தெற்கில் ஓர் இமயம்
இல்லையே என்பதால்
பாரதத் தாய்
பெருந்தலைவரை
விருதுபட்டியில்
பிறக்க வைத்தாள்
இந்த நூற்றாண்டில்
இப்படியொரு மனிதரா!
என்றே வியக்க வைக்கும்
ஏற்றமிகு தலைவர்
நேர்மையின் நிறைகுடம்
நிஜத்தின் உறைவிடம்
தேசத்தை நேசிப்பதே
இவருக்கு சுவாசம்
எத்துணை இடர் வந்தாலும்
எவர் எவர் ஆசை காட்டி
தத்துவம் பேசினாலும்
தன் கொள்கைமாறாச் செல்வர்
தரணியை வென்ற செம்மல்.
தனக்கென எதுவுமின்றி
தன்னலம் அறவே போக்கி
தியாகத்தின் திருவுருவாய்
திகழ்ந்தவர் காமராசர்
இத்தகைய அருங்குணமே
இவரைப் பற்றி
என்னை எழுதத் தூண்டியது
இன்றைய தலைமுறை
நிச்சயம் படிக்க வேண்டிய
இன்னுமொரு ‘சத்திய சோதனை’
இவர் வழியில்
புதிய பாரதம் படைக்கப் புறப்படுவோம்
இவண்
இளசை சுந்தரம்
இவண் இளசைசுந்தரம்,
மதுரை வானொலி முன்னாள், இயக்குநர்,
நிர்மல் BS-3, அக்ரிணி குடியிருப்பு,
மதுரை– 625 003.மின் அஞ்சல்