"

இந்தப் புத்தகம், மிலிட்டரி கந்தசாமி அண்ணனும் ஆசிரியரும் நடத்தும் ஒரு உரையாடலாக எழுதப்பட்டுள்ளது.

கந்தசாமி அண்ணன் ஒரு அறிமுகம்

கந்தசாமி அண்ணன் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, பத்து கிளாஸ் வரை கிராமத்தை அடுத்துள்ள பள்ளிகளில் படித்தார். பின், மிலிட்டரியில் சேர்ந்து, இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்து ரிட்டயராகி, என்னுடன் இணந்து பல புத்தகங்கள் உருவாக பக்கபலமாக இருந்திருக்கிறார்.

கந்தசாமி அண்ணன் ஒரு கற்ப்பூரம் என்eந்றுபார்களே, அந்த வகை. எதையும் மிக எளிதாக புரிந்து கொள்வார். புத்தகங்கள் படிப்பது அவர் தவறாது செய்யும் தினசரி வேலை. பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், ஆன்மிகம்  விஞ்ஞானம் என்று அவர் விரும்பிப் படிக்காத தலைப்பே இல்லை எனலாம்.

கந்தசாமி அண்ண்ன். சமீபத்தில் கம்ப்யூட்டர் தொடர்பான பல புத்தகங்களைப் படித்து வருகிறார்.

கந்தசாமி:  இதைப் படிச்சவங்க யுனிக்ஸ் – லைனக்ஸுலே எந்த அளவு அறிவை அடையலாம்?

நடராஜன்;    அமெரிக்காவிலுள்ள  கனிபோர்னியா மகணத்தில்     உள்ள      பெர்கலி  பல்கலைக் கழகத்தில்  முதன் முதலில் கட்டமைகக்ப் பட்ட  யுனிக்ஸிலிருந்து,  இன்று புழக்கத்திலுள்ள ஐந்து வகையும் பல லட்சம் விலையில் விற்கப்பட்டது. அதிலும் பல முன்னேற்றங்கள் / மாற்றங்கள் வந்துள்ளன.

யுனிக்ஸ் போன்ற லைனக்ஸ் என்னும் இலவச ஆப்பரேடிங்க் சிஸ்டம், எல்லாவற்றிலும், கணக்கில்லாத பல முன்னேற்றங்கள் வந்துள்ளது.

கந்தசாமி;  ஒரு உதாரணம் சொல்லுங்க;

உதாரணமாக முதலில் வடிவமைக்கப்பட்ட யுனிக்ஸிலே, இண்டர்பிராசஸ்   கம்யூனிகேஷன்   (IPC)   என்னும்   ஒரு முக்கிய ஏற்பாட்டில், பைப்ஸ் என்ற ஒன்று மாத்திரமே இடம்  பெற்றிருந்தது.

இன்று யுனிக்ஸ் மற்றும் லைனக்ஸ் ஒரு  கடல்.  அவை  முழுவதும்  இங்கே  விளக்கப் படவில்லை. ஆனால், அவற்றை பிறர் உதவி இல்லாமல் அறிந்து கொள்ள ஓரளவு ஆழமான அடிப்படை தேவை. அதை மாத்திரம் இங்கே தருவோம்.

இதில் பெற்ற விளக்கங்களைக் கொண்டு எல்லா ஆபரெடிங் சிஸ்டம் குறித்த புத்தகங்க்களை பிறர் உதவியில்லாமல் படித்து அறியலாம். இந்த புத்தகத்திற்கு இணையாக வேறு ஒரு புத்தகம் எழுதப்படவில்லை என்றே சொல்லலாம்.

 

பின்   வந்த   யுனிக்ஸிலே,   பைப்ஸ்,   ஃபிஃபோ,   மெசசெஜ் கியூஸ்,   செமாஃபோர்,   சாக்கெட்ஸ்   என்று   ஐந்து   வித ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவை யுனிக்ஸின் சக்தியை அதிகரித்திருக்கிறது.

இந்தப் புத்தகம் யுனிக்ஸ்-லைனக்ஸ் குறித்த அடிப்படைகளை  பிசிரில்லாமல்   கற்கவும், அதில் சக்திவாய்ந்த ஒரு பிரிவான, யுனிக்ஸ் இன்டர்னல்ஸ் அல்லது யுனிக்ஸ் புரோகிராமிங் என்ற அறிவை அடந்து, ஒரு சிறந்த சிஸ்டம்ஸ் புரோகிராமராக அல்லது சிஸ்டம்ஸ் எஞ்சினிரியராக உயர ஒரு பலமான அடித்தளமாக அமையும்.

ரியல் டைம் என்னும் வகை ஆப்பரேடிங்க் சிஸ்டம், எம்பெட்டட் சிஸ்டம் ஆகியவற்றை திறமையுடன் கையாள இந்த புத்தகத்தில் தந்த விளக்கங்கள் பயன் தரும்.

License

Icon for the Public Domain license

This work (தமிழில் யுனிக்ஸ் by nat123; நடராஜன் நாகரெதினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book