மெமொரி மானேஜர்
கந்தசாமி; மெமொரியிலே எதேவது எழுதினா அது அப்படியே இருக்கும். அதை மானேஜ் செய்ய ஒரு பெரிய புரோகிராம் அவசியமா?
நடராஜன்; மெமொரியை மானேஜ் செய்வதற்கு பல விஷயங்கள் உள்ளன. இப்போ, மெமொரி மானேஜ்மெண்ட் விவகாரத்தை ஒரு உதவிப் பேராசிரியர் சொல்வதைக் கேடகலாம்.
மெமொரி மாடூலின் குழுத்தலைவர், உதவிப் பேராசிரியர் லூ, அவர்கள் இவர் பெயர் சைனாக்காரர் போல இருன்தாலும் அவர் ஒரு தென்னின்தியர்.
அவருடைய உண்மைப் பெயர், வெங்கடேஸ்வரலூ. ஆந்திராவிலிருந்து அமெரிக்கா போன பிறகு தன் பெயரை லூ என்று சுருக்கிக் கொண்டுள்ளார்.
அவர், தன் குழுவின் மெமொரி மாடுல் கட்டமைப்பு தொடர்பாபான பரிந்துரைகளை டீம்-யுனிக்ஸ் அங்கத்தினர்களுக்கு விளக்குகிறார்.
ஒரு தொழில் நிறுவனம் அல்லது சேவை நிறுவனம் இயங்க, சேவை தருவோர் மற்றும் சேவை பெறுவோர் சந்திக்க ஒரு இடம் தேவைப் படுகிறது இல்லையா. யுனிக்ஸின் சேவைக்கு மொமொரிதான் அந்த இடம்.
எனது குழு அங்கத்தினர்கள் பல்வேறு சேவை நிறுவனங்களுக்குச் சென்று, அங்குள்ள செயல்பாடுகளையும், அதற்கான கட்டுமான வசதிகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மெமொரி கட்டுமானத்தை வடிவமைத்தார்கள்.
முதல் கட்டமாக, மெமொரியை இரண்டாகப் பிரிப்பது. பிரித்ததை ஒன்றை யூசர் (பயனாளிகள்) இருக்கும் இடமாகவும் இரண்டாவதை கெர்னல் (ஆப்பரேடிங் சிஸ்டம்) அமரும் இடமாகவும் பிரிக்கப்படும்.
இதைக் கேட்ட இந்திய மாணவர்கள் (தெலுங்கானா, சீமாந்திரா போல … என்று கேலி செய்ய) விளக்கம் தொடர்ந்தது.
யூசர் புரோகிராம்கள், யூசர் ஸ்பேஸ் என்னும் இடத்திலும் கெர்னல் அல்லது ஆப்பரேடிங் சிஸ்டம், கெர்னல் ஸ்பேசிலும் வைக்கப்பட்டு, அங்கே சி-பி-யூ அந்த புரோகிராம்களை தேவைக்கு ஏற்றவாறு எக்சிக்யூட் செய்யும்.
அலுவலகம் ஒன்று. ஆனால் பணியிடங்கள், இரண்டு..
ஓட்டல்கள் வங்கிகள் தபால் அலுவலகம் பெரிய மருத்துவ நிலையங்கள் போன்ற வித விதமான சேவை நிலையங்களில் நாம் ஒரு முக்கிய ஏற்பாட்டைக் கவனிக்க வேண்டும்.
சேவைக்குக் காத்திருக்கும் மக்கள் அமருமிடமும் தனியாகவும் சேவைதரும் அலுவலர்கள் அமர்ந்து வேலை செய்யுமிடமும். தனித்தே இருக்கும். சேவை தரும் இடத்தில், அலுவலர்களுக்கு இருக்கைகள் சேவைதரத் தேவையான பைல்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் பத்திரமாக வைக்கப் பட்டிருக்கும்.
பாங்க் தபால் அலுவலகம், ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் இடம் போன்ற எல்லா சேவை நிறுவனங்களிலும், அலுவலர் பணி செய்யும் இடங்களில், பயனாளிகள் (customer) நுழையத் பயனாளிகள் நுழையத் தடை
அன்னியர்கள் உள்ளே வரக்கூடாது. என்ற ஒரு அறிவுப்புப் பலகை ஒவ்வொரு ஓட்டலின் சமையல் அறையின் கதவில் தவராமல் காணப்படும்.
யூசர் ஸ்பேஸ் மற்றும் கெர்னல் ஸ்பேஸ்
சேவை நிறுவனங்களில் சேவை தரும் அலுவலருக்கான இடமும் பயனாளிகள் காத்திருன்து சேவை பெற உள்ள இடமும் தனியாக வரையறுக்கப்பட்டு பிரிந்தே இருக்கும்.
யுனிக்ஸ் மெமொரி மானேஜ்மெண்ஜி மாடூல் டிசைன் செய்தவர்கள் இதன் பயனை உணர்ந்து, யூசர் புரோகிராம்களை வைக்க யூசர் ஸ்பேஸ் என்று ஒரு எல்லையையும் அதற்கப்பால் கெர்னல் ஸ்பேஸ் என்று ஒரு பகுதியையும் வரையறுத்தார்கள். யூசர் புரோகிராம்கள் தங்கள் எல்லையை கடந்து கெர்னல் ஸ்பேஸ் உள்ளே கடக்காமல் பார்த்துக் கொள்ள வழிவகுத்தார்கள்.
யூசர் ஸ்பேஸில் ஓட்டப்படும் புரோகிராகளுக்கு, ஓடும் போது. பல கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், கெர்னல் ஸ்பேஸில் (கெர்னல்உரோகிராம்) ஓடும் போது அதற்கு அனேக சலுகைகள் உண்டு.
உதாரணமாக நம் நாட்டில், மந்திரிகள், பிரதான மந்திரியும் அவரைத் தொடரும் கார்கள், சாலைகளில் செல்லும்போது (இவர்கள் பயணத்திற்கு சாலையில் எந்த இடையூரும் வராமல்), எல்லா டிராபிக் விளக்குகளும் அணைக்கப்பட்டு மற்ற வண்டிகள் (ஆம்புலன்ஸ் உள்பட) சாலையை கடக்காமல் பல நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
ஆனால் நாட்டின் சாதாரண மக்களுக்கும் பாதசாரிக்கும், இதே சலுகை, கிடைக்காதல்லவா? இந்த வேறுபாடுதான் கெர்னல் என்றாலும், தேவைக்கு ஏற்றவாறு, சி பி யூ யூசர் ஸ்பேசில் உள்ள புரோகிராம்களையும், கெர்னல் ஸ்பேஸ் புரோகிராம்களையும் மாற்றி மாற்றி ஓட்டுகிறது.
மெமொரியில் இடம் போதவில்லையானால்?
கம்ப்யூட்டரின் மெமொரியில் இருக்கும் புரோகிராம் மட்டுமே (சில வகை ஃப்ளாஷ் மெமொரிகளைத் தவிர்த்து) சி.பி.யூ ஓட்ட முடியும்.
மெமொரியில் உள்ள யூசர் ஸ்பேசில், கம்ப்யூட்டரில் ஓட்டப்படவேண்டிய யூசர் புரோகிராம் ஒவ்வொன்றாக வரிசையாக வைக்கப்படும்.
பல சுற்றுக்களில் முழுவதாக ஓட்டப்பட்டபின், முழுமை பெற்ற பிராசஸ்கள் மெமொரியிலிருந்து அகற்றப்படும்.
புரோகிராம்கள் மெமொரியிலிருந்து ஓட்டப்படும். டிஸ்க் போன்ற வெளி டிவைஸ்களிலிருந்து நேடியாக ஓட்டுவது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. பல யூசர்கள் ஒரே நேரத்தில் தங்கள் புரோகிராமை ஓட்டும் மெமொரியில் இடம் போதாமல் போகலாம். அப்போது இரண்டு வகை ஏற்பாடுகளில் ஏதெனும் ஒன்று பயன் தரலாம்.. ஒன்று டிஸ்க் ஸ்வாப் மற்றது வர்சுவல் மெமொரி.
டிஸ்க் ஸ்வாப் மற்றது வர்சுவல் மெமொரி.
நம்ம வீட்டிலே ஒரு நல்ல காரியம் நடக்கப் போகுது, வீடு சிறியது. கூடுதலாக நாலு சொந்தக்காரர்கள் வருகிரார்கள். வசதியானவங்க ஒரு ஓட்டல் அறை ஒன்றை எடுத்துப்பாங்க. இல்லாதவங்க அடுத்துள்ள நண்பர் அல்லது உறவினர் வீடுகளில் விருந்தினரை இரவில் தங்க வைத்து, மறு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வார்கள். அப்படித்தான் மெமொரியிலே இடம் போதாது என்ற ஒரு நிலை வரும்போது, ஹார்டு-டிஸ்கில் ஒரு இடம் ஒதுக்கி பின் மெமொரிக்கு கொண்டு சென்று அங்கே பிராஸ் செய்யப்படும். இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ஸ்வாப்பிங், மற்றது பேஜினேஷன்.
வர்ச்சுவல் மெமொரியில் சேமிக்கவும், அப்படி சேமித்ததை மெமொரியில் சேர்த்து பயன்படுத்த ( நேரடியாக மெமொரியில் சேர்த்ததை பயன்படுத்துவதை விட) அதிக நேரம் செலவாவாகும். மேலும் இதன் விவரத்தை கூகுள் உதவியுடன் தெரிந்து கொள்ளலாம்.