"

68

ஒரு மதப் பிரசாரம் செய்பவர் பல இடங்களுக்கு சென்று கவர்ச்சிகரமாகப்பேசக் கூடியவர்.

ஒரு சமயம் கூட்டத்தில் அரிச்சந்திரன் கதையை மிக மிக உருக்கமாகச் சொல்லிக்கொண்டு இருந்தார். பொய் சொன்னால் நாடு, செல்வம்திரும்பக் கிடைக்கும் என்றாலும் வாய்மை காத்த திறனைச்சொன்னார்.

இதனால் மனைவி அடிமையானாள். மகன்லோகிதாசன் பாம்பு கடித்து இறந்தான் என்பதையும் கேட்பவர் கண்கலங்க பிரச்சாரம் செய்தார்.

பிறகு தன் பேச்சால் மக்கள் எந்த அளவு நீதியை உணர்ந்து கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள கூட்டத்தில் ஒருவரை அழைத்து, இந்தக் கதை மூலம் நீங்கள் அறிந்து கொண்டது என்ன? என்றார்.

ஐயா உண்மை பேசினால் ரொம்ப, ரொம்ப கஷ்டப்படணும்னு தெரியுது என்றார். பேச்சாளர் இடிந்து போய் அடுத்தவரிடம்கேட்டார். அந்த ஆள்,

ஐயா வாழ்க்கையிலே ஒரு கஷ்டம் வந்தா அவசரத்துக்கு மனைவியை அடகு வைக்கலாம்னு தெரிஞ்சுகிட்டேன் என்றார்.

இதுதான் பொதுவாக மக்கள் நிலை. ஆனால் இப்படிப்பட்டவர்களையும் தனது எளிமையான சொற்பொழிவால் கவர்ந்து கருத்துக்களை அவர்கள் மனதில் சரியாகப் பதிய வைத்தவர் பெருந்தலைவர்.

காந்தியடிகள் தலைமையில் விடுதலை பெற்று 17 ஆண்டுகளாகி விட்டன. சுதந்திரம் பெற்றால் வசதியாக எல்லோரும் வாழலாம் என்று அன்று காந்தி கூறினார். ஆனால்இப்போது மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றிக் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்தும் ஏழை மக்கள் நலமடையவில்லை.

உணவு, உடை, வீடு போன்ற அடிப்படை வசதி கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

நிறைந்த செல்வங்களும், திட்டங்களின் பலன்களும் கடலில் கலந்து விட்டதா? அல்லது ஆவியாகி வானத்துக்குப்போய் விட்டதா? இல்லை. அது இங்கே ஒரு சிலரிடம் மட்டும் குவிந்து கிடக்கிறது.

அதை எடுத்து அனைவருக்கும் சமமாக விநியோகிக்க வேண்டும். இந்தியர் அனைவருக்கும் உணவு, உடை, வீடு, கல்வி, சமவாய்ப்பு இவற்றை அளிப்பதே காங்கிரஸின் லட்சியம்.

இதற்காக ஒரு திட்டம் வகுத்து இதற்கு மக்கள் ஆதரவைப்பெறவே புவனேஷ்வரம் செல்கிறோம். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை.”

இப்படி சுருக்கமாகவும், திட்டவட்டமாகவும் காமராசர்பேசினார். எல்லா இடங்களிலும் சமதர்ம சமுதாயம் அமைப்பது பற்றியே பேசினார். ஆந்திர மக்கள் அமைதியுடனும், ஆர்வத்துடனும் கேட்டனர்.

தலைவர் காமராசரை ஒரிசாவின் முன்னாள் முதல் மந்திரியும் வரவேற்புக் கமிட்டித் தலைவருமான பட்நாயக்கும், ஒரிசா முதல்வர் பிரேன் மித்ராவும், ஒரிசா காங்கிரஸ் தலைவர் பிஜய் பாணியும், லால்பகதூர் சாஸ்திரியும் வரவேற்று வெளியே அழைத்து வந்தனர்.

ரெயில் நியைத்திற்கு எதிரே இருந்த மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள்பெருந்தலைவரைப் பார்க்கக் கூடியிருந்தனர். காமராசரைக் கண்டதும், காமராஜ் நாடார் கி ஜே என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. தலைவர் காமராசும் பட்நாய்க்கும், பிரேன்மித்ராவும ஒரு திறந்த காரில் ஊர்வலமாகச் சென்றனர். 1,500 சேவா தளத் தொண்டர்கள் காருக்குப் பின்னால் அணி வகுத்துச் சென்றனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.