தெலுங்குக் கவிஞர் வேணுரெட்டி சிறந்த கவிஞர். அவர் எழுதிய தெலுங்குக் கவிதையின் சாராம்சம் இது.
படைப்புக் கடவுள் பிரம்மா
ஒரு குழந்தையைப் படைத்துக்
கொண்டிருந்தார்
அப்போது அங்கே
மன்மதன் வந்தான்
இந்தக் குழந்தைக்கு நான்
போழகைக் கொடுக்கப்
போழகைக் கொடுக்கப்
போகிறேன் என்றான்
வேண்டாம் என்றார் பிரம்மா
உன் உதவியில்லாமலேயே
ஒரு குழந்தையை உருவாக்கப் போகிறேன்
நீ போகலாம் என்றார்
கொஞ்ச நேரத்தில் அங்கே
கல்விக் கடவுள் கலைமகள் வந்தாள்
இந்தக் குழந்தைக்கு
கல்விச் செல்வத்தை வாரி வழங்கப்
போகிறேன் என்றாள்
வேண்டாம் என்றார் பிரம்மா
உன் உதவி இல்லாமலேயே
உருவாக்கப்போகிறேன் என்றார்
கலைமகளும் கவலையோடு போய் விட்டாள் அடுத்து
செல்வக் கடவுள் லெட்சுமி வந்தாள்
இந்தக் குழந்தைக்கு வளமான செல்வத்தை
வழங்கப்போகிறேன் என்றாள்
வேண்டாம் என்றார் பிரம்மா
உன் உதவியில்லாமலேயே
உருவாக்கப்போகிறேன் நீ போகலாம் என்றார்
அவளும் போய் விட்டாள்
மன்மதன் வழங்கும்
பேரழகும் இல்லாமல்
கலைமகள் வழங்கும்
கல்வியும் இல்லாமல்
லட்சுமி வழங்கும்
கல்வியும் இல்லாமல்
லட்சுமி வழங்கும்
செல்வமும் இல்லாமல்
உலகப் புகழ் பெறப்போகும்
ஒரு குழந்தையை உருவாக்கப்
போகிறேன் என்றார் பிரம்மா
அந்தக் குழந்தைதான்
ளுலகம் புகழும்
உன்னதத் தலைவராய் உயர்ந்த
பெருந்தலைவர் காமராசர்.