89
ஏமாறுகிறவன் இருக்கிற வரையில் ஏமாற்றுகிறவனும் இருக்கத்தான் செய்வான்.
அண்ணன் தம்பி இருவர் தந்தை விட்டுச் சென்ற நிலத்தை பங்கிட்டனர். “நிலத்தின் வருவாயில் ஆளுக்குப் பாதி” என்றான் அண்ணன். இதில் அண்ணன் ஏமாற்றுக்காரன் தம்பி அப்பாவி.
முதல் வருடம் வயிலில் நெல், சோளம் பயிரிட்டனர். அண்ணன், “தம்பி மேல் பகுதி எனக்கு கீழ்பகுதி உனக்கு” என்று பிரித்தான். அதன்படி அண்ணனுககு மேலே உள்ள விளைச்சலும் தம்பிக்கு கீழே உள்ள வைக்கோலும் கிடைத்தன.
மறுவருடம் “அண்ணா மேலே எனக்கு கீழே உனக்கு” என்றான் தம்பி. அதன்படி ஏமாற்றுக்கார அண்ணன் முள்ளங்கி, நிலக்கடலை போன்றவற்றைப் பயிரிட்டான். பேசியபடி தம்பிக்குத் தழையும் அண்ணனுக்கு விளைபாருட்களும் கிடைத்தன.
மூன்றாவது வருடம் அண்ணனிடம் ஏமாறக் கூடாது என்று முடிவுசெய்த தம்பி “அண்ணா மேலேயும், கீழேயும எனக்கு. நடுவில் உனக்கு” என்றான். அண்ணன்அந்த ஆண்டு கரும்பு பயிர் செய்தான். தோகையும், வேரும் தான் தம்பிக்கு கிடைத்தது.
சகோதரர்களுக்கு இடையே கூட இப்படி ஏமாற்று வேலை நடக்கின்ற போது தன்னலம் கருதாது மற்றவர்களை பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார் பெருந்தலைவர்.
ஜூன் 2ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தை நடு மண்டபத்தில் கூட்டிப் பெருமை சேர்த்தார் தலைவர். நேருஜிக்குப் பிறகு யார்? கேள்விக்குப் பெருந்தலைவர் பதிலளித்த நாள் அது.
நம்மை விட்டுப பிரிந்த மாபெரும் தவைர் நேருஜியின் இடத்தை நிரப்புவது நமக்கு சாத்தியமல்ல. இப்போது நம் கடமையை நிறைவேற்ற கூட்டுத் தலைமையும், பொறுப்பும், ஒருமித்த கருத்தும் தேவைப்படுகிறது என்று காமராசர் கூறினார்.
பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தலைவர், மந்திரிகள் ஆகியோர் இருந்த அந்தச் சபையில் பெருந்தலைவர் ஒரு எச்சரிக்கையும விடுத்தார். “நேருஜி என்ற ஒரு குடைக்கீழ்இவ்வளவு நாளும் இருந்தோம். அவர் அபயம் நமக்குக் கடைத்தது. நாம் தவறு செய்தால் நேருஜிக்காக மக்கள் நம்மை மன்னித்தாாகள். அந்த நிலை இனி இல்லை. ஆகவே எதிர்காலத்தில் எல்லோரும் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும்செயலாற்ற வேண்டும்” என்றார்.
ஆறு நாட்கள் தற்காலிக பிரதமராக இருந்த நந்தா, காங்கிரஸின் பாராளுமன்றத் தலைவராக லால் பகதூர் சாஸ்திரி பெயரை முன்மொழிந்தார். அதை மொரார்ஸிதேசாய் வழி மொழிந்தார். ஏகமனதாக லால் பகதூர் சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார். மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பட்டீல், ஜெகஜீவன்ராம், கிருஷ்ண மேனன் ஆகியேர் புதுப் பிரதமரை ஆதரித்துப் பாராட்டினார்கள்.
இந்தியாவின் முதல் பிரதமரை (நேருஜி) அண்ணல் காந்தியடிகள் நமக்கு வழங்கினார்.இந்தியாவின் இரண்டாவது பிரதமரைத் தென்னாட்டுக்காந்தியான தலைவர் காமராசர் நமக்கு வழங்கினார்.