107
இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்து வியாபாரி ஒருவருக்கு அருமையான தேன் வந்து கொண்டிருந்தது. வியாபாரி அதை விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். இத்தாலியத் தேன் சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று ஒரு தடையுத்தரவு விதித்து விட்டார்கள்.
தமக்கு தேன் சப்ளை செய்யும வாடிக்கைக்காரருக்கு வியாபாரி ஒரு தகவல் அனுப்பினார். “நாட்டின் எல்லையில் முள் கம்பி வேலிபோட்டிருக்கிறது அல்லவா? வேலிக்கு அந்தப் பக்கத்தில் உம்முடைய தேன் ஜாடியை வைத்துவிடுங்கள் மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார் சுவிட்சர்லாந்துக்காரர்.
இத்தாலிய வாடிக்கைக்காரர்அப்படியே தேன் நிறைந்த ஜாடிகளைக்கொண்டுவந்து வைத்தார். சுவிட்சர்லாந்து வியாபாரி வேலிக்கு இந்தப் பக்கம் சிறிது தூரத்தில தம்முடைய தேனீக்கூண்டைக்கொண்டு வந்து வைத்து விட்டார்.
தேனீக்கள் புஸ்ஸென்று கிளம்பிப்போய் ஜாடித் தேனை எல்லாம் உறிஞ்சி, கூண்டில்கொண்டு வந்து சேர்த்தன. மூன்றே நாளில் இவ்விதமாக 200 பவுண்டு இத்தாலியத் தேன் சுவிட்சர்லாந்துக்கு வந்து சேர்ந்து விட்டது. சட்டத்தை மீறிய தேனீயை என்ன செய்வது.
இப்படி தேசங்களுக்கு மத்தியில் மோசம் வளர்ப்பவர்கள் மத்தியில் நேசத்தை வளர்ப்பதற்காகவே உலகச் சுற்றுப் ப யணம் மேற்கொண்டார் பெருந்தலைவர்.
ஜூலை 31ஆம்தேதி பெருந்தலைவர் கிழக்கு ஜெர்மனி சென்றார். கிழக்கு ஜெர்மன் தேசிய சபைத் தலைவர் டாகடர் எரி சாம்ஸ், துணை வெளி உறவு இலாகா அமைச்சர் ஸ்டிபி, இந்தியாவிற்கான கிழக்கு ஜெர்மனி வர்த்தகப் பிரதிநிதி திரு.ஷெர்பர்ட் பிஷர் ஆகிய தலைவர்கள் விமான நிலையத்தில் காமராசரை வரவேற்றனர்.
ஆகஸ்ட் 1ஆம் தேதிதலைவர் சோஷலிஸ்ட் ஐக்கிய முன்னணியின் முக்கிய நிர்வாகிகளான ஆல்பர்ட் மார்ட்டன் ஹெர்மன் டேர்ன் ஆகியோரைச் சந்தித்தார்.
ஆகஸ்ட் 2ஆம்தேதி செக்கோஸ்லோவோகியா நாட்டின் தலைநகரமான பிராக் நகரில் தலைவர் காமராசர் வந்து இறங்கிய போது சோஷலிஸ்ட் கட்சித் தலைவரும், சட்டம் நீதி இலாகா அமைச்சர் அலைஸ் நியூமனும் மற்றும் அரசாங்க அதிகாரிகளும், இந்தியத் தூதுவர் கோஹக் ஆகியோரும் வந்து வரவேற்றார்கள்.
தலைவர் காமராசர் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின்மத்தியக் கமிட்டிக்காரியதரிசி திரு.காடர், வெளிநாட்டு விவகார இலாகா அமைச்சர் தற்காலிகப் பிரதமர் க்ரேயிர், பார்லிமெண்ட உபதலைவர் ஆகியோர்களைச் சந்தித்து மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றி உரையாடினார்.
ஆகஸ்ட் 5ஆம்தேதி காலை இந்தியத் தூதுவர் காமராசருக்கு ஒரு விருந்தளித்தார். அந்த விருந்துக்குத் தலைவர்கள், தமிழ் மாணவர்கள், அமைச்சர்கள் போன்றோர் வந்திருந்தனர்.
ஆகஸ்ட் மாதத்திலேயே ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் வந்து இறங்கினார் பெருந்தலைவர். மூன்று நாட்கள் அங்கே தங்கினார். அங்கே புடாபெஸ்ட் நகரை பார்வையிட்டார். பின் அந்நாட்டுப் பிரதமர் திரு.கலாய் அவர்களைப் பார்லிமெண்ட் மாளிகையில் சந்தித்தார். பேச்சு வார்த்தையில் மக்கள் முன்னணி உதவிப் பொதுக் காரியதரிசியான திருமதி.பனோஜ்பஹோவா அவர்களும் கலந்து கொண்டார்கள்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று பிற்பகல் 2 மணிக்கு பல்கேரியா நாடடின் தலைநகரான சோபியா விமான நிலையத்தில் இறங்கினார் பெருந்தலைவர். பல்கேரியத்தலைவர்கள் அனைவரும் வரவேற்றனர்.
பல்கேரிய நாட்டின் தந்தையான ஜியார்ஜ் டிட்ரோவின் உடல் தைலமிட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் சமாதிக்குச்சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலிசெய்தார் பெருந்தலைவர்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி யுகோஸ்லேவியா நாட்டின் தலைநகரமான பெல்கிரேடில் பெருந்தலைவர் இறங்கியபோது அந்நாட்டு சோஷலிஸ்ட் அலையன்ஸ் தலைவரும்மாஸிடோனியா ஜனாதிபதியுமான கோலியா செபஸ்கி, தம் துணைவர்களுடன் வந்து சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
அன்று காலை யுகோஸ்லேவியா மத்தியக் கமிட்டி அலுவலகத்தில் கோலியா செபஸ்கியை சந்தித்தார். மார்ஷல் டிட்டோ, பிரியோனி எனப்படும் தனித்தீவில் வசித்து வருவதால் அவரைச் சந்திக்கச் சென்றார்.
பெருந்தலைவரை டிட்டோ மிகவும் உற்சாகமாகக் கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் உலகப் பிரச்சனைகளைப் பற்றி மனம் விட்டுப் பேசினர். சுமார் 1 மணி நேரம் உரையாடிய பின்னர், தான் டெல்லி வரும்போது சந்திப்பதாகக் கூறினார் டிட்டோ.
ஆகஸ்ட் 12இல்பெருந்தலைவரின் இருபது நாள் சுற்றுப் பயணம் நிறைவடைந்தது.