"

கடைசி அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் யுனிக்ஸோடு தொடர்புள்ள, விவாதிக்காத பல செயல்பாடுகளை, சொற்களின் விளக்கங்களையும், விவரமாகப் பார்க்கலாம்.

முதல் முதலாக, பிராசஸ் என்ற சொல் இணைந்த , பல சொற்களைக் கவனிக்கலாம்..

பேரலல் பிராசஸிங்

இது ஒரு கருவி இல்லை, ஒரு ஏற்பாடு! இதில் ஐ.பி.சி என்னும் கருவி பயனாகிறது. பேரரல்-பிராசஸிங் (Parallel Processing) என்று யுனிக்ஸ் பயன்பாட்டில் ஒரு யுக்தி. இதை கடைசி அத்தியாயத்தில் விவரமாகப் படிக்கலாம்.

இந்த  முறையில்  எழுதப்படும்  ஒரு  புரோகிராம்  பல  சிறிய புரோகிராம்களாக பிரிக்கப்பட்டு ஒரே சுற்றில் சிறிய புரோகிராம்கள் எல்லாமே ஓட்டப்படுகிறது. இதனால், பிராசஸின் ஓட்டம் அதிகரிக்கிறது.

யுனிக்ஸ் உள்ள கம்ப்யூட்டரில், சி.பி,யு, தன் செயல்பாட்டிற்கு, ஒவ்வொரு பிராசஸுக்கும் ஒரு சிறிய நேரத்துளிகளே தருகிறது என்று பார்த்தோம்.  இதனால் ஒரு பெரிய பிராசஸ் ஓடி முடிய அதிக சுற்றுகள் எடுப்பது நாம் அறிந்ததே.

அந்த  பெரிய  பிராசஸ்,  வேகமாக  ஓட  என்ன  செய்யலாம்?

அதற்கதிகமான   சிறிய புரோகிராம்களாளாக உடைத்து., ஒரே சுற்றில் ஓடவிடுவோம்.

இது சுத்தமாக புரியணுமுனா, உதவிப் பேராசிரியர். ராமசாமிசார் வீட்டு கல்யாண ஏற்பாட்டைக் கவனிச்சாப் போதும்.

சீக்வென்ஷியல்  (Sequential)  மற்றும்  பேரலல்(Parallel) பிராசஸிங் என்று இரு வகையான புரோகிராம்களை யுனிக்ஸில் எழுதி ஓட்டலாம். இதைப் சுலபமாகப் புரிந்து கொள்ள ஒரு நிகழ்ச்சியைக் இங்கே காணலாம்.

நம்ம வீட்டிலே தினசரி நடக்கிரதுதான் இதெல்லாம்.

சோறு வைக்கணும், குழம்பு வைக்கணும் ஒரு கறி செய்யணும். இதை எப்படி செய்யலாம்?

  1. முதலில் குக்கரில் சோறு செஞ்சுடலாம்.
  2. அப்புரம் குக்கரில், பருப்பு வேகவச்சு இறக்கிடலாம்.
  3. அப்புரம், கறி சமைக்க காயை வேக வைத்து இறக்கிடலாம்.,
  4. வேக வைத்த பருப்பை வைத்து குழம்பு வைக்கலாம்..
  5. கடைசியாக, வேகவைத்த காயை வைத்து கறி தயார் செய்து சமையல் வேலையை முடிக்கலாம்.

இந்த வேலையை வேகமாக முடிப்பது எப்படி?

  1. அரிசி, பருப்பு,  காகாய்  மூன்றையும்  வேகவைப்பது  ஒரு வேலை.
  1. வேக வைத்த பருப்பை வைத்து குழம்பு தயாரிப்பது,
  1. வெந்த காயை வைத்து கறி சமைப்பது..

உதவிபேராசிரியர் ராமசாமி சாரோட தங்கச்சிக்கு கும்மிடிப் பூண்டியில் கல்யாணம்

பேரலல் பிராசஸிங் எப்படி செய்யலாம் மேலே கொடுத்த உதாரணம் போதவில்லையானால்,

பெர்கலி யுனிவர்சிடியிலே உதவிப் பேராசிரியரா வேலை பார்த்த ராமசாமி சாரோட தங்கசிக்குக் கும்மிடிப் பூண்டியிலே கல்யாணம். அங்கே   என்னவாச்சின்னு பார்க்கலாம். அதிலே பேரண்ட் பிராசஸ் (Parent Process)  சைல்டு பிராசஸ் (child process) எல்லாமே தெளிவாயிடும்.

ஒரு நல்ல நாள் பார்த்து, அவங்க வீட்டிலே கல்யாண வேலையை ஆரம்பிச்சாங்க. வழக்கமா, ராமசாமிசாரோட அப்பாதான் எல்லா வேலையும் பாத்திடுவாரு. முக்கியமான வேலையின்னா யாரையும் நம்பி எந்த பொருப்பையும் தரமாட்டாரு,

கடையிலே பலசரக்கு ஆர்டர். எல்லாமே ஒரே கடையிலே கிடைக்குதா என்ன? பல பலசரக்கு வாங்க பல கடையிலே இல்லே ஏறி எறங்கணும். திருமணத்திற்கு தேவையான பட்டு மற்றும் எல்லா விதத் துணிமணிகள் சென்னையிலேதான் வாங்கணும்.

அப்புரமா சென்னையிலே நகைக்கடைகள் ஒண்ணுவிடாம ஏறி  செலக்ஷன் செய்யணும் ஆர்டர் கொடுத்து பின்னே காசை பாங்குலேருந்து எடுத்து நகையை வாங்கி லாக்கர்லே போடணும்.

கல்யாண மண்டபம் புக் பண்ணணும். நாத்ஸ்வர வித்வான்கள் எல்லோரும்   கம்ப்யூட்டர்   படிக்கப் போய்   எண்ணிக்கையிலே குறைஞ்சுட்டாங்க.. அவங்க கிட்டே நாள் கிடைக்கிறது சுலபம் இல்லே.  பல  தடவை  நடந்து  பேரம்  பேசிக்  அட்வான்ஸ் கொடுக்கணும்  கடேசி  நாளிலே  மாலை  பழங்கள்  காய்  கறி வாங்கறது.

ராமசாமி கலிபோர்னியாயுலே உக்காந்து ஒரு கணக்கு போட்டாரு. அப்பா மட்டும் ஒத்த ஆளா இதெய் எல்லா செஞ்சு முடிப்பதுக்கு ஆறுமாதம் போதாது.

இது  சரியா  வராதுன்னு,  பெரிய  புரொபசரிடம்  காரணத்தைச் சொல்லி லீவு கேட்ட போது. அவருக்கு ஒரே கோபம். யுனிக்ஸ் இன்னும் தயாராகல்லே   நீங்க லீவு போட்டுட்டு போனா எப்படின்னுட்டாரு.

ராமசாமி சொன்னாரு இப்போ எங்க வீட்டுலே ஒரு சோதனை செய்ய்யப்போறேன். அது சக்சஸ் ஆயிட்டா திரும்பி வரும்போது  யுனிக்ஸ்.ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலே ஒரு புரட்சியே செய்வோம்  என்றார்.

அப்படின்னா நானும் உன்னோட வரேன்னு சொல்லி, இரண்டு பேருமா சான்பிரான்சிகோவிலே பிளைட் பிடிக்சு சென்னை வந்து  சேர்ந்தார், அதன் பின்னர், டாக்ஸி   பிடிச்சு கும்மிடி பூண்டிக்கு  வந்திட்டார். அதுதான் நம்ம ராமசாமி சார் ஊரு. அப்பாவை கூப்பிட்டு ராமசாமி சொல்லிட்டாரு.

நீங்கதான் எல்லாம் தெரிஞ்சவங்க. அனுபவசாலி. அதோட வீட்டுலே பெரியவங்க. அதுனாலே நீங்க விரும்பியபடி உங்க தலைமையியே தான்  திருமண வேலைகள் எல்லாமே நடக்கும்.

ஆனா நான் என் தம்பி, என்னோட பசங்க, எல்லோரும் கல்யாண வேலையிலே பங்கெடுத்ததுப்போம், என்கிறார். அப்பாவுக்கு யாரையும்  நம்பி  எந்த  பொருப்பான  வேலையும்  கொடுத்துப் பழக்கம் இல்லே. இதெல்லாம் வேலைக்கு உதாவதுன்னு, மறுத்துப் பார்த்தரு.

பெரிய புரொபசர் இதை எல்லாம் பாத்தாரு கேட்டாரு.  ராமசாமி சொல்றது சரிதானே என்கிறார்.

கட்டமைப்புக்கு நடத்துற சோதனையே இதுதான் என்கிறாரு. ராமசாமிசார் போட்ட திட்டப்படி  அப்பா அவரு ஒரு வேலையை எடுத்துப்பாரு.

மளிகை காய்கறி. நகை  இதர  திருமண நாளன்று தேவைப்படும் பொருட்கள். இடம் ஏற்பாடு மற்ற சில்லறை வேலைகள் என்று டிபார்ட்மெபண்டு வாரியா பிரிக்சுடுவாறு

பிரிச்சதை தன் பிள்ளை பெண்களுக்குக் கொடுப்பாரு.. நாங்க ஒவ்வொருவரும் அவங்க அவஙக  பிள்ளைகளோட  சேர்ந்து தங்களுக்கு கொடுத்துள்ள வேலையை எங்களுக்குள்ளே பிரிக்சுக்கிட்டு ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துப்போம்.

எல்லோரும் ஒரு சமயத்துலே ஆளுக்கு ஒரு பொருப்பை எடுத்துப்போம். எங்களுக்கு எங்க பிள்ளைகள் உதவும்.  எங்க வேலையை  தரம்  பாத்து  எங்க  பிள்ளைகளுக்கு  பிரிக்சுக்  கொடுப்போம். வெளியிலே இறங்கி வேலையை ஆரம்பிப்போம்.

நாங்க எங்க பிள்ளைகளுக்கு கொடுத்த வேலையைக் கவனித்து அவங்க  வேலையையும்  பத்திரமா  சேகரித்து  நாங்க  வாங்கின பொருளையும்  அதோடு  சேர்த்து  மொத்தமா  எல்லாத்தையும் எங்க அப்பா கையிலே கொடுக்கணும். அது ஒவ்வொரு மகன் மகளோடட   பொருப்பு.

எங்க  அப்பா,  தன்  பிள்ளைகள்  பெண்கள்  எல்லோருக்கும் (அவங்க அவங்க பிள்ளைகளுக்கு பிரிக்சுக் கொடுத்த வேலையை கவனித்து சரியா  முடித்தவுடனே அது எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்திடுவார்.

கல்யாண நாள் வரை ஓய்வுதான். அடுத்ததா, ஜாம் ஜாம் என்று கல்யாணத்தை நடத்துவதுதான் அவரோட பொருப்பு.

இதற்கு  அப்பா  மொதல்லே  சம்மதிக்கல்லே.  நான்  தான்  திட்டம் பிடிக்சுது. அவரும்   ராமசாமி சாரோடட அப்பா கிட்டே பேசி, ஒப்புக்க வச்சிட்டாங்க.

வௌ¢ளைக்காரன் சொன்னா சரியாதான் இருக்கும்னு ராமசாமியின் அப்பா பெரிய சாமிக்குக் பெரிய நம்பிக்கை. அவரு பிரிட்டிஷ் ஆட்சியிலே வேலை பார்த்தவர்.  அதுனாலே ஒத்துக்கிட்டாரு. அடுத்த நாளே வேலை தொடங்கிடுக்சு.

ராமசாமி தன்  பிள்ளைகளோட மளிகைக் கடைக்குப் போனாரு அங்கே இல்லாத ஐட்டங்களுக்கு ஒரு லிஸ்ட் தயார் பண்ணி. அவனோட பெரியபையன் கையிலே   கொடுத்தாரு.. அந்த கடையிலே இருக்கிற சாமான்களுக்கு அவரு வாங்கினதுக்குக் காசு கொடுத்து வாங்கி எல்லாத்தையும் வண்டியிலே ஏத்திட்டாரு.

அதுக்குள்ளே ஒரு மகன் வேற ஒரு கடைக்குப் போனான். அங்கே பத்து அயிட்டம் இருந்தது. இரண்டு இல்லே. கூட வந்த அவன் தம்பி, அந்தக் கடையிலே இல்லாத இரண்டு அயிடத்தை வேற கடையிலே வாங்கிட்டான். ராமசாமி, வண்டியிலே அவரு வாங்கி வந்தது. அவர் மகன்கள் வாங்கினது எல்லாமே ஏறிடுக்சு. மளிகை வேலை முழுவதும் சுருக்க முடிஞ்சுது.

அப்படித்தான் அதே நேரத்துலே ஒவ்வொரு மகன்களும் மகளும் தன் பிள்ளை குட்டிகளோடே சென்னைக்குப் போயி துணிகள். ஆபரண்ங்கள் பாத்திரங்கள் என்று எல்லா மேஜர் அயிடங்களையும் இரண்டே நாளில் வாங்கி முடிசாங்க.

மூணாவது  நாளைக்கு     ஒரு  வேலையும்  பாக்கி  இல்லே.புரொபசருக்கு  ரொம்ப  சந்தோஷம்  .  ராமசாமியை  பாராட்டி குடும்ப நபர்களுக்குக் தன் செலவிலே உள்ளூர்லே ஒரு  பெரிய ரெஸ்டெரண்ட்லே அமக்களமா ஒரு விருந்து கொடுத்துட்டு அடுத்த நாள் பிளைட்டிலே அமெரிக்கா திரும்பிட்டாரு.

ராமசாமி வீட்டுக் கல்யாணம் நல்ல விதமா முடிஞ்சு ராமசாமி அமெரிக்க திரும்பினாரு. அப்போ பெரிய புரொபசர் இந்தியாவிலே உதவிப் பேராசிரியர் ராமசாமி, ஒரு சோதனையை வெற்றிகரமா முடிக்சு யுனிஸ்சுலே ஒரு புதிய புரட்சி செய்ததை விளக்கி மத்தவங்களுக்கு விவரிக்சுகிட்டுருக்கிறாரு.

அதற்கு மூல காரணமா இருந்த ராமசாமிக்கு பாராட்டுதல்களை அள்ளி   அள்ளி   வீசினாரு.   அது   என்னன்னு   இப்போ பாக்கலாமா?

அவரு விளக்கமா  சொன்னது இதுதான். .

ஒரு  புரோகிறாம்  எழுதரப்போ    முதல்லெருந்து  ஆர்ம்பிக்சு அடுத்தடுதது பல கட்டங்களாக ஒரே பெரிய புரோகிராமா எழுதலாம் – ராமசாமி சாரோட அப்பா வழக்கமா  கல்யாணக் காரியம் செய்வதைப் போல.

வேற ஒரு வழியும் இருக்கு. செய்யவேண்டியதை    ஒரு பட்டியல் போட்டு, பல தொடர்புள்ள பாகங்களை ஒன்றாகச் சேர்த்து அவற்றை (தனித்தனி புரோகிராம்களாகச் செஞ்சு) அந்த எல்லா

புரோகிராம்களையும் ஒன்று சேர்த்து   ஒரே புரோகிராமாக எழுதல்லாம். இதன் பலன், ஒரு சுற்றில், ஒரே புரோகிராமின் பல பாகங்கள் ஓடும். இதனால் விரைவாக எக்ஸிகூஷன் நடைபெறும்.

இதை மனதில் சுத்தமாக ஏற்ற உதவிப் பேராசிரியர் ராமசாமி வீட்டுக் கல்யாணத்தை மறுபடியும் படிக்கணும்.

இந்த முறையில் ஒரு புரோகிராமை பல பாகமாகப் பிரித்து, பிரித்த புரோகிராம்கள்  எல்லாமே  ஒரே  சுற்றில்  ஓடுவதால்  குறைந்த சுற்றுக்களில் பிராசஸாகிவிடும்.

எச்சரிக்கை

 யுனிக்ஸ் – பேரலல் பிராசஸிங் செயல்பாட்டிற்கும், ராமசாமிசார் வீட்டிலே கல்யாண வேலை பேரலலா நடந்ததிற்கும் ஒரு முக்கிய  வித்தியாசம்.

பேரப்பிள்ளை வாங்கிய           பொருளை        பிள்ளைகள்     ஆடைவதும். பிள்ளைகள் வாங்கிய பொருளை ராமசாமிசாரோட அப்பாவிடம்  சேர்ப்பது எளிது.

ஆனால், யுனிக்சிலே ஒரே ஒரு பிராசஸ்தான். ஓடிக்கிட்டிருக்கும். ஓடாதது கொடுக்கவும் முடியாது, வாங்கவும் முடியாது, . ஓடும்

பிராசஸ் ஓடாத பிராசஸுக்கு செய்தியோ, டேட்டாவோ எப்படி அனுப்ப இயலும்.  இதற்குத்தான் இண்¢டெர் பிராசஸ் கம்யூனிகேஷன் என்னும் ஒரு  ஏற்ப்பாடு யுனிக்ஸில் உண்டு. அதைக் கருவிகளாகப் படித்தோம்.

1.           டிமன் பிராசஸ்.     (Daemon)   டிமன் புரோகிராம்கள்

ஆதிகால யுனிக்ஸ் ரீமீttஹ் என்னும்   ஒரு புரோகிராம் விளக்க பீட்டரோட கதையைப் படிக்கலாம்.

திரு பீட்டர்,    ஃப்ளாக் ஸ்டாஃப் (Flagstaff, Arizona) என்ற ஊருக்குப் போனாரு.

அமெரிக்காவுலே, மக்கள் மத்தியில் பொதுவா ஒரு நல்ல விஷயம். வார விடுமுறையிலே காரை எடுத்துக்கிட்டு ஜாலியா பொழுது போக்க நாஷணல் பார்க், பீக் என்று வௌ¢ளிக்கிழமையே கிளம்பிருவாங்க.

அங்கே போன நம்ம ஊர் ஆளுங்க மாத்திரம் டீவி முன்னாலயும்,  குஜராத்தி கடையிலே போயி மல்லி மொளகா கோதுமை மாவு வாங்கியே   விடுமுறையக் கழிச்சுடுவாங்க. போகட்டும். இப்போ நாம பீட்டர் கதைக்கு வருவோம்.

பீட்டர்,   ஒரு வார    விடுமுறைக்கு    சான்பிராஸ்சிஸ்கோவிலிருந்து  அரிசோனாவிலே  உள்ள  கிராண்டு  கேன்யன் போனாரு. திருப்பி வரப்போ ஃப்ளாக் போஸ்ட் என்கிற சிறிய ஊர் வழியா வந்தாரு.

அங்கே    ஒரு    பிரபலமான    விஷயம்    என்னவென்றால், செயற்கையாக, ஒரு ஐஸ் ஸ்கேட்டிங் ரிங் உண்டு. ஐஸ் ஸ்கேடிங் செயவதற்காக செயற்கையாக ஒரு பிரம்மாண்டமான  அமைப்பை உருவாக்கிருக்காங்க. அது அந்த ஊருக்கு விசேஷம்.

அந்த ஊருக்கு உயிர் வருவதே வருடத்திற்கு அந்த இரண்டுமாதம் மட்டுமே  தான். அப்போது  அந்த  ஊரில்  மக்கள்  அலை மோதும்.

செயற்கையான ஸ்கேட்டிங்க் ரிங் உருவாக்கப்பட்டிருக்கும்.  இந்த வருடத்தில் இரண்டே மாதங்கள்  மட்டுமே   உயிர் பெறும்.  அப்போது எல்லா வயது மக்களும் சருக்கி விளையாடுவார்கள். அறுவது எழுவது வயதானவர்கள் உட்பட பலர். சருக்கி மகிழ்வார்கள்.  அதில் சிலர் விழுந்து அடிபட்டடடு ரத்தம் சிந்தும் காட்சிகளும் உண்டு.,  அங்கே தயாராக உள்ள ஆம்புலன்ஸ்கள் அவர்களை  தூக்கிச் செல்லும். (அவர்கள் ஊர் வீர விளையாட்டு.

அமெரிக்காவில் உள்ள எல்லா ஊர்களையும் போல நம்ம ஊர் (குஜராத்தி) படேல்கள்தான் அதிக அளவில் மோட்டல்கள் (அவங்க ஊரில் பாதையோர ஹோட்டல்கள்) நடத்துகிறார்கள்.

இந்த ஊர் அந்த இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ்வதால், அங்க்குள்ள மோட்டல் வாடகை விஷம் போல கிடுகிடுவென்று ஏறும். பீட்டர் பிளாக் போஸ்ட் ஊருக்குள்ளே போகும் போது இரவு மணி பன்னிரண்டு.  ஒவ்வொரு மோட்டலா போராரு.  அங்கே  செக்கூரிட்டி  ஆளு  மாத்திரம்  தூங்காம முழிக்சிருக்காரு. வேற யாருமே காணோம்.

ஒரே ஒரு ஓட்டல்லே மாத்திரம் ஒரு ரூம் காலியிருக்கு. செக்யூரிட்டி ஆளு, ஒரு ராத்திரிக்கு ஒரு ரூம் வாடகை 200 டாலர் என்கிறார். வேற  வழியில்லாமல் பீட்டர் ரூம் எடுக்க சம்மதிக்கிறாரு.

உடனே அவரு போயி சின்னப் பட்டேலை எழுப்புறாரு. (பெரிய படேல் பகலிலே தான் இருப்பாரு) சின்னப்பட்டேல் பீட்டரின் பெயர் ஊர் விலாசம் சோஷியல் செக்யூரிட்ட்ய் னம்பர் அன்று எல்லா விவரம் எல்லாம் கேட்டு வாங்கி பதிவு பண்ணி பைசாவையும் வாங்கி போட்டுக்கிட்டு ரூம் சாவியை கொடுத்திட்டுத் தூங்கப் போயிடராரு.

செக்கூரிடி வேறு ஒரு மெக்சிகன் ஒருவரை எழுப்புராரு. அந்த ஆளு பீட்டரோட காரிலேருந்து அவரோட பொட்டிய எடுத்துக் கொண்டு காலி ரூமைத் தொரந்து காட்டிவிட்டு பீட்டர் கொடுத்த 5 டாலர் நோட்டை தன் சட்டைப் பையிலே தினிசிட்டு தூங்கக் கிளம்பராரு.

பீட்டருக்குக் ஒரே பசி. தின்னுவதற்கு ஏதானும் கிடைக்குமான்னு செக்கூரிட்டியைக் கேட்டாரு. அவரோ,    தாராளமாகக் கிடைக்குமேன்னு சொல்லி வேறு ஒரு ஆளை, அதாவது  ஒரு சமையல் தொழிலாளியை எழுப்பராரு.

அவரு இருக்கரதை சொல்லிவிட்டு,   பீட்டர்   கேட்டதைக் கொடுத்துவிட்டு,  பில்லைக்     கொடுத்து  கிரெடிட்  கார்டை தேய்ச்சுட்டு, அவரு தூங்கப் போகிறாரு.

இதிலே ஒரு சிறப்பு பாரருங்க. ஒவ்வொரு ராத்திர்யிலேயும் எல்லோரும் முழிச்சுக்கிட்டு அவதிப்படாமல் ஒரே ஒருவர் மாத்திரம், (காவல்காரர் உறங்கக்கூடாது இல்லையா) எல்லாக் காரியமும் சுத்தமா   நடக்குது.

எல்லோருக்கும்  நிம்மதியான இரவு உறக்கம். பாவம் செக்கூரிட்டிக்கு மாத்திரம் கொடுப்பினை இல்லை. என்ன செய்ய? குறைந்த சம்பளம் வாங்கரவங்களுக்குத் தான் அதிக வேலை என்பது உலக நியதி.

சரி பீட்டர் இதை எப்படி யுனிக்ஸ்லே பயன் படுத்தினாருன்னு கண்டு பிடிக்கணுமே. இப்ப அதை செய்வோம்.

யுனிக்ஸ் கூட ஒரு மோட்டல் மாதிரி ஆனால் அதை விட மிக மிகப் பெரிய சேவை மையம். மோட்டல் அல்லது ஓட்டல்லே பத்து சேவை இருந்தா யுனிக்ஸ்லே பத்தாயிரம் இருக்கும். அதுனாலேதான் யுனிக்ஸ் ரொம்ப பவர் புல்லா இருக்கு.

எல்லா சர்வீசும் உடனுக்குடன் தரணுமின்னா எல்லா புரோகிராமுமே ஓடனும். எப்ப எந்த சர்வீஸ் கேட்பாங்கன்னு சொல்ல முடியாது. அது சரியில்லே கஸ்டமரே வராதபோது காப்பி போட்டு, ஆத்திகிட்டு இருந்தா காப்பி, காஸ் எல்லாமே நஷ்டமாயிடும் இல்லையா?

அதுனால செக்கூரிடிமாதிரி எப்பவுமே ஒரு சில புரோகிராம் மாத்திரம் ஓடிக்கிட்டே இருக்கும். அதைத்தான் டிமன் புரொகிராம் என்று அழைக்கிறோம். டிமன் பிரோகிராம்களை எப்படி தயார் செய்வது?  – கூகுள்செய்து பிடிங்க. படிங்க.

1. எக்சிகூஷண் காண்டெக்ஸ்டு;

2. காண்டெக்ஸ்ட் சுவிட்ச்;

3.. டிவைஸ் டிரைவர்

4. வர்சுவல் மெமொரி,

5.. ஸ்வாப் ஏரியா.;

6  கான்கரண்ட் மற்றும்

7. சூடோ காங்கரண்ட் பிராசஸிங்;

8. சிஸ்டம் கால்கள்;

 

ஷெல்

 

ஷெல் என்ற பெயர் பல விதங்களில்  அதன்  அமைப்பிற்கும் செயல்பாட்டிற்கு பொருத்தமானது.

யுனிக்ஸ் ஆப்பரேடிங் சிஸ்டம்   பல அடுக்குகளால் ஆனது. யுனிக்ஸை ஒரு விதைக்கு ஒப்பிட்டப்படுகிறது., மேல்-ஓடு தான் வெளியே (தெரிவது). ஆங்கிலத்தில்    விதைகளின் மேல் ஓடு ஷெல் என்று பெயர். விதையின் தெரியாத ஒன்று, உட்புரம் உள்ள பருப்பு அல்லது ஆங்கிலத்தில் கெர்னல் என்று  அழைக்கப்படும் பருப்பு..

யூசர் கெர்னலை அடைய இயலாது, ஷெல் மூலம் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். எப்படி?

கவர்மெண்ட் அலுவலகங்களின் வெளியிலே சுத்துகிற புரோக்கர், ஒரு யுனிக்ஸ் ஷெல் மாதிரி.  அவர்கள் அலுவலகத்தின் உள்ளே, அணுக முடியாத உள்ள (கெர்னலைப் போன்ற) அலுவலர்களை அணுகி காரியங்களை சாதிப்பது  நாம் அறிந்ததே.

ஷெல் ஆட்டோ டிரைவர்கள், இரண்டிற்கும்  ஒரு ஒற்றுமை உண்டு. மக்கள் தேவையை மாத்திரம்  கேட்டுத் தெரிஞ்சு  (நம்ம பர்ஸையும்  ஓரளாவு  காலி  செய்து),  காரியங்களைச்  சுத்தமா முடிச்சு, அருமையா சேவை தருவாங்க.

நாம் நேர போனா, பைல் நகராது. திரும்பத் திரும்ப வரச்சொல்லி இல்லாத தவறைக் காட்டி அலைய விடுவார்கள்.

ஆனால், புரோக்கர்கள், சுலபமா, ஆங்காங்கே அலுவலர்களுக்கு கொடுக்க வேண்டிய காந்தி போட்டோவைக் கொடுத்து, நகரமுடியாமல், தவிக்கும் பைல்களை நகர்த்தி, காரியத்தை முடிச்சிடுவாங்க..

நமக்கு  போற  வழி  எதுவும்  தெரிய  வேண்டாம்.  ஆட்டோ டிரைவர்கிட்டே, எங்கே போகணுமின்னு  சொல்லிட்டாப் போதும்.

குறைந்த நேரத்திலே சேரவேண்டிய இடத்திற்கு நம்மை கொண்டு செல்வார்கள். இநத வேலையைத்  தான், ஷெல் புரோகிராமும் செய்யுது.

யுனிக்ஸிலே மூன்று ஷெல் புரோகிராம்கள் உண்டு. இவைகள்

  • C Shell (csh)
  • Korn Shell (ksh)
  • Bourne Shell (sh).

இவற்றுள், வேறுபாடுகள் குறைவு. எதை வேண்டுமானாலும, பயன்படுத்தலாம். (இவற்றின் வித்தியாசங்களைத் தேடி கண்டுபிடிப்பது மாணவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சி)

  1. ஷெல் கமாண்ட்:

ஷெல் என்ற மேலே சொன்ன புரோகிராம் யுனிக்ஸிலே இருக்கு. ஒரு யூசரை கிரியேட் செய்யும்போது, இதில் ஏதாவது ஒரு ஷெல் பயனாளிக்க்காக ஒதுக்கப்படும்¢. தேவைக்கேற்ப, அவ்வப்பொழுது எதை வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாலாம்.

ஷெல் கமாண்டுலே, இரண்டு வகை உண்டு.

முதல் வகை; சில, அடிக்கடி நாம் உபயோகிக்கும் கமாண்டுகள், ஷெல் புரொகிராமின் பாகங்களாக கிடைக்கும். பில்ட்-.இன்- கமாண்டுகள் எனப்படும்

இரண்டாம் வகை; அடிக்கடி உபயோகிக்காத பல பயனாளியின் /bin என்னும் டைரக்டரியில் காணப்படும். இவை ஷெல்லின் பாகமாக இருப்பதில்லை. இவற்றை மற்ற எல்லா புரோகிராம்களையும் ஓட்டுவது   போல   பிராசஸர்   ஷெல்   கமாண்ட்   என்னும்

புரோகிராம்கலௌயும்   ஓட்டும். சில ஷெல் கமாண்டுகளையும்,

command             action

cat filename         Displays a filename.

ls dirname            Shows the contents of the directory specified.

less filename        Browses through a file from end or beginning.

head filename      Shows the beginning of a file.

find filename dir. Finds a file/directory

file filename         Identifies the file type (binary, text, etc

cp file1 file2         Copies one file/directory to specified location.

mkdir dirname     Creates the specified directory.

more filename      Browses through a file from beginning to end.

mv file1 file2        Moves the location of or renames a file/directory.

pwd        Shows the current directory the user is in.

rm filename          Removes a file.

rmdir dirname     Removes a directory

.tail filename        Shows the end of a file.

touch filename     Creates a blank file or modifies

cd dirname           Moves you to the directory identified.

  1. யுடிலிடிகள், லைப்ரரிகள்

இவற்றை, சமையல் அறையில் அதிகம் நுழையாமல் திருமணம் செய்யப்பட்ட புதிய இல்லத்தரசிகளுக்கு வசதியாக. வித விதமாமான ஆச்சி மசாலா இருப்பது போல யுனிக்ஸ் யுடிலிடிகள், லைப்ரரிகள் ஆகியவற்றை ரெடி புரோகிராமாக சொல்லலாம் !

சில வீடுகளிலே சமையல் செய்யும் முன்னாலே ஆட்டுக் கல்லிலே இட்டிலி தோசைக்கு மாவு தயார் செய்வாங்க. அம்மியிலே வக்சு ஏதோதோ அரைக்சு கரைக்சு சட்டினியெல்லாம் தயார் செய்ய ரொம்ப நேரம் பாடுபடுவாங்க.

இப்பல்லாம்  கடையிலே ரெடியா சப்பாத்தி, ரெடி தோசை மாவு, மல்லிப் பொடிக் மொளாய்த் தூள், கரம் மசாலா, புளியோதரை மிக்ஸ், பிஸி பேளா பாத் மிக்ஸ் என்று எல்லாத்தையும் விற்கிராங்க இல்லையா?

சமீக காலங்களிலே அரைக்சு கரைக்சு கஷ்டமே படவேணாம். கடையிலே மசாலா பொடிக் சாம்பார் ரசம் பொடிக் இட்டிலி மாவு. தோசை மாவு திடீர் உப்புமாக் திடீர் புளியோதரை. திடீர் பிஸி பேளே பாத் எல்லாமே ரெடியாவே கிடைக்குது. இரண்டு நிமிட நூடூல் போலக்  சாப்பாடு முழுவதுமே சுத்தமாக் சுவையாக் இரண்டே நிமிடங்களிலே தயாராகிடும்.

யுனிக்ஸ்லேயும்   வேகமா   புரோகிராம்   எழுதி   முடிக்க   பல  துறைகளுக்கு புரோகிராம் எழுதத் தேவையான சின்னச் சின்னதா வகை வகையாக லைப்ரரி புரோகிராம்கள் தயாரா செஞ்சு வச்சிருக்காங்க. ஆச்சி மசாலா மாமி மசாலா எம் டி எச் போன்ற பல  கம்பெனிக்காரங்களுக்கு  ஏன்  யுனிக்ஸ்  படிச்சா  சுலபமா புரியும் என்று தெரியுதில்லியா?

பயிற்சி;

ஒரு  பிரோகிராமை    டிமன்  புரோகிராமாக    மாற்ற  என்ன செய்யணும்? கூகுள் செய்து கண்டுபிடியுங்கள்.

  1. இன்டெர் பிராசஸ் கம்யூனிகேஷன்? கல்லைக் கண்டால் காணாமல் போகும் நாய். நாய் உள்ளபோது காணாமல் போகும் கல்.

இந்த வரிகளைக் கேள்விப்படாதவர்கள் மிகவும் குறைவு. ஆனாலும் இதில் பொதிந்திருக்கும் உண்மையான பொருளை உணர்ந்தவர்கள் மிகவும் சிலரே.

பெரும்பாலோர் தெருநாயை அடிக்க கல் தேடும்பொழுது எழும் பிரச்சனையாக, தவறாக அறிவார்கள். யுனிக்ஸ் பிரச்சனையும் நாயை அடிக்க கல் தேடுவதுதான்.

நாய் – கல்  யுனிக்ஸ் என்ற மூன்றுக்கும் தொடர்பு என்ன?

யுனிக்ஸ் ஆப்பரேடிங் சிஸ்டத்தின் உதவியோடு¢ இருக்கும் ஒரே ஒரு பிராசஸரில் பல புரோகிராம்கள் சிறு சிறு மணித்துளிகள் அளவில் ஓட்டப்படுகிறது என்று நான் அறிவோம். ஒரு குறிப்பிட்ட சமயத்தில், ஒரே ஒரு பிராசஸ் மட்டுமே ஓடும்.

ஒரே  புரோகிராமின்  பேரண்ட்  பிராசஸ்  ஓடும்போது,  சைல்டு ஓடாது. அதே போல சைல்டு ஓடும் போது பேரண்டு ஓடாது.

ஆனால், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செய்தியோ டேட்டாவோ அனுப்பவும் – பெறவும் தேவைகள் உண்டு.

ஒரு  பிராசஸ்லிபேரண்ட்  சைல்டு  பிராசஸ்கள்  ஒன்றிலிருந்து மற்றதற்கு டேட்டா அனுப்புவதும் பெறுவது இயலாது.

என்ன செய்வது என்று திண்டாடிய போது இதை சமாளிக்க பெர்கலி பேராசிரியர்களுக்கு உதவிப் பேராசிரியர் ராமசாமி ஒரு உத்தி சொல்லிக் கொடுத்தார். அதை இப்போ பார்க்கலாம். .அவர் அதை அனுபவத்தில் அறிந்தது.

மாடி வீட்டு இருமல் தாத்தா:

 

ராமசாமி   மெக்கானிக்கல்   இஞ்சினியரிங்   பட்டம்   பெற்று சில  காலத்திற்கு,  தான்  விரும்பிய  வேலை  கிடைக்காமல் போக,  அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்காக தயார் செய்வதில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெற்றோர் மேலே தனது பளு தாக்காமல் இருக்கக் ஒரு தொழிற்சாலையில் ஷிப்ட் சூவ்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

அவ்பொழுது தொழிற்சாலையிலிருன்து தொலைவிலும். நகரத்தின் நடுவிலே ஒரு இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ் பகுதியில் தன் சக சூபர்வைசர் ஒருவருடன் வசித்து வந்தார்

வீட்டின் சொந்தக்காரர்கள் மாடியில் வசித்து வந்தார்கள். வீட்டின் கதவுக்கு ஒரே ஒரு சாவி;

பிரச்சனை; நண்பர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் பணி செய்கிரார்கள். இருவரும் வேலைக்குச் செல்லும் நேரமும் திரும்பும் நேரமும்  வெவ்வேறு.  வீட்டின்  சாவியை  ஒருவர்  மற்றவருக்குத் தருவது எப்படி?

தீர்வு; (1) ஒரு குறிப்பிட்ட இடத்தில் (செடிஒன்றின் அடியில் , மிதியடி.யின் கீழே) வைக்கலாம் இதற்கு சமமான யுனிக்ஸ் உத்தி, Shared Memory.

சாவி இல்லாமல், ஒரு புத்தகமோ, ஒரு பெரிய பார்சல், போன்ற பொருட்களை  இருவரும்  பரிமாரிக்கொள்ள  வேண்டுமென்றால், மேலே சொன்ன ஐடியா பயன்படாது.

ஒருவர் இருக்கிறார், அவர் எப்போதும் விழித்துக் கொண்டிருப்பதால், யார் வேண்டுமானாலும் அவரிடம் பொருட்களை கொடுக்கலாம்.

பெறுபவர்கள்  அதற்கான    அடையாளம்   சொல்லி அவற்றை உறங்காத   தாத்தாவிடமிருந்து தாங்களுக்கு   வசதிப்படும்போது பெற்றுக்கொள்ளலாம்.

.இது     ஐ-பி-சி,  பைப்ஸ்,  மெஸேஜ்   கியூ      போன்றவை   மேலே விளக்கிய முறையில் இயங்குகின்றது..

கந்தசாமி;  அடிப்படை எல்லாத்தையும்   சொல்லிட்டோம். முடிவுரைக்குப் போகலாமே!

 

License

Icon for the Public Domain license

This work (தமிழில் யுனிக்ஸ் by nat123; நடராஜன் நாகரெதினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book