யுனிக்ஸ் அறிவை அடைய
வரிவடிவங்களின் (Patterns) உதவி
கந்தசாமி: வரிவடிவங்கள் புதிய தத்துவங்களை, புதிய விஞ்ஞான உண்மைகளை அறிந்துகொள்ள உதவும் என்று சொல்லுவீங்க. அதை வாசகர்களுக்கும் விளக்கமா சொல்லிடலாமா?
நடராஜன்: இயற்¢கையிலும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில், நாம் அறிந்த அல்லது உணர்ந்த ஒரே வரிவடிவங்களைக் கொண்ட நிகழ்வுகளைக் கவனித்திருக்கலாம்.
புதியதாக அறிந்து கொள்ள முயற்சி செய்யும் நிகழ்வுகளில் மற்ற (முன்னமே அறிந்த) பல நிகழ்வுகளின் வரிவடிவங்களை அல்லது அதன் சாயல்களைக் கண்டு உணர்வது.
அறிந்த வரிவடிவங்களை உதாரணமாகக் காட்டி அதே வரிவடிவமுள்ள புதிய அறிவை விரைவில் அடையலாம். ஒரு உதாரணம்.
கந்தசாமி; அறிவை அடைவதை சுருக்கமாக கற்பது என்போம். படிப்பது, கேட்பது எல்லாமே றிவாக மாறுவதில்லை. கற்பதில்¢ பல கட்டங்கள் உண்டு. முக்கியமாக, ஒவ்வொரு கட்டத்திலும் பலவித செயல் முறைகள் (process) உண்டு. அவை என்னென்ன என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கோம்.
என்றும், எவருக்கும், அவர் அடையும் அறிவின் அளவு அறிவதன் செயல்முறைகளின் திறனைச் சார்ந்திருக்கும். இல்லையா? என்ன கோளாருன்னு யாருக்கும் சொல்லத்தெரியல்லே.
நடராஜன்: கல்வித்திட்டத்தில் நாம் அறிந்த கல்வி பெறும் முறை (process) என்ன? படிப்பது அல்லது கேட்பது. பின்னர் படித்ததை அல்லது கேட்டதை நினைவில் ஏற்றி, தேர்வுக்குப் பின்னர் அவற்றை மறந்துவிடுவது என்பது.
இது பட்டம் கிடைக்க உதவினாலும் அறிவை அடைய உதவாது, பின் என்ன தான் செய்யவேண்டும்.
படித்ததில் இருந்து அறிவை அடைவதற்கு இணையாக உணவை உண்டு உடலை வளர்ப்பதற்கு இணையாகச் சொல்லலாம். இதை நீங்க விளக்குங்க கந்தசாமி அண்ணன்.
கந்தசாமி; நாம் சாப்பிடும் உணவு முழுவதும் சக்தியாக மாறி உடலில் சேர்வதற்கு பல படிகளாக, செயல்பாடுகள் வாயில் இட்ட உணவை பற்களினால் அறைப்பது. அறைத்தை உமிழ் நீரில் கலந்த் சிறு குடல் பெருங்குடல் இறைப்பை ஆகியவற்றில் படிப்படியாக அடைய வைப்பது. அவை ஒவ்வொன்றிலும் அமிலங்கள் சுரந்து உணவிலிருந்து பலவித தாதுப் பொருட்களைப் பிரித்தெடுத்து உடலின் பல பாகங்களை அடைய வைப்பது.
இந்த பல கட்ட சீரணிக்கும் முறையில் குறை வரும்பொழுது, உண்ட உணவில் சத்து முழுவதாக உடலில் சேருவதில்லை.
(கல்வியினால் பயன் அடையும் முறைகளை, விளக்கமாக அறிவாளராகவும் பேரறிவாளராக மாறுவது எப்படி என்ற எனது புத்தகத்தில் படிக்கலாம்).
கல்வியாளர்களும் கற்பவர்களும் மனதில் கொள்ளவேண்டிய மாபெறும் உண்மை.
அண்டமும், அண்டத்தில் காணும் பல நிகழ்வுகளும் ஒரு குறிப்பிட்ட தினசரி வாழ்க்கையில் நாம் காணும் நிகழ்வுகளின் பல வரிவடிவங்களை ஒட்டி அமைந்திருப்பதைக் காணலாம்.
பல. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் மெய்ஞான விளக்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதை சீரணித்து மனதில் கொள்ளத் தடையிருந்தால் அடுத்து வரும் உதாரணங்கள் அவற்றை எளிதாக்கும். இப்பொழுது. உதாரணங்கள் மற்றும் உவமானங்களில் நம்மைச் சுற்றிலும் காணும் நிகழ்ச்சிகளின் வரிவவைங்களின் காணும் ஒற்றுமைகளை ஆதாரமாகக் கொண்டு, யுனிக்ஸ் படிக்கப் போகலாம் வாங்க.
யுனிக்ஸ், ஒரு மல்டி யூசர், மல்டி டாஸ்க்கிங் ஆப்பரேடிங் சிஸ்டம் என்று சொல்லப்படுகிறது. ஏன்?
யுனிக்ஸ் உருவாகும் முன் உருவான கம்ப்யூட்டர்கள் செயல்பட்ட விதம், தெரு முனனயில் காணப்படும் மாவு அரைக்கும் இயந்திரம் செயல்படுவது எப்படி?ஒவ்வொரு பயனாளியும், ஒருவர் பின் ஒருவறாக வரிசையில் நின்று, தாங்கள் கொண்டு வந்த தானியங்களை ஒருவர் பின் ஒருவறாக கொடுத்து, அறைத்து, பயனடைவார்கள்.
யுனிக்ஸ் போன்ற ஒரு ஆப்பரேடிங் சிஸ்டம் உபயோகத்தில் வரும் வரை, கம்ப்யூட்டர் பயனாளிகள், மாவு அரைக்கும் கடையில் பலர் வரிசையில் நின்று பயன் பெறுவதைப் போல, தங்கள் புரோகிராமை ஒன்றன் பின் ஒன்றாகக் கம்ப்யூட்டரில் கொடுத்து பிராசஸ் செய்து பயனடைந்தார்கள்.
ஒரு சில நிமிட வேலைக்காக சில மணி நேரங்கள் காத்திருக்கும் கொடுமை, காத்திருந்தவருக்கே தெரியும். இந்த குறையைத் தீர்க்க பெர்கலி பேராசிரியர்கள் வழி வகுத்தனர். எப்படி? சூடோ-கான்கரண்ட் பிராசஸிங் என்னும் யுக்தியை பயன் படுத்தினார்கள்
யுனிக்ஸ் செயல்பாட்டில்
திருப்பதி மொட்டையில் சாயல்கள்
அமெரிக்காவில் உயர் கல்விக்குத் தேர்ந்து எடுக்கப்பட்ட செய்தி கேட்டு திருப்பதியில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்தார் திருச்சி சாமிநாதன்,
அன்கே அவருக்குக் கிடைத்த அனுபவத்தை யுனிக்ஸ் வடிவமைப்பில் ஒரு அருமையான ஆலோசனையை சொன்னாராம். அதைப் பேராசிரியர்கள் பயன் படுத்தியதாக நம்பமுடியாத செய்தி ஒன்று தெரிவிக்கிறது..
இதன் விளக்கம் என்னவென்றால், திருப்பதியில் வேண்டுதல் செய்து தலையை மழித்துக் கொள்ள கல்யாண கட்டம் என்ற ஒரு இடம் உண்டு. அங்கே பல நாவிதர்கள் பக்தர்கள் தலைகளை மொட்டை (??) அடிக்கக் காத்திருப்பார்கள்.
ஒவ்வொரு நாவிதர் முன்பும் பக்தர்கள் ஒரு வரிசையில் அமர்வார்கள்.. வரிசையில் உள்ளவர்களின் தலைகள் ஓவ்வொன்றாக, ஆனால் சிறிதளவே மழிக்கப்படும்..
திருப்பதியில் இரண்டே இரண்டு சுற்றிலே மொட்டை அடிப்பது முடிவு பெறும். ஆனால். யுனிக்ஸ் ஆப்பரேடிங் சிஸ்டம் உள்ள ஒர் கம்ப்யூட்டரில் பயனாளிகளின் பிராசஸ்களை பல சுற்றுகளாக முடிவு பெறச் செய்யும்.
ஓவ்வொரு சுற்றிலும், ஒவ்வொரு பிராசஸுக்கும் சில நூறு மில்லி செகண்ட் அளவிலான நேரமே ஒதுக்கப் படுகிறது.
மல்டி டாஸ்கிங்
பல கிராமங்களில், இங்கே விவரிக்கப்பட்டது போல ஓட்டல்கள் காணப்படும். பெரிய ஓட்டல்களைக் கண்டு பழகிய நமக்கு இந்தவகை ஓட்டல்கள் சற்று வேடிக்கையாக இருக்கும். இதிலிருந்து யுனிக்ஸ் பல யுக்திகளைக் கையாயாடியுள்ளது என்று நம்புவதற்கு இயலாதல்லவா? முதலில் கதையைப் பார்ப்போம்.
மணி அய்யர் ஓட்டல்
ஒரு வாடிக்கையாளர் இதைப் போன்ற ஒரு ஓட்டலில் நுழையும்போது, தல்லாளி தனது மேசையிலிருந்து நுழைவாயில் வரை வந்து வரவேற்பார். அப்போது அவர் வரவேற்பாளாராக மாறுகிறார்.
வாடிக்கையாளர் அமர்ந்ததை அடுத்து, தான் ஒரு (ஆர்டர் எடுத்துக் கொள்ளும்) சர்வராகவும் மாறிடுவார்.
அடுத்து சமலறையில் நுழைந்து சமையற்காரராக அவதாரம் எடுத்து உணவு தயாரிப்பார்..
உணவு தயாரானதும் திரும்பவும் சர்வராக மாறி, வாடிக்கையாளார்களுக்கு பரிமாருவார். அடுத்ததாக,. வாடிக்கையாளர் சாப்பிட்டபின் அவர்கள் கையில் பில்லைக் கொடுத்துவிட்டு தனது மேசையிலே அமருவார்.
காசை வாங்கி கல்லாவில் போட்டு காஷியராக மாறிடுவார். கடைசியில், ஒரு துப்புரவுத் தொழிலாளியாக மாறி மேசையைச் சுத்தம் செய்வார்.
இறுதியில் அடுத்த வாடிக்கையாளர் வரும் வரை முதலாளியாக மாறித் தனது மேசையை அடைவார்.
ஒரே மனிதர் பல மனிதர்கள் செய்யும் வேலையைச் செய்வதைக் கவனியுங்கள்.
இந்த உண்மை நிகழ்வின் அடிப்படையில் ஒரே பிராசஸரரைக் கொண்டு பல வேலைகளை செய்து முடிக்ககலாம். இப்போது வேறு ஒரு நிகழ்வைக் கவனிக்கலாம்.
அம்மா ஒரு மல்டி டாஸ்கிங் இயந்திரமோ?.
சாதாரணமாக ஒரு நகரத்தில் பெரும்பாலான மத்திய வருமானமுள்ள வீடுகளில் காலை வேளைகளில் காணக்கூடிய ஒரு காட்சி .
பள்ளிக்குச் செல்லத் தயாராகவேண்டிய பிள்ளைகள் அலுவலகம் செல்லத் தயாராகவேண்டிய கணவன் (சில வீடுகளில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லவேண்டும்). காலை ஆறு மணியிலிருந்து எட்டு மணிக்குள் நடக்கும் அதிசயங்கள் எவ்வளவு?
பற்களைத் துலக்கியவுடன். ஒரு கப் காபி அல்லது டீ சூடாக வயிற்றில் தள்ளாவிட்டால் பலருக்கு உலகமே அசைவதில்லை.
பால்காரரின் வருகை தந்த உடனே காபி அல்லது டீ தயாரிப்பில் துவங்கி செய்தித்தாள் வருகை, சலவைக்காரர் வருகை என்றும் இவை ஒரு பக்கம் நடந்தேற, மதிய உணவுக்குத் தயார் செய்வதிலிருந்து, காலை சிறுண்டியும் தயாரித்து. பிள்ளைகளுக்கு குளியல் செய்வித்து, யுனிபாரம் தேடித் தந்து சிற்றுண்டியை பிள்ளைகளின் வயிற்றில் ஒரு மாதிரியாகத் திணித்து மதிய உணவைப் பொதிந்து தந்து, கணவனுடைய காலைத் தேவைகளைக் கவனித்து. தானும் தயாராகி, அனைவரும் 8 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் வரை
மல்டி டாஸ்கிங் என்று அழைக்கக் காரணம் என்ன?
இந்த முறையில, இரண்டு மணி நேரத்தில் பல வீடுகளில் நடைபெரும் இதே செயல்பாடுகளை, ஒன்றன் பின் ஒன்றாகச் செய்து முடிக்கச் சுமார் நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள் ஆகும். இதை யாரும் எளிதில் கணக்கிடலாம்.
இது எப்படி சாத்தியமாகிறது?
இந்த குறைந்த நேரத்தில் இத்தனை வேலைகளைச் செய்து முடிப்பது எப்படி சாத்தியம் ஆகும்.? மல்டி டாஸ்கிங் என்னும் உத்தி, ஒரே நேரத்தில் ஒன்றிற்கு அதிகமான செயலை செய்ய உதவுகிறது. எப்படி?
- சில வேலைகளைத் துவக்கிவிட்டால் அது நிறைவாகும் இடைவேளையில், வேறு சில வேலைகள செய்துவிடலாம். உதாரணமாக; அடுப்பின் ஏற்றிய குக்கரில் சோறு மற்ற உணவு வகைகள் தயாராகும் இடைவெளியில் குழந்தைகளை குளிக்க வைத்து, பள்ளிக்குத் தயார் செய்யலாம்.
- குக்கரில் விசில் சப்தம் வரும் வரை, அல்லது ஒரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை, துவங்கிய சில வேலையைப் பார்வையிட்டால் போதுமானது.
- இரண்டு அல்லது மூன்று அடுப்பைக் கொண்டு தனித்தனியே பல சமையல்கள் ஐட்டங்களைத் தயாராக்கலாம்.
- இவற்றின் நடு நடுவே சலவைக்காரர் பால்காரர் போன்ற கதவைத் தட்டும் மக்கள், சில நிமிடங்கள் காத்திருக்க தயாராக இருப்பார்கள.
- வாஷிங் மெஷின் வேலை முடிந்தவுடன் தானாகவே அணைந்துவிடும். இதற்குத் தனியான கவனம் தேவை இல்லை.
பொதுவாக துவக்கி வைத்த வேலைகள் முடியும் முன்னால் இல்லத்தரசி வேறு பல வேலைகயைச் செய்து முடிப்பது இவ்வித செயல்பாடுகளின் தனித்தன்மை. இதுவே மல்டி டாஸ்கின் மகிமை.
மொத்த டீம்-யுனிக்ஸ் அங்கத்தினர்களும் கைதட்டி கிட்டுவின் யோசனையை வரவேற்றார்கள். அடுத்ததாக, இந்த யோசனையை நிரைவேற்றுவதில் எனென்ன கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கலந்தோசித்து அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்று பேராசிரியர் கூற கூட்டம் அன்று கலைந்தது.
அடுத்த வார டீம்-யுனிக்ஸ் கூட்டத்தில் பல அங்கத்தினர்கள் கிட்டுவின் யோசனையை ஒட்டி தினம்தோரும் காணும் காட்சியிலிருந்து பல புதிய யோசனைகளை உதிர்த்தார்கள்.
குழுவின் தனைவரான பெரிய பேராசிரியர் டீம்-யுனனிக்ஸ் அங்கத்தினர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு பொருப்புகளைக் கொடுத்தார்.
ஒவ்வொரு குழுவும் தங்கள். குழுவுக்குள்ளும் மற்ற குழுக்களுடனும் ஆலோசனை செய்த பின்னர், முடிவாக ஒவ்வொரு குழுவும் அவர்கள் யோசனைகளைத் தெரிவிக்க வேண்டும் என்கிறார். அந்த முடிவை அனைவரும் வரவேற்றார்கள்.
குழு எண் 1: சி பி யூ செய்ய வேண்டிய வேலை, அதன் மற்ற தேவைகள்,
குழு எண் 2: பயனாளிகளின் புரோகிராம்களைக் கையாள்வது.;
குழு எண் 3: மெமொரியைக் கையாளும் முறைகள்.
குழு எண் 4: டிஸ்க் மற்றும் ஐ ஓ கருவிகளைக் கையாள்வது..
குழு எண் 5: பயனாளிகளுக்கான உதவி மற்றும் இதர புரோகிராம் தேவைகள்.
குழு எண் 6: மேலே குறிப்பிட்ட ஐந்து குழுக்களை இணைப்பது.