"

39

ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து கேள்வி கேட்டார். மிக மிகக் குறுகிய காலத்தில் பல கோடிக்கு அதிபதி ஆவது எப்படி?

உழைப்பால் என்றான் முதல் மாணவன். தவறு என்றார் ஆசிரியர். வியாபாரத்தால் என்றான் மற்றவன். அதுவும் தவறு என்று கூறிவிட கடத்தல் மூலம் என்றான் மற்றவன். ஆசிரியர் நோ என்றார் கடைசியாக அமர்ந்திருந்த பையன் அமைதியாக எழுந்து, நான் அரசியலில் சேர்ந்து அமைச்சராகி சம்பாதித்து விடுவேன் என்றதும், வெரிகுட் சரியான விடை என்றார் ஆசிரியர். அரசியலுக்கு வருவதே பணம் சம்பாதிப்பதற்குத்தான் என்ற நிலைமை நிலவுகின்ற நாட்டில் மக்கள் பணி ஒன்றே வாழ்வின் லட்சியம் என்று வாழ்ந்தவர் பெருந்தலைவர்.

தொழில் வளர்ச்சிதான் நாட்டை முன்னேற்றும் என்பதை உணர்ந்த பெருந்தலைவர், கோடிக்கணக்கான மூலதனம் போட்டுப் பல தொழிற்சாலைகளை அரும்பாடுபட்டு உருவாக்கினார். நெய்வேலி நிலக்கரி திட்டம், நீலகிரி கச்சா பிலிம் தொழிற்சாலை, கிண்டி ரண சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள், சோடா உப்புத் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், ஆவடி ரெயில்வே வாகன தொழிற்சாலைகள், மேட்டூர் காகிதத் தொழிற்சாலை ஆகியவை பெருந்தலைவர் ஆட்சியில் ஏற்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இவை பயன்பட்டன.

1955-61ல் 13,300 கிராமங்கள் மின்சார வசதி பெற்றன. நீர்ப்பாசன வசதிக்காக மின்சாரம் பயன்படுதல் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் அதிகம். மின்சாரம் உயயோகிக்கும் மாநிலங்களில் தமிழகமே முதலிடம் பெறுகின்றது.

1959இல் 27 கோடி ரூபாய் செலவில் சென்னை மின்சார நிலையம் விரிவுபடுத்துபட்டது. 9 கோடி ரூபாய் செலவில் பெரியாறு நீர் மின்சாரத்திட்டம செய்து முடிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 1 லட்சம் கிலோ வாட் மின்சக்தி உற்பத்தியானது.

குந்தா திட்டம் 3.5 கோடி ரூபாய் செலவில் அமைந்தது. இத்திட்டம் மற்ற நாடுகளும் பார்த்து அதிசயிக்கக் கூடிய முறையில் வெகு விரைவில் நமது எஞ்சீனியர்களால் கட்டி முடிக்கப்பட்டது. இதை நேருஜி துவக்கி வைத்தார். இவ்வாறு பெருந்தலைவர் ஆட்சி காலத்தில் தொழிற்துறை பொற்காலம் என்றே சொல்லத்தக்க அளவில் முன்னேறியது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.