67
ஊருக்குப் புதிதாக வந்த ஒருவர், எதிரே வந்த ஒருவரைப் பார்த்துக்கேட்டார்.
சார் ராகவன் என்பவரைத் தெரியுமா?
யார் ராகவனா? உயரமா இருப்பாரா?
உயரமுமில்லை, குள்ளமுன்னும்சொல்லமுடியாது
சரி நிறம் கருப்பா? சிவப்பா?
கருப்புன்னும் சொல்ல முடியாது. சிவப்பும் இல்லை
சரி எங்கேயாவதுவேலை பார்க்கிறாரா?
முன்பு வேலை பார்த்தார். இப்ப வேலை பார்க்கிறாரா? இல்லையான்னு தெரியலை அவரைத் தெரியுமா?
தெரிஞ்ச மாதிரியும் இருக்கு தெரியாத மாதிரியும் இருக்கு என்றார் மற்றவர்.
இப்படி சாதாரண செயல்கள் கூடப் புரியாமல் குழப்பத்துடன் வாழும் மனிதர்கள் பலர். ஆனால் பெருந்தலைவரோ தொலைநோக்குப் பர்வையுடன் பல அரிய திட்டங்களைத் தீட்டிய அறிஞர்.
பிறப்பால் உயர்ந்தவர். செல்வத்தால் உயர்ந்தவர். படிப்பால் உயர்ந்தவர் என்று பல செயற்கைக் காரணங்கள் பலரைப் பெரிய மனிதர்களாக்கியது உண்டு. ஆனால் இவற்றில் எதுவுமே இல்லாது தமது உழைப்பு ஒன்றால் மட்டுமே பெருந்தலைவர் உயர்ந்தார்.
பெருந்தலைவர் ஒரு தலை சிறந்த தேசியத் தலைவராக மட்டும் அல்ல. சர்வதேசப் புகழும் மரியாதையும் பெற்ற ஒரு தலைவராகத்திகழ்ந்தார். இதற்கு அவர் வகுத்த காமராசர் திட்டம் உதவியது.
ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் காரியக் கமிட்டியின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர். அவர் தனது பதவியைத்துறக்க, அல்லது காரியக் கமிட்டி விரும்பும் எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்பது காமராசர் திட்டத்தின் குறிக்கோள்.
கôங்கிரஸ் கட்சிக்குள் கட்டுப்பாடு இன்மையும் பதவி ஆசையும் வளர்ந்து வருவதைக் கண்டு நேருஜி வருந்தினார். காரியக் கமிட்டியின் அதிகாரத்தை நிலைநாட்டப் புதுமையான நடவடிக்கைகளை அதிரடியாகச் செயல்படுத்தாவிட்டால் காங்கிரசின் ஐக்கியமும், கட்டுப்பாடும் சீர்குலைந்து விடும் என நேருஜி நினைத்த நேரத்தில் உத்தமர் காமராசர் தமது திட்டத்தை நேருஜியிடம் தெரிவித்தார்.
1963ஆம் அண்டு ஆகஸ்டு 9ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. காமராஜ் திட்டம் “பதவி” துறப்புத் தீர்மானம், காமராசரால் இக்கூட்டத்தின் முன்மொழியப்பட்டது.
அரசாங்கப் பதவிகளில் உள்ள அனுபவம் மிக்க தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேலை செய்ய முன் வரவேண்டும் என்று அந்தத் தீர்மானம் கூறியது. அத்திட்டம் ஒரு மனதாக நிறைவேறியது.
மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேருஜியிடம் கொடுத்துவிட வேண்டும். அதில் யார் யாருடைய ராஜினாமாவை நேருஜி ஏற்கிறாரோ அவர்கள் கட்சி வேலைக்குத் திரும்பி விடலாம் என்று தீர்மானிக்கப்பட்டு அவ்வாறு நடந்தது.
இதன்படி நேருஜியும் தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தார். காமராசர் உட்பட அனைவரும் எதிர்த்தனர். நேரு ராஜினாமா செய்யக்கூடாது. அவர் விலகினால் இந்திய அரசு ஆட்டம் கண்டு விடும். நேரு ராஜினாமா செய்தால் என் திட்டத்தையே கைவிட்டு விடுகிறேன் என்று உணர்ச்சிகரமாகப் பேசி தன் எதிர்ப்பைக் காட்டினார். நேருஜியே ராஜினாமா செய்யப்போவதாகக் கூறியது காமராசர் திட்டத்துக்கு மேலும் வலு சேர்த்தது.
தாம்மட்டும் பதவியில் இருந்து கொண்டு எனது அருமை நண்பர்களின் ராஜினாமாக்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை வருத்தத்தைத் தந்தாலும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டுக்காகவும் முதலில் 42 பேர்களின் ராஜினாமாக்களை ஏற்றிருப்பதாகவும் ஆகஸ்டு 12ஆம் தேதி நேருஜி அறிவித்தார்.
நேருஜி அறிவித்த அந்தப் பட்டியலில் பெருந்தலைவர் பெயரும் இருந்தது. உலகத்திலேயே முதன்முதலாக அதிகாரத்தில் உள்ள மந்திரிகள் தாங்களாகவே முன்வந்து பதவி துறந்த இந்த நிகழ்ச்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அவர்களுக்குப் பெருந்தலைவரின் பெருமை தெரிய வந்தது. இது கே–பிளான் என்று அழைக்கப்பட்டது.