24

சென்ற பதிவான ராம் ராஜா மந்திர்-ல் பார்த்த கிருஷ்ண பக்தர் ராஜா மதுகர் ஷா அவர்களால் கட்டப்பட்ட அழகிய மாளிகை தான் ராஜ்மஹால்.  இந்த மாளிகையில் ”சுவர் சார்ந்த சித்திரங்கள்” எனப்படும் mural சித்திரங்கள் நிறைய இருக்கின்றன.  அவற்றில் பல இப்போதும் பொலிவுடன் காணப்படுகின்றன.

இந்த மஹாலில் நான் பார்த்து அதிசயித்த இன்னும் ஒரு விஷயம் அங்கே இருந்த குளிர்சாதன வசதி.  ஜன்னல்கள் இல்லாத ஒரு அறையில் மேலிருந்து வரும் ஒரு பெரிய இடைவெளி வழியாக அப்படி ஒரு குளிர்ந்த காற்று வருகிறது.  ஒன்றரை டன் ஏ.சி. கூட அந்த அளவுக்குக் குளிர்ந்த காற்று தருமா என்பது சந்தேகம்.  அந்த காலத்திலேயே நிறைய முன்னேறியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனதில் மகிழ்ச்சி.

ராஜ்மஹால் முழுவதையும் தரிசித்த பிறகு ஓர்ச்சா நதியில் ராஃப்டிங் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள்.  ஆனால் எங்களது துரதிர்ஷடம் பேத்வா நதியின் நடுவே இருக்கும் ஒரு நான்கு அடி அகலப் பாதை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.  அதனால் இப்படி இருக்கும் போது ராஃப்டிங் செய்வது அவ்வளவு உகந்ததல்ல, ஆபத்து அதிகம் என்று சொல்லி விட்டார்கள்.

இந்த பகுதியில் இருந்த ஓவியமான மாளிகை பற்றிய செய்திகள் படித்து மகிழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.  அடுத்த பகுதியில் ஒரு படையெடுப்பு பற்றி எழுத இருக்கிறேன்.  காத்திருங்கள்.

License

Share This Book