69
சார்…சார்..- எதிரே வந்த வயதானவரை நிறுத்தினார் சேகர்.
“ஏன்.. என்னப்பா?” என்றபடி நின்றார் பெரியவர்.
“சார் ராமசாமி வீடு எந்தப் பக்கம்?”
“நேரே வலது புறம்போய்… பிறகு இடது புறம் திரும்புங்க அங்கே ஒரு ஆலமரம் இருக்கும். அதன் எதிர்புறம்போய் வடக்கே ஒரு ரோடு பிரியும். அதுலே போங்க. ஒரு கோவில் இருக்கும். மேற்கே திரும்புங்க. கடைத்தெரு வரும். அதில் ஒரு டீக்கடை இருக்கும்.
“அங்கே தான் ராமசாமி வீடா?”
“தெரியாது எனக்கு. நான் ஊருக்குப் புதுசு. அந்த டீக்கடையில் நிறைய பேர் இருப்பாங்க. அவங்க கிட்டே கேட்டா யாராவது நிச்சயம் உங்களுக்கு வழி சொல்வாங்க.”
இப்படிக் குழப்பத்துடன் வழிகாட்டும் மக்கள் அதிகம் பேர் உண்டு. வழிகாட்டுவதில் வள்ளலாகத் திகழ்ந்தார் பெருந்தலைவர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவரானதும் நாடெங்கிலும்பெருந்தலைவர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். மக்கள் அவரை காலா காந்தி (கருப்பு காந்தி) என்று அழைத்து மகிழ்ந்தனர். பஞ்சாப், நேபாள எல்லை, ஒரிசா, உத்திர பிரதேசம், ஆந்திரா, மைசூர் என்று தனது பயணத் திட்டங்களை மேற்கொண்டார். 1956ஆம் ஆண்டு மே 18ஆம் நாள் தமிழகத்திற்கு வந்தார். அந்தப் பயணம் சமதர்ம யாத்திரை என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது. இந்தப் பயணத்தில் காமராசர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
என்னுடைய சமதர்ம சமுதாய அமைப்புப் போராட்டம் இதுதான். இந்த இறுதிப்போரில் குதிக்க நான் முடிவு செய்து விட்டேன். பொதுமக்களே உங்களுடைய ஆதரவு எனக்குத் தேவை. தருவீர்களா? என்று கேட்டார். லட்சக்கணக்கான மக்கள் “தருகிறோம். தருகிறோம்” என்று எழுந்து நின்று முழங்கினர். இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சி 18ஆம் நாள் சுற்றுப் பயணத்தின்போதுதான் நடந்தது. அதனால் இந்த சுற்றுப் பயணம் புனித யாத்திரை என்று அழைக்கப்பட்டது.
18 நாள்கள், 300 ஊர்கள், 200 மைல்கள், 1 கோடி மக்கள் என விரிந்தன. இந்த சமதர்மயாத்திரை பற்றி புள்ளி விபரங்கள்.
இந்தச் சுற்றுப்பயணத்தில் ஒரு நாளைக்கு இருபது, முப்பது ஊர்களுக்குச்சென்ற தலைவர் குறைந்தது 15 சிறிய கூட்டங்களிலும், 5 பெரிய கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசினார்.
இந்தக் கூட்டங்களில்பெருந்தலைவர்முதலில் சமதர்ம தத்துவத்தைப்பற்றிப் பொதுப்படையான விளக்கம்அளித்தார். பின்னர் அந்தச் சமுதாய அமைப்பிற்கு எதிரிகள், எதிர்ப்புச் சக்திகள், அவற்றைச் சமாளிக்கும் முறை குறித்து விளக்கினார். அவரது பேச்சில் சிறந்த உண்மை மின்னி மக்களுக்குப் புத்துணர்வு ஊட்டியது.