"

ஸ்டேட் மெஷின்

state machine

ஸ்டேட் மெஷின் என்பது ஒரு வடிவைக்கும் யுக்தி.. இதன் பயன்பாடு மிக அருமையான ஒன்று. சிக்கலாகையான ஒரு  பிரசனைகளைக் கையாள,. சிக்கலில்லாத ஒரு (திட்டம்) புரோகிராம் ஒன்றைத் தயாரிக்க இது  அவசியம்.

ஒரு :இயந்திரம்  வடிவமைக்கவும், .ஒரு கம்ப்யூட்டர் புரரொகிராம் தயாரிக்கவும் மிகவும் பயன் தருவது.

ஒரு விலை குறைந்த லிஃப்ட் வடிவமைப்பதிலிருந்து, பல்வகை உற்பத்தி, மற்றும் பல தொழில் துறைகளில் பயன்படும் இயந்திரங்கள்  முதல்  விமானம்  போன்ற  விலை  உயர்ந்த, சிக்கலான வடிவமமைப்புகள் உள்ளிட்டு ஸ்டேட் மெஷின் பயன் தரும்.  வடிவமைப்பின் விளக்கம் ஸ்டேட்  மெஷின், ஸ்டேட் ட்ரான்சிஷன் டையக்ராம் மூலம் எளிதாக விளக்கலாம்.

ஒரு இயந்திரம், பவர்-ஆன் செய்யும்போது, (ஒரு புரோகிராம் ஓடவிட்டபோது)    முதன் முதலில் எந்த நிலையில் இருக்கவேண்டும்?

ஒவ்வொரு மாற்றம் வரும்போதும் தற்போதுள்ள நிலையிலிருந்து எந்த ஒரு நிலைக்கு மாறவேண்டும்? எந்தெந்த சூழ்நிலைகளில் தற்போதைய நிலையிலிருந்து மாறக்கூடாது?

இவைகளை ஸ்டேட் டிரான்சிஷன் டேபிள் (State Transition table) மூலம் விளக்கலாம். இதை முன் வைத்து ஒரு எலக்ட்ரானிக்ஸ் உபகரணம் வடிவமைப்பதோ, அல்லது  சாப்வேர்  கோட் எழுதுவதும் எளிதாகிறது.

எங்கெங்கே நின்று,  பல சுற்றுகள்  ஓடிய பின், எவ்வாறு கொலை (kill¦)  செய்யப்படுகிறது என்று விளக்குகிறது.

ஒரு ஓடக்கூடிய புரோகிராம் (எக்ஸிகூட்டபிள் புரோகிராம்) என்று இருப்பதாகப் பார்த்தோம் இல்லையா?  அது ஒரு நோயாளியைப்

போலவும். கம்ப்யூட்டர் ஒரு  மருத்து மனையைப் போல மனதில் உருவகம் செய்து கொள்ளுங்கள்.

ஒரு சிறிய காயம் என்றால், உடனே ஒரு இஞ்சக்ஷன் கொடுத்து, மருந்து போட்டு பாண்டேஜ் போட்டு அனுப்பிடுவார், தெருவிலே ஓரு கிளினிக் வைத்துள்ள ஒரு மருத்துவர்.

ஆப்பரேடிங் சிஸ்டம் இல்லாத ஒரு கம்ப்யூட்டரில் ஒரு எக்சிகூட்டபிள் புரோகிராம், தட்டின உடனே ஓடிடும். ஓரே ஓட்டமா ஓடி முடிஞ்சுடும்.

இது யுனிக்ஸ்  கீழே ஓடும் புரோகிராமுக்கும், நட்சத்திர மருத்துவ மனையில் பெறும் சிகிச்சை ,முறைக்கும், நூறு சத விகித ஒற்றுமை காணப்படும்.

பிராசஸ் மானேஜ்மெண்ட் என்ற தலைப்பில், பிராசஸ் ஸ்டேட்ஸ் மற்றும் ஸ்டேட்- டிராரான்சிஷன் இரண்ஐயும் மேலும் விவரமாகப் பார்க்கலாம்.

License

Icon for the Public Domain license

This work (தமிழில் யுனிக்ஸ் by nat123; நடராஜன் நாகரெதினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book