"

இந்த காலகட்டத்தில் , கம்ப்யூட்டர் உ ப்யோ.கிப்பவர் மிகவும் அதிகம். ஆப்பரேடிங்க் சிஸ்டம் குறித்து  இந்த விளக்கம் தேவை இல்லைதான். என்றாலும், இங்கிருந்து தொடங்க்குவதுதான் முழுமை தரும் .

கம்ப்யூட்டர்கள் அன்றும் இன்றும்

old computers

ஒரு காலத்தில் ஒரு மிகப் பெரிய  கட்டிடத்தில், ராட்சத இரும்பு ப் பெட்டிகளில் இருந்த கம்ப்யூட்டர் பல கோடி ரூபாய்களுக்கு விற்கப்பட்டது. ஆனால் அதன் சக்தியோ இன்றுள்ள மடிக்கணிணி எனப்படும் LAPTOP  என்று அழைக்கப்படும் கம்ப்யூட்டர் வகையைவிட மிக மிகக் குறைவு.

சுமார் 50 ஆண்டுகள் முந்தய காலத்தில், கம்ப்யூட்டர்கள்,

(1) ஆராய்ச்சியாளர்கள் மற்றும்  விஞ்ஞானிகளின்  தேவையான சிக்கலான, மற்றும் அதிக நேரம் செலவிடவேண்டிய computing சேவைகளை  விரைவாகவும் துல்லியமாகவும் செய்ய பயனாகியது.

(2)  பெரிய நிறுவனங்க்களின் வரவு செலவு, மாதாந்திர வருடாந்திர கணக்கு வழக்குகளை செய்துவர பயனாகியது.

இன்றைய பார்வவையில்,அன்றைய விலை உயர்ந்த கம்ப்யூட்டர்கள் ஒரு சிறந்த கால்குலேட்டர்களாகத் தோற்றமளிக்கும்.

இன்று உள்ள கிராபிக்ஸ், நெட்வொர்கிங் போன்ற பல சிறப்பு அம்ப்சங்கள்  அன்று இல்லை.

இன்று மிக சிறிய வடிவில், குறைந்த விலையில்,  மிக அதிக வேகத்தில் புதிய புதிய பல தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக ஒரு முக்கிய காரணம், கம்ப்யூட்டரின் ஹார்டுவேர்.

இன்று கம்ப்யூட்டர், ஒரு கடவுள் மாதிரி.

ஏனென்றால், கம்ப்யூட்டர் இல்லாத இடமே இல்லை. கடவுளும் நம் கண்களில் புலப்படுவது இல்லை. அதேபோல கம்ப்யூட்டரும் பல அன்றாடம் பயனாகும் கருவிகளில், நம்புலங்களிலிருந்து  மறைந்து இருக்கிறது.

இன்று,  அன்றாடம் பயன் ப்டும் பல சாதனங்க்களில் கம்ப்யூட்டர் மறைந்துள்ளது. வாஷிங்  மெஷின், செல்போன், பல விளையாட்டு சாதங்க்கள், டெலிவிஷன் என்று பட்டியல் வளார்கிறது.

ஆப்பரேட்டிங் சிஸ்டம்

ஒரு உயிர் அல்லது ஆன்மா மாதிரி

ஆப்பரேடிங் சிஸ்டம் மற்றும் கம்ப்யூட்டரில் இயங்கும் அல்லது கம்ப்யூட்டர் ஹார்டுவேரை இயக்கும் சாப்டுவேர் எல்லாமே ஒரு ஆன்மிக சமாசாரம் போன்றது.

ஆன்மா ஆண்டவன் எல்லாம் ஆன்மிக சம்பந்தமான விஷயங்ள் இல்லையா? மனிதனின் புலங்களுக்கும் சிக்காது. ஆனால் அதில்லாமல் ஒரு அணுவும் அசையாதுபதை நாம் அறிவோம் என்,  இல்லையா?

இதை   ஒட்டு மொத்தமாக  மென்பொருள் என்று அழைப்பார்கள்.

 மிகவும் சிக்கலானது  கம்ப்யூட்டர் ஹார்டுவேர் .  இதன் சக்தியை முழுமையாக பயன்படுத்த பல கட்டங்களாக மென்பொருட்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இதில் முதல் கட்டம், மிகவும் சக்திவாய்ந்த ஒன்று,  ஹார்டுவேருடன் நேரடியாக தொடர்புகொண்டு இயக்கும் மென்பொருள் ஆப்பரேடிங் சிஸ்டம்.

மற்ற எல்லா மென்பொருளும் இந்த மென்பொருள் மூலமாகவே இயங்க்குகிறது.

நம்மைப்போன்ற கம்ப்யூட்டர் பயmனாளிகளும் தொடர்பு கொண்டு நமது தேவைகளை  எளிதில் பூர்த்தி செய்துகொள்வது  இந்த ஆப்பரேடிங் சிஸ்டம்  மூலமாகவேதான்.

(1) single tasking

ஒரு கப்ம்பூட்டரில் ஒரு சமத்தில் ஓரே ஒரு புரோகிறாம் மட்டும் ஓட்டக்கூடிய வகயில் அமந்துள்ளது

(2) Multi tasking

பல புரோகிராகம்கள், சில் துளிகளாக, ஒரே சமயத்தில் ஓட்டவல்லது.

(3) Multi user

பல பயனாளிகள் ஒரே சமயத்தில், கம்ப்யூட்டரோடு நேரடி தொடர்புகொண்டு தாங்களிக் புரோகிராம்களை தயார்செய்வதும் ஓட்டுவதும் எளிதானவகையில் தயாரிக்கப்பட்டது.

(4) Distributed

சிக்கலான விஞ்ஞான தேவைகளில் ஒரு புரோகிராம்  ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள பல கம்ப்யூட்டர்களில் இயக்கப்படுவது.

(5) Embedded

அன்றாட பயன்பாட்டுக் கருவிகளில் ஒளிந்திருக்கும் மிகச் சிறிய உருவத்திலான கம்ப்யூட்டர்களுகென்று உருவாக்கப்பட்டது.

(6) Real Time

மோட்டர் வாகனங்கள், விமானங்கள், ஏவுகளாய்கள், ரோபோ, தொலை தொடர்பு சாதனங்கள் உற்பத்தி இயந்திரங்கள்  போன்றவைகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் இத்தகைய ஆப்பரேடிங் சிஸ்டம் ஓடுகிறது.

இந்த புத்தகத்தில் நாம் படிக்கப்போவது, யுனிக்ஸ் என்னும் ஒரு மென் பொருள். இதை multi tasking – multi user வகையைச் சேர்ந்தது.

License

Icon for the Public Domain license

This work (தமிழில் யுனிக்ஸ் by nat123; நடராஜன் நாகரெதினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book