1

முன்னுரை 

 

நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று வாழ்வில் தெளிவு கொள்ள வேண்டும். ஒரு பள்ளிச் சிறுவனுக்கு கூட்டல் கழித்தல் பாடங்களைக் கற்பது போன்றதே அது. அதைக் கற்ற பின் அனைத்துச் சிரமங்களும் நீங்கி மிகச் சுலபமாய் காணப்படும். பிரச்சினை வீட்டிலோ நாட்டிலோ அதன் அடி முதல் காரணம் மனத் தெளிவின்மையும்  அறியாமையும் ஆகும்.  ஒவ்வொரு மனமும் தெளிவடைந்தால் அது ஒருங்கே கூடி கூட்டத்தில் பிரதிபலிக்கும்.  மனித இனம் தற்போது கடினமான  பாடங்களை  கற்கும் நிலையில் உள்ளது.அதன் அறியாமையே  அந்தப் பாடங்கள் கடினமானதாகத் தோன்றுவதற்கு காரணமாகும். மனிதன் சரியான வாழ்வை தெளிவு செய்து வாழும்போது , தன்னுடைய சக்தியையும் , செயலாற்றலையும் , ஞானத்தோடு பயன்படுத்தும் போது வாழ்வின் பாடத்திற்கு சரியான விடையை அறிந்து கொள்வான். அது அது வாழ்வின்  எல்லாத் துன்பங்களுக்கும் விடை கொடுக்கும். அவ்வுயர்ந்த  ஞானத்தைப் பெற்றவர்கள் பிரச்சினைகள் சென்றடைய முடியாத உயர் நிலையில்  வாழ்கின்றனர்.

உள்ளும் புறமும் மேலும் கீழும் பிரபஞ்ச சக்தி பெருக்கெடுத்தவாறும் இழையோடியும் காணப்படுகிறது. உயர்ஞானம் உடையவர்கள் தன்னைப் பயன்படுத்துமாறு  விழைகின்றது. உள்ளவை எல்லாம் நல்  பொருள்களே. அவை தவறான வழியில் பயன்படுத்தப்படுவதே  தீமைக்குக் காரணம். நன்முறையில் பயன்படுத்தப்பட்டால் நன்மை விளையும்.

 

Share This Book