109
இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் மிகவும உடல் நலம் இல்லாத நிலையில் கூட ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.
இதைக் கண்ட அவர் மனைவி “ஏன் இந்த நிலையில் கூட எழுதுகிறீர்கள்? நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு உடல் நலத்தைக் கவனிக்கக் கூடாதா” என்று கேட்டார்.
அதற்கு பிரேம்சந்த் “ஒரு விளக்கின் கடமை வெளிச்சம் தருவதுதான். எண்ணெயும்திரியும் எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவ்வளவு காலம் அது ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கும். எண்ணெய்தீர்ந்தவுடன் தானே விளக்கு அணைந்து விடும்” என்று பதில் கூறினார். இப்படிப்பட்ட நேரம் பெருந்தலைவர் வாழ்விலும் வந்தது.
1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம்தேதி காலை
6-30 மணிக்குத் தவைர் காமராசரிடம் காலைப் பத்திரிகைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டது. படித்து விட்டுக் குளித்துச் சிற்றுண்டி சாப்பிட்டார்.
10 மணிக்கு டாக்டர் வந்து இன்சுலின் ஊசிபோட்டார். 11 மணி அளவில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 50பேர்தலவைரைப் பார்க்க வந்தனர். 3 நிமிடம் அவர்களுடன் இருந்த தலைவர் அதற்கு மேல் நிற்க முடியாமல் விடை பெற்றார்.
12மணியளவில் காங்கிரஸ் செயலாளர்களுக்குப் போன்செய்து தன்னை வந்து பார்க்கும்படிக் கூறினார். பத்திரிக்கை நிருபரான தணிகைத் தம்பி என்பவர் தலைவரைச் சந்தித்தார். 1-30 மணியளவில் மதிய உணவு உண்டார். தலையில் அதிகம் வியர்ப்பதாகத் தலைவர் கூறினார். அதற்கு உதவியாளர், “நீங்கள் எப்போது பார்த்தாலும் அதிகமாக யோசனை செய்வதால் வியர்ப்பது போலப் பிரமை” என்றார்.
சாப்பிட்டபின் பாத்ரூம் சென்று வந்து தனது படுக்கையறையில் ஓய்வடுத்தார். அவர் மணி அடித்தால்தான் உதவியாளர் உள்ளே செல்வாா. இரண்டு மணிக்கு மணி அடித்து உதவியாளரை அழைத்தார். தலைவா உடம்பெல்லாம் வியர்த்திருக்கிறது. ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அறையில் வியர்ப்பதைப் பார்த்து உதவியாளர் “டாக்டரைக் கூப்பிடட்டுமா” என்று கேட்டார். டாக்டர் சௌரிராஜனுக்கு போன் செய்து பார்த்தும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின் டாகடர் ஜெயராமைத் தொடர்பு கொண்டு அவரை உடனே வருமாறு அழைத்தனர்.
“டாக்டர் வந்தால் எழுப்பு விளக்கை அணைத்துவிட்டுப்போ” என்று கூறி உதவியாளரை வெளியே அனுப்பினார் தலைவர். மூன்று மணிக்கு டாக்டர் சௌரிராஜன் வந்தார். தலைவர் கட்டிலில் இடதுபுறம் திரும்பி இரண்டு கைகளையும் தலைக்கு முட்டுக்கொடுத்தபடி, கால்களை மடக்கியவாறு படுத்திருந்தார். வழக்கமான அவரது குறட்டை ஒலி கேட்கவில்லை. அது கண்டு சௌரிராஜன் துணுக்குற்றார். இரண்டு முறை தலைவர் தோளை அசைத்து எழுப்பினார். பதில் இல்லை. நாடித்துடிப்பைப் பார்க்கலாம என்று ஒரு கையை எடுத்தார். கை ஜில்லென்று இருந்தது. “பெரியவர் போய் விட்டாரே” என்று கதறி அழுதார்.
ஸ்டெதஸ்கோப்பையும், ரத்த அழுத்தக் கருவியையும் தூக்கி வீசி விட்டு கீழே விழுந்து புரண்டார். தொடர்ந்து டாக்டர் ஜெயராமன், டாக்டர் அண்ணாமலை ஆகியோர் வந்து தலைவர் பிரிந்து விட்டார் என்பதை அறிவித்தனர்.
காந்தீயத்தோடு காந்தீயம் இணைந்தது.