்ன பிறகுதான் அட்வான்ஸ் வாங்கினேன்.” சுயநலத்துக்காக மற்றவர்களை நோக வைப்பது தான்மனித இயல்பு. மற்றவர்கள் நலனுக்காகத தன்னை நோகவைத்துக்கொள்வது தான் காந்தியம்.
கர்ம வீரர் காமராசர் அவர்களுக்குக் கறுப்புக் காந்தி என்ற பெயர் உண்டு. உள்ளத் தூய்மையில், அகிம்சை உணர்வில் மனிதாபிமானத்தில், ஏழைகளை நேசித்ததில் காமராசர் காந்தியடிகள் போன்றவரே. மேல் சட்டையைக் கழற்றிவிட்டு கையில் ஓர் ஊன்று கோலைக் கொடுத்து விட்டாால் காமராசர் காந்தியாகவே மாறிவிடுவார் என்று எழுத்தாளர் சாவி சொன்னது மிகப்பொருத்தம்தான். தமிழகத்தில் பெருந்தலைவர் செய்த ஆட்சி மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. முழு உரிமை, வறுமை ஒழிப்பு, சமவாய்ப்பு, அறியாமை போக்கல் என்ற ஜனநாயகப் பண்புகளை அடிப்படையாகக்கொண்டது அவரது ஆட்சி. வன்முறையை, அடக்குமுறையைக் கையாளாமல் சமதர்ம ஆட்சியை அமைக்க இயலும் என்று உறுதியாக நம்பினார். ஜனநாயக சோஷலிசம் என்ற கொள்கை வகுக்கப்பட்டிருந்தாலும் பெயர் விளக்கத்தை விட செயலாக்கத்திற்கே சிறப்பிடம் கொடுத்தார் பெருந்தலைவர் காமராசர். “நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் சம உரிமையும், சமவாய்ப்புக்களும் பெற்று வாழ வேண்டும். அதற்குப் பயன்படும் திட்டத்தின் பெயர் எதுவாக இருந்தாலென்ன?” என்றார். அவர் சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காக ஏற்பட்டவை. சட்டத்திற்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை என்பது அவரது கொள்கை.
மற்றவர்களை அடிக்கடி மன்னித்து விடு, உன்னை மட்டும் ஒரு நாளும் மன்னிக்காதே. இதுவே மாமனிதர்களின் தாரக மந்திரம்.