"

36

ஒரு கூட்டத்தில் கூடியிருந்தவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பூக்களிலே சிறந்த பூ எது? சிலர் ரோஜா என்றார்கள். சிலர் தாமரை என்றார்கள். இன்னும் சிலர் மல்லிகை என்றார்கள். இப்படி பலரும் பல பூக்களைச்சொல்ல ஒருவர் மட்டும் பருத்திப்பூ என்றார். அந்தப்பூ அழகாய் இல்லையே. அதை ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் அழகை மட்டும் பார்த்து முடிவு எடுக்கக் கூடாது. பயன்பாட்டையும் பார்க்க வேண்டும். இந்தப் பூ பருத்தியாகி பஞ்சாகி, நூலாகி, ஆடையாகி அனைவரின் மானத்தையும் காப்பாற்றுகிறதே என்றார். இதே உணர்வுடையவர்தான் பெருந்தலைவர் காமராசர்.

ஒருமுறை மத்திய அரசுக்கு, தமிழக அரசு, சென்னைத் துறைமுகத்தை விரிவு படுத்தும்திட்டம் பற்றிக் கடிதம் எழுதிக் கேட்டது, கோட்டைக்கு எதிரே துறைமுக விஸ்தரிப்பு செய்தால் சென்னையின் அழகு கெட்டு விடும். ஆகவே ராயபுரம் பகுதியில் விஸ்தரிக்கலாம் என்று ஒரு அமைச்சர் சிபாரிசு செய்தார். அதற்கு மத்திய அரசு பாறைகள் நிறைந்துள்ள பகுதியில் விஸ்தரிப்பு செய்ய இயலாது. ஆகவே உங்களுக்கு வேண்டியது உணவா? அழகா? (Do you want bread or beauty) என்று கேட்டது. உடனே காமராசர் எனக்கு அழகை விட உணவுதான் தேவை (I want bread rather than beauty) என்று எழுதினார். காமராசர் அன்று அவ்வாறு எழுதியதன் பலன்தான் விரிவு படுத்தப்பட்ட துறைமுகத்தை இன்று காண முடிகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.