64
இந்த உலகத்திலே ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஒருவனைப் பார்க்கவே முடியலே என்று ஒரு பெரியவர் கடுமையாகக் குறைபட்டுக்கொண்டார்.
“உடனே பக்கத்தில் இருந்த இளைஞன்பொதுவா அப்படிச்சொல்லாதீங்க. நான் இல்லையா?.” என்றான்.
“தம்பி,நீ சிகரெட்,பீடி, மது ஏதாவது குடிப்பியா?”
“நோ”
“பொடி, வெத்திலை பாக்கு? காஃபி, டீ?”
“அந்த பக்கமே திரும்ப மாட்டேன்.”
“போகட்டும். மாது, திருட்டு, மோசடி, வன்சொல்”
“இல்லே சார், அது மாதிரி எதுவுமே இல்லை”
“ஆச்சரியமா இருக்கே. ஒரு கெட்ட பழக்கமும் இல்லையா உன்கிட்டே”
“ஒரே ஒரு கெட்ட பழக்கம் தான் சார். பொய் மட்டும் சொல்வேன்” என்றான் இளைஞன்.
இப்படி பொய்மையையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் மத்தியில் உண்மை ஒன்றை மட்டுமே உரைத்து வாழ்ந்தவர் பெருந்தலைவர்.
குமுதம் வார இதழில், கே.ஆர்.நாயர் என்பவர்–
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தையே முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். அப்போதைய பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, ராஜ்பவனில் நிருபர் கூட்டம் நடந்தது. தற்போதைய ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சியினர் மதித்துக் காப்பாற்றுவார்களா? என்று சாஸ்திரியிடம் கேட்டனர். அதற்கு சாஸ்திரி சற்றுத் தயங்கினார். ஆனால் பெருந்தலைவர் மிகவும் அழகான தெளிவான ஆங்கிலத்தில் பதிலளித்தார்.
“Don’t go and print such suggestions in the paper. This is an agreement signed by two Democratic Governments, just as any Democratic Government in India would honour this agreement. We expect any successor Government in ceylon to honour this agreement” என்றார் பெருந்தலைவர்.
“I agree with kamaraj Ji” சாஸ்திரி மகிழ்வுடன் கூறினார் என்று குமுதம் ஏட்டில் எழுதியிருந்தார்.
உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமின்றி வெளிநாட்டு விவகாரங்களிலும்பெருந்தலைவரின் அரசியல் ஞானம் தெளிவாக திட்டவட்டமாக இருந்தது என்பதற்கு இது சான்று.
1966ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் நடந்தது. விலைகளை வீழ்ச்சியடையச்செய்து பாமரருக்கு அத்தியாவசியமான பொருட்களைத் தர அரசாங்கம் உடனடியாக நிறையத் தொழில்களை மேற்கொள்ள வேண்டும் என்று பெருந்தலைவர் கேட்டுக்கொண்டார்.
பொருளாதாரத் துறைகளில் ஒரு நிலையான தன்மை ஏற்படவும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்றும்பெருந்தலைவர் தனது தலைமை உரையில் பேசினார். அவரது பேச்சில் இருந்த தீர்க்க தரிசனம் மக்களின் சிந்தனையைத் தூண்டியது.