யுனிக்ஸ் எதற்காக உருவாக்கப்பட்டது.
கந்தசாமி: விஞ்ஞானத்திற்கும் மெய் ஞானத்திற்கும் பொதுவாக இருப்பதென்ன?
நடராஜன்: மெய்ஞானிகள் வாழ்க்கையை ஆராய்ந்தால், அவர்கள் தேடப் போனது கடவுளை, ஆத்மாவை உண்மை என்ற வகையில் ஏதேனும் ஒன்று. ஆனால், கிடைப்பதோ, அண்டம், ஆண்டவன் மனிதன் இவர்களுக்குள்ள உறவு. விஞ்ஞானிகள் கதையும் அதேதான்.
- சுமார் நாற்பது ஆண்டுகள் முன்னால், கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் எனப்படும் மின்பாகம் சில கோடி ரூபாய் அளவிலான விலையுள்ளது, ஆனால் அதன் செயல்பாபாட்டிலோ, தற்கால ஹார்ட்வேருடன், அதன் வேகம், பயன்பாடு இவற்றை ஒப்பிடும் பொழுது ஒரு கால்குலேடரின் திறமையோடு ஒப்பிடலாம்
- யுனிக்ஸ் போன்ற ஒரு மென்ஒரு வடிவமைக்க திட்டமிட்ட காலத்தில், கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோர், ஒருவர் பின்னால் ஒருவர், தங்கள் புரோகிராம்களை ஒவ்வொன்றாக ஓட்டி, தங்கள் பணிகளை நிறைவேற்ற வேண்டும். இதனால் காத்திருக்கும் நேரம் அதிகரிக்கிறது.
- புரோகிராமர்கள், ஆப்பரேட்டர்கள் மூலமே கம்ப்யூட்டருடன் தொடர்பு கொள்ள முடியும், நேரடியாக இல்லை. இவற்றால் ஒரு புரோகிராம் தயார் செய்யும் நேரமும் அதிகரித்தும், புரோகிராமர்களின் கிரியேட்டிவிட்டி குறைவதாகவும் அறிந்தார்கள்
- அதிக பயனாளிகள் பயன் அடைந்து, பயன்பாட்டை அதிகரித்து செலவைக் கட்டுப்படுத்த ஒரு தேவை.
இந்த குறைகளை தீர்த்து வைக்க ஒரு மென் பொருளைத் தயாயார் செய்ய பெர்க்கலி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் திட்டமிட்டார்கள்.
பிள்ளையார் செய்ய ஆரம்பித்து
அது குரங்காக முடிந்த கதை.
இது செவிவழி வந்த ஒரு கதை. பெர்கிலி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அதிவேகமாகச் செயல்பட பல பிராசஸர்களைக் (multi-processor) கொண்ட ஒரு கம்ப்யூட்டருக்கு மல்டிக்ஸ் என்று ஒரு ஆப்பரேடிங் சிஸ்டம் தயாரிக்கத் திட்டமிட்டார்களாம்.
கழுதை தேய்ந்து ஒரு கட்டெரும்பானது. கழுதை தேய்ந்து ஒரு கட்டெறும்பானதைப் போல, பிள்ளையார் பிடிக்க ஆரம்பிக்க அதுவே ஒரு குரங்காய் முடிந்ததைப் போல என்பார்களே. அது போலவே¢, பல பிராசர்களைக் கொண்டு ஓட திட்டமிட்டு, மாறாக ஒரே பிராம்சசரில் பல பயனாளிகளில் புரோகிராம் ஓடும் வகையில் யுனிக்ஸ் என்று மாறியதாக ஒரு சோகக் கதை.
முதல் திட்டத்தில் பல பிராசசர்களைக் கொண்ட ஒரு கம்ப்யூட்டர், அதை சுலபமாகவும, திறமையாகவும் பயன் படுத்த அதற்கு ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிக்கத் தொடங்கினார்கள். அது செயல்படாது போகவே, திட்டம் திசை மாறி ஒரே ஒரு பிராசஸருடான கம்ப்யூட்டரை பல பயனாளிகள் ஒரே சமயத்தில் ஓடும் வகையாக உருவாகி. அது தான் யுனிக்ஸ் என்று யாரோ சொல்லியதாக நினைவு.
கூகுள் செய்தோ இல்லை என்றால், தெரிந்தவரிடம் கேட்டோ இதை சரியா இல்லை தவறா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பயமுறுத்தும் புதிய சொற்கள். (JARGONs)
கந்தசாமி; விஞ்ஞான அறிவு அடைவதின் சிக்கல் மிகுந்தவை என்னென்ன?
நடராஜன்: இரண்டு ஐட்டங்களைச் சொல்லலாம். 1. ஜார்கான், புதிய சொற்கள். (JARGONs) செயல்பாட்டின் பொதிந்துள்ள தத்துவங்கள்.
மாணவர்கள் மட்டுமில்லாமல் எல்லா வயதிரனுக்கும் எத்தனை பட்டங்கள் பெற்றிருந்தாலும் விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் தொடர்பாக முதன் முதலாகக் கற்றுவரும் போது தலைவலி தருவதும், தடையாக இருப்பதும் ஜார்கான்கள்.
கந்தசாம: ஜார்கானை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.
நடராஜன்: புதிய மற்றும் புதிரான ஆங்கில வார்த்தைகள் ஜார்கான் என்று அழைக்கப்படும்.
ஒரே வார்த்தை சொல்லும் செய்தி துறைக்குத் துறை மாறுபடும். விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டுமே சிண்டைப் பிய்க்கும் வகையான சிந்தனையத் தேவைப்படும் விஷயங்கள் அதிகம் இல்லை. ஆனால் அப்படி நம்மைக் குழப்பும் வார்த்தைகள் ஏராளம் உண்டு.
கந்தசாமி: ஏன்?
நடராஜன்: ஞானிகளும் விஞ்ஞானிகளும் தாங்கள் கண்டுபிடிப்பை. மற்றவருக்கு விளக்கும் போது தங்களின் மனதில் தோன்றிய புதுப் புது வார்தைகளை பயன் படுத்துவதுண்டு. .பழைய சொற்களுக்கு புதிய விளக்கங்களையும் தருவதுண்டு.. அதே தத்துவத்தைச் சுலபமாக விளக்கும் வேறு வார்த்தைகள் ஏற்கனவே இருக்கிறதா இல்லையா என்று தேடுவதில்லை.
கந்தசாமி; அது போகட்டும். சொல்ல நினைத்ததற்கு வாழ்கையின் நிகழ்சிகளிலிருன்து சரியானதொரு மேற்கோள் காட்டி சுலபமாக புரிய வைக்கலாம் இல்லையா? இதையும் பெரும்பாலோர் முயற்சி செய்வதில்லை.
காலப் போக்கில் இப்படி உருவான ஜார்கான்கள், கண்டுபிடிப்புகளோடு கலந்து ஒன்றாகி, மாணவர்களுக்கும் துறைக்குப் புதியவர்களுக்கும் தீராத தலைவலியை தந்து வருகிறது.
நடராஜன்; உதாரணமாக: இரண்டு. முதலாவது குறுந்தகடு., இரண்டாவது மடிக் கணினி. ஜார்கான்களைத் தள்ளிவைத்து, நாம் நன்றாக அறிந்த, புரியும்பபையான வார்த்தைகளால் விளக்கிவிட்டால் சிக்கலான விஞ்ஞானம் சுத்தமாக புரிந்து கொள்வது எளிதாகும்.
கந்தசாமி: கெர்னல் என்று யுனிக்ஸ் ஆப்பரேடிங் சிஸ்டத்தைக் குறிப்பிடக் காரணம் என்ன? அதே போல ஷெல் என்று ஒரு புரோகிராம் அழைக்கப்படக் காரணமும் என்ன?,
நடராஜன்: கம்ப்யூட்டரில் உள்ள எல்லா புரோகிராமையும் சேர்த்து, ஒரு விதையாக உருவகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வரைபடம், பல வார்த்தைகளால் விளக்கக் கடினமான செய்திகளை எளிமையாக விளக்க உதவுகிறது.
கந்தசாமி: கெர்னல் விதையின் உள்ளே உள்ள மிருதுவான பாகம். அதுவே விதையின் கடினமான வெளித் தோலை உடைத்து வெளிவருகிறது.
நடராஜன்: விதையின் வெளிபாகமான வெளித்தோல் ஷெல் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
யுனிக்ஸின் கெர்னல் என்பது, பல நூறு அல்லது சில ஆயிரம் சிறிய பெரிய புரேஎன்£கிராம்களால் ஆன ஒரு குவியல், யுனிக்ஸின் உயிர். கம்ப்யூட்டரில் இயக்குவதும், இயங்குவதும் இதிலுள்ள புரோகிராம்களே!
கந்தசாமி: கெர்னல்தான் பயனாளிகள் புரோகிராம்களை பிராசஸ் செய்யணும். அதற்கு, பயனாளிகள் தங்கள் தேவைகளை ஆப்பரேடிங் சிஸ்டத்திடம் (கெர்னலிடம்) தெரிவிக்கணும். இதில் மூன்று சிக்கல் உள்ளன.
- பயனாளிகள் கெர்னலை முழுவதும் கற்று பின் அதன் பயனை அடைவது ஒரு வைக்கோல் போரில் ஒரு ஊசி தேடும் முயற்சிக்குச் சமமானது.
- கெர்னலின் பாதுகாப்புக்காகவும், மற்ற பயனாளிகளின் புரோகிராம்களின் நேர்த்தி கெடாமல் பாதுகாக்கவும் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கெர்னலில் உள்ள புரோகிராம்கள் எதையும் பயனாளிளோ அல்லது புரோகிராம் எதுவுமோ, நேரடியாக அணுக முடியாத வகையில் யுனிக்ஸின் கட்டமைப்பு வடிவமைக்கப் பட்டுள்ளது.. கெர்னல் அமைந்துள்ள மெமொரியின் எல்லையை ஒரு பயனாளியின் புரோகிராம் (அத்துமீறி) கடக்குமானால், கெர்னல் செக்மெண்டேஷன்-எர்ரர் என்று அபாயச் சங்கை ஊதிவிடும்.
- ஆனால், கெர்னலின் பல புரோகிராம்களை அணுகாமல் பயனாளிகளின் புரோகிராம்கலும் பல செயல்பாடுகள் நிகழாது.. இதற்கு இரண்டு தனி ஏற்பாடுகள் உள்ளன?
(A) ஷெல்: ஒரு புரோகிராம். இதற்குத் துணையாக இருவகையான கமாண்ட்கள் எனப்படும் சிறு புரோகிராம்களின் குவியல்கள்.
முதல் வகை; அதோடு இணைந்தே இருக்கும் கமாண்ட் (Built- in commands) பல சிறு துணை புரோகிராம்கள்.
ஷெல், புரோகிராகமாமுக்கு வெளியே காத்திருக்கும் இரண்டாடாம் வகை – எக்ஸ்டர்னல் கமாண்ட் (External Command) என்னும் துணை புரோகிராம்கள்.
(B) சிஸ்டம் கால்கள்: என்னும் சில புரோகிராம்கள் ஏற்பாடு, கெர்னலில் நேர்த்தி ¢கெடாமல், கெர்னலை பயனாளிகள் தொடர்பு கொள்ள ஒரு அருமையான ஏற்பாடு..
இந்த இரண்டையும், பின் வரும் கடைசி அத்தியாயத்தில், விவரமாக, உதாரணங்களுடன் படிக்கலாம்.
யுனிக்ஸின் ஐந்து பாகங்கள்
யுனிக்ஸ் அல்லது லைனக்ஸ் என்னும் ஆப்பரேடிங் சிஸ்டம். ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு மென் பொருள் அல்லது புரோகிராம் என்றாலும் நிர்வகிப்பதில் சுலபம் என்ற ஒரு காரணத்திற்ககாக ஐந்து தனித்தனி புரோகிராம்களாக (மாடூல்களாக) எழுதி – ஒன்றாக இணைக்கப்பட்ட ஒரு மென் பொருள்..
எல்லா வித, பெரிய உற்பத்தி அல்லது வணிக நிறுவனங்களும், பல நிர்வாகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏன் செயல்படுகின்றன?
செயல்பாட்டில் மற்றும் நிர்வாகத்தில் திறமை என்னும் ஒரு குறிக்கோள்தானே? .
ஒவ்வொரு மாடூலுமே பல புரோகிராம்கள் கொண்ட ஒரு குவியல் அல்லது அவியல். ஒவ்வொரு மாடூல்களின் உள்ளேயும் பலவிதமான சிறியதும் பெரியதுமாக புரோகிராம்கள் அனேகம் உண்டு.
வெவ்வேறு மாடோல்களில் உள்ள புரோகிராமும் ஒரு குறிப்பிட்ட உருவாக்கப்பட்டாலும் வெவ்வேறு மாடூல்களில் உள்ள புரோகிராம்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவது
பல உற்பத்தி மற்றும் வியாபார நிறுவனங்கள் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதற்க்கென தனித்தனி தலைவர்கள் இருந்தபோதும், ஒரே குறிக்கோளை அடைய அவர்கள் ஒவ்வொருவரும் இணைன்து செயல்படுவதில்லையா?