"

யுனிக்ஸ் ஆபரேடிங் சிஸ்டத்தின்

கட்டமைப்பு.   (Unix Architecture)

யுனிக்ஸ்; மல்டி யூசர் & மல்டி டாஸ்கிங். என்னும் அடிப்படையில் உருவானது. யுனிக்ஸ் ஒரு மாடுலர் (Modular) புரோகிராம்.

இரண்டு வகை ஆப்பரேடிங் சிஸ்டம்கள் யுனிக்ஸ்  ஆப்பரேடிங்  சிஸ்டத்தின்  கட்டமைப்பின்  பல சிறப்புகளில்  ஒன்று,  மைக்ரோ  கெர்னல்  என்னும்  வகையான அதன் கட்டமைப்பு.

ஆப்பரேடிங்       சிஸ்டம்     கட்டமைப்பு   இருவகையானது இவை  (1) மோனோ லிதிக்- மற்றும் (2) மைக்ரோ கெர்னல்

முதலாவது மோனோ லிதிக் என்னும் வகை.. வாங்கிய ஆப்பரேடிங் சிஸ்டத்தை, (மென் பொருளை), புரோகிராம் கோடுகள் அனைத்தையும்  கம்ப்யூட்டரின் மெமொரி சுமக்கணும்.  தேவை இல்லாத கோஜிகளை கழற்றிவிட இயலாது.

இரண்டாவது  மைக்ரோ  கெர்னல்.  யுனிக்ஸும்,  லைனக்ஸும் மைக்ரோ கெர்னல் என்னும் வகையான கட்டமைப்பைச் சேரும்.

தேவையில்லாத புரோகிராம்களை கழற்றிவிடும் வசதி இதில் உண்டு. இதன் காரணமாக, பயனாளிகளின் கம்பூட்டரில் பயன்பாட்டிற்கு தேவையான மெமொரியில் இடம் அதிகமாகக் கிடைக்கும்.

யுனிக்ஸ்  உருவான  ஒரு  கற்பனைக்  கதையை,  இப்பொழுது படிக்கலாம்

பெர்கலி பல்கலைக் கழகத்தில் டீம்-யுனிக்ஸ் 

தயாராகவிருக்கும் யுனிக்ஸின் கட்டமைப்பை விவாதிக்க, பெர்கலி பல்கலைக் கழகத்தில் டீம்-யுனிக்ஸின் முதல் கூட்டம் கூடியது.

துவக்கிவைத்துப் பேசினார் துறையின் மூத்த அல்லது பெரிய பேராசிரியர். கம்ப்யூட்டர் துறைத்தலைவரான, அவரை மாணவர்கள். பெரிய பேராசிரியர்  என்று  குறிப்பிடுகிறார்கள் நாமும்  அப்படியே சொல்லுவோம்.

நமது மல்டிக்ஸ்   கனவு காற்றில் கரைந்து விட்டது. யுனிக்ஸ் கனவு நிரைவேற, அதன் கட்டமைப்பு  ஒரு மல்டி யூசர் என்பதன் அடிப்படையில் அமையவேண்டும் என்றார். அதற்கான ஒரு உபாயத்தை நாம் உருவாக்கவேண்டும் என்ரார்.

மல்டி  யூசர்  என்றால்  ஒரே  சமயத்தில்  பல  பயனாளிகளின் புரோகிராம்கள், கம்ப்யூட்டரரில் ஓடும் என்னும் பொருள் தரும்.

சரி, ஒரு பிராசஸரில் ஒரு சமயத்திலே ஒரே ஒரு புரோகிராம் தானே ஓடமுடியும்? ஆனால் ஒரே சமயத்தில் பல புரோகிராம்கள்ளை ஒரே ஒரு பிராசஸரில் ஓடவைப்பது எப்படி? அதற்கு ஒரு உண்மை வாழ்க்கையில் உதாரணங்கள் ஏராளாம்.

அப்படி ஓடவைப்பதில் வெற்றி கண்டால்  அதற்கு ஒரு பெயர் வேண்டுமே. அதற்கு போலியான கான்கரண்ட்   ப்ராசஸிங் (Psuedo concurrent processing)  என்று பெயரிடுவோம்.

ஏன்  வெற்றி  கிட்டாது  என்கிறார்,  கிட்டு  என்கிற  கிருஷ்ண மூர்த்தி. இவர் சென்னை கிண்டியில் பி.ஈ முடித்து, நல்ல GRE, TOFEL  ஸ்கோர் எடுத்து MS   படிக்க   பெர்கலியில் சேர்ந்துள்ள,  இவர் ஒரு டீம்-யுனிக்ஸ் அங்கத்தினர்.

பிராசஸரை மல்டி-டாஸ்க் செய்ய வைத்தால், மல்டியூசர் என்னும் மென் பொருள் அமைப்பது சுலபம்   என்கிறார் கிட்டு.

லீ என்னும்  சீன  மாணவரும் டீம்-யுனிக்ஸ் மெம்பர்,  அவர் கிட்டுவை மல்டி டாஸ்கிங் என்றால் என்ன? அதை வைத்து மல்டியூசர் மென் பொருள் எப்படி தயார் செய்வது என்று கேட்டார். அதற்கு கிட்டு அளித்த பதில் கீழே தரப்பட்டுள்ளது.

மல்டி டாஸ்கிங்      (multi-tasking)     என்றால் என்ன?

ஒருவரோ, அல்லது ஒரு இயந்திரமோ ஒரே சமயத்தில்  பல காரியங்களை செய்யும் திறன் கொண்டிருந்தால், அந்தத் திறனுக்கு, ஆதாரமாக  மல்டி-டாஸ்கிங் எனப்படும் யுக்தி தேவைப்படும்

இதற்கு,  உண்மை  வாழ்க்கையில்,  எண்ணற்ற  உதாரணங்கள் உள்ளபோது   இரண்டு உதாரணங்களை   மாத்திரம்   நான் சொல்கிறேன் என்கிறார் கிட்டு.

 

License

Icon for the Public Domain license

This work (தமிழில் யுனிக்ஸ் by nat123; நடராஜன் நாகரெதினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book