பாரம்பரிய முறையில் யுனிக்ஸ் பயிற்சி
கந்தசாமி; நீங்க முறையான யுனிக்ஸ் இண்டெர்னல்ஸ் பயிற்சி பெற்றீங்களே அதை விளக்கிட்டு நாம சொல்ல வேண்டியதை சொல்லிடலாம்.
நடராஜன்: பழய முறையை அறியும்போது, புதியதின் அருமை புரியும். பல காலமாக யுனிக்ஸ் பயிற்சியாளர்கள், வகுப்பறையில், அளிக்கும் பயிற்சி முறை கீழே கண்டவாறு அமையும்.
ஒரு பயிற்சியாளர் விவரிக்கிரார்.
யுனிக்ஸ் ஒரு சிஸ்டம் சாப்ட்வேர். அதன் உள்ளே ஐந்து மாட்யூல்கள் உள்ளன. (இவைகள் என்ன என்ன என்று வௌ¢ளைப் பலகையில் எழுதப்படும்). அவைகள் :
(1) பைல் சிஸ்டம் (2) பிராசஸ் மானேஜர் (3) மெமொரி மானேஜர் (4) ஐ ஓ மானேஜர் (5) நெட் வொர்க்கிங் மாட்யூல்.
முதலில் பைல் சிஸ்டத்திற்கு வருவோம் என்பார்.
ஒரு காலத்தில் பெரும்பாலும் பைல் சிஸ்டத்தை, ஃப்ளாப்பி டிஸ்க் அல்லது ஹார்ட-டிஸ்குலே தான் இன்ஸ்டால் செய்வோம்.(உட்கார வைப்போம்).
ஒரே டிஸ்குலே (Disk) ஒன்று அல்லது அதற்கு மேலும் பல பைல் சிஸ்டங்களைப் போட்டுக்கலாம், என்கிறார் பயிற்சியாளர்.
(பைல், பைல்-சிஸ்டம் என்றால் என்ன? அதில் எத்தனை வகை? பல ஃபைல் சிஸ்டம் போட்டால் என்ன சிறப்பு? ஏன் ? எப்படி ? அது இல்லாவிட்டால் என்னவாகும் என்ற எல்லா விளக்கங்களும் பயிற்சி பெறும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்).
இவை தெரியவில்லையானால் அடுத்த சில நிமிபுடங்களில் உறக்கம் நம்மைத் தேடிவரும்).
ஆனா டிஸ்குலே பல பைல் சிஸ்டத்தைப் போட்டாலும் ஒண்ணே ஒண்ணுலே மாத்திரம் தான் ஆப்பரேடிங் சிஸ்டத்தை வச்சிருக்கும் என்று பயிற்சியாளர் சொல்ல, நாமும், அப்படியா? சரி என்கிறோம்.
பைல் சிஸ்டட்துலே ஆப்பரேடிங் சிஸ்டம் வச்சிருக்கிற இடத்துக்குப் பேரு. பூட் பிளாக் (Boot Block). (அப்படியா என்றோம்?)
இதை அடுத்து பைல் சிஸ்டத்தைப் பற்றிய மற்ற விளக்கங்கள் கீழே கண்டவாறு தொடரும். பைல் சிஸ்டம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். என்றும் சொல்வார்கள்.
அவை (1) பூட் பிளாக், (Boot block) (2) ஐநோடு பிளாக், (inode block) , (3) டேட்டா பிளாக் (data block) (4) சூபர் பிளாக் (super block)
அடுத்தார்ப் போல தொடருவது, ஐநொடு டேபிள் (inode table) என்பார்கள். அதில் எழுத ஒவ்வொரு டேபிளிலும் 13 வரிகள் உண்டு. இவற்றில் பத்து நேரான வரிகளும், மிகுதியான மூன்று வரிகள்??? மறைமுக வரிகளாக இருக்கும்.
(ஐநோடுன்னா என்ன? நேரடி, மறைமுக வரிகள் எதற்காக)? சொல்லப்படுவதில்லை). இந்த கட்டத்திலே பலரை தூக்கம் ஆட்கொள்ளும்.
உறக்கம் கலைந்து என்ன நடக்கிறது என்று பக்கத்துப் பையனைக் கேட்டால், அவரோ, ஏதேதோ சொன்னாங்க ஒண்ணும் புரியல்லே என்கிறார்.
பலர் உறங்குவதை உணர்ந்த பயிற்சியாளராக வந்த பையன், டீ- பிரேக் என்று அலர, வகுப்பு கலைகிறது.
பயிற்சியாளர் சொன்னதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, அரை குறையா புரிந்து கொண்ட சிலர், கூட்டமாக பயிற்சியாளரைச் சுற்றி முற்றுகையிட்டு கேள்விகளால் துளைக்க மற்றவர்கள் காண்டீனை நோக்கி விரைவார்கள்.
என்னைப் போன்ற பலர் வகுப்புக்குத் திரும்புவதில்லை. யுனிக்ஸ் ஒண்ணும் புரியல்லே. ஆனா இப்படி யுனிக்ஸ் படிச்சா இந்த ஜென்மம் முழுக்கப் பாடுபட்டாலும் பயன் இல்லை என்ற உண்மை மாத்திரம் சுத்தமாகப் புரிந்தது.