வணக்கம். எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் இத்தொகுப்பைப் படிக்க உட்கார்ந்திருப்பீர்கள். முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வகையினரைப் பாருங்கள்.
1 ஆண்கள் தவறே செய்யாதவர்கள்; அப்படியே தவறு செய்தாலும், ஒரு எழுத்தாளருக்கு அதைச் சுட்டிக்காட்ட எந்த அதிகாரமும் கிடையாது என்று ஆணித்தரமாக நம்புகிறவர். (ஆண்கள் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்தப் பெண் எழுத்தாளர்கள்தாம் பெண்ணியம், அது, இது என்று கிறுக்குப்பிடித்து அலைகிறார்கள்!)
2 பெண்களுக்கு உணர்ச்சிகளே கிடையாது, அல்லது இருக்கக் கூடாது என்று நினைப்பவர்.
3 பெண்களுடைய உணர்ச்சிகளை — ஆண்களுக்கே அச்சம் விளைவிக்கும் விதத்தில் — விவரிப்பவர்கள் அனைவரும் (வேறு யார், பெண்கள்தாம்!) கண்டனத்துக்கு உரியவர் என்ற ஆணித்தரமான கொள்கை உடையவர்.
இவைகளில் ஏதாவது ஒன்றோ, இல்லை மூன்றுமே உங்களை வர்ணிப்பதைப்போல் இருக்கிறதா?
மேலே படிக்காது, உருப்படியான வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள்!
படித்துவிட்டு, என்மேல் ஆத்திரப்படுவானேன்!
பணிவுடன்,
நிர்மலா ராகவன்
மலேசியா