9

1) தாவரப்பெயர்:- POG0STEMON CABIN, P.PATCHOULI.
2) தாவரக்குடும்பம்:-LABIATAE.
3) வளரும்தன்மை:- களிமண்,பொறைமண், நீர்பிடிப்பு, மலைப் பகுதி, இதற்கு நிழல் தேவை. பச்செளலியை தென்னை,

ரப்பர், வாழை போன்ற மலைத் தோட்டப் பயிர்களில் ஊடுபயிராகப் பயிரடலாம். வெட்டுக் குச்சிகள் மூலமாக இனப் பெருக்கம் செய்யலாம். அரைஅடி நீளமுள்ள வெட்டுக்குச்சிகளை 2 அல்லது 3 என்ற எண்ணிக்கையில் சேர்த்து மழைக்காலத்தில் நடவு செய்யலாம்.

4) பயன் படும் பாகங்கள் :- பச்செளலி செடியில் வேர், தண்டு, இலை, ஆகியவற்றில் எண்ணெய் இருந்தாலும் இலைகளில் தான் அதிக எண்ணெய் இருக்கிறது. பறித்த இலையை நிழலில் 5 நாட்கள் உலர்த்த வேண்டும். இலையில் 3 – 3.5 சதம் எண்ணெய்கிடைக்கும்.

முக்கிய வேதியப்பொருட்கள்:- செஸ்குடெர்பீன்கள், ஒய்செலின்,
செய்செலின்க்ளாண்டுலர், டிரைகோம்ஸ், பச்செளலி பைரிடின், மற்றும் எப்பிகுவாய்ப்பைரிடின், போன்றவை ஆகும்.

5) பயன்கள்- பச்செளலி எண்ணெய் மிகத்தரம் வாய்ந்தது.

வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது. பச்செளலி இலைகளை நீரில் இட்டு குளிப்பதன் மூலம் வாதநோயைக் கட்டுப் படுத்தலாம்.
சீனமருத்துவத்தில் ஜலதோசம், தலைவலி,வாந்தி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன் படுகிறது. மிகக் குறைந்த அளவுகளில் உணவுப்பொருட்களை மணமூட்டப் பயன் படுகிறது. இது என் வரகம்பாடி தோட்டத்தில் உள்ளது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book