சி பி யூ
கந்தசாமி: சிபியூ, ஒரு பைலை உருவாக்குவதிலிருந்து, டிஸ்குலே சேமிப்பது, மாற்றி மைப்பது, எக்ஸிகூட்டபிள் பைல்களை எக்ஸிகூட் செயவது, பல ஐ-ஓ டிவைஸ்களை புரோகிராம்களின் தேவைக்கு ஏற்றபடி இயக்குவது எல்லாம் சரி.
பல புரோகிராம்களை ஒரே சமயத்திலே ஓட்டவதற்கு, சி-பி-யு. வேற என்ன செய்யுது?
நடராஜன்: ஒரு கம்ப்யூடர் பல புரோகிராம்களை ஒரே சமயத்திலே ஓட்டவதற்கும், கிராமத்தில் மணி அய்யர் ஓட்டல் இயங்குவதற்கும் ஒற்றுமை நிறைய இருக்கு.
கந்தசாமி: இப்ப கதை சொல்லப் போரீங்களாளா?
நடராஜன்: ஓட்டலில் இரண்டு இடங்கள்; ஒன்று சமையல் அறை. மற்றொன்று பயனாளிகள் அமர்ந்து பயன் பெறும் இடம்.
கம்ப்யூட்டர் மெமொரியை கெர்னல் ஸ்பேஸ், யூசர் ஸ்பேஸ் என்று இரு தனி இடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும் ஓட்டலின் சமையில் அறைக்கும் ஓட்டல் பயனாளிகள் உண்ணும் இடத்திற்கும் ஒப்பிடலாம். (இது ஏன் எப்படி என்பதை விளக்கமாக பிறகு பார்க்கலாம்).
(1) முதலாளி மாறி மாறி சமையல் அறை, மற்றும் பயனாளிகள் உணவு உண்ணும் அறை இரு இடங்களுக்கும் சென்று வேலை பார்க்கிறார்.
அதே போல, ஓட்டல் முதலாளி போன்ற சிபியூ, மெமொரியின் கெர்னல் (இடம்) ஸ்பேஸ், யூசர் (இடம்) ஸ்பேஸ் என்ற இரு இடங்களிலும் உள்ள புரோகிராம்களை மாறி மாறி (தேவைக் கேற்றவாறு) ஓட்டுகிறது.
(2) யூசர் புரோகிராம், கெர்னல் புரோகிராம்கள் உள்ள மெமொரிப் பகுதியை அடையக்கூடாது. அதுபோல ஓட்டலில் பயனாளிகள் எவரும் சமையல் அறைக்குள் செல்ல அனுமஅ¢தி இல்லை.
(3) ஓட்டல் முதலாளி வேலை செய்யும் விதம்மும், சிபியூ வேலை செய்யும் விதமும், ஒரு வேலைக்குப் போகும் அம்மா, தினம்தோரும் காலை வேளையில் செய்யும் வீட்டு வேலைகளை மல்டி டாஸ்கிங் செய்யர மாதிரி இல்லையா?
(4) ஓட்டல், யுனிக்ஸ் இரண்டிலும், பயனாளிகள் சேவை பெறுவதில் சிறிதளவு தாமதங்கள் உண்டு.
(5) ஓட்டல், யுனிக்ஸ் இரண்டிலும் சிறிதளவு தாமதங்கள் இருந்தாலும் (ஏறக் குறைய) ஒரே சமயத்தில் எல்லாப் பயனாளிகளும் சேவை பெறுகிறார்கள்.
இந்தவிதமாக சேவை அளிக்கும் முறையின் சாயல்களை உலகில் உள்ள எல்லா சேவைதரும் நிருவனங்களிலும் காணலாம்.
கந்தசாமி: ரொம்ப அழகா ஓட்டலையும் யுனிக்ஸ் செயல்படும் விதத்தையும் ஓப்பிட்டு சொல்லிட்டீங்க. இதன் சாயல்கள் அல்லது வரிவடிவங்கள் உள்ள வேறு சில சேவைகளைச் சொல்லமுடியுமா?
நடராஜன்: உடல் நலத்தில் குறைவு வந்தா ஒரு பெரிய மருத்துவ நிலையத்துக்குப் போகிறோம். அங்கே கொஞ்சம் மருத்துவர்கள் நர்ஸ் மற்றும் பலவித மருத்துவத் துறைகளிலே பயிற்சி பெற்ற மனுசங்க இருக்காங்க. அவங்களைவிட அதிகமான அளவிலே நோயாளிகள் இருககிரப்போ, பல சுற்றுகளிலே, வரிசையில் காத்திருந்து பயனாளிகள் மருத்துவ உதவி பெறுகிறார்கள்.
பயணமும் இந்த வித்தத்தில்தான் நடை பெறுகிறது.
கந்தசாமி: யுனிக்ஸுலே சிபியூவைப் பற்றி வேறு என்ன செய்திகள் உள்ளன?
நடராஜன்: இப்போ, பெர்கலி பல்கலைக் கழகத்தில் என்ன நடந்திருக்கும் என்று நாம் கற்பனையில் பார்க்கலாம்.
உதவிப்பேராசிரியர் கும்மிடிப் பூண்டி ராமசாமிதான் டீம்- யுனிக்ஸ் என்ற பெரும் குழுவின் உப-தலைவர்.
கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி அவரோடு ஒட்டிக் கொண்டு, நிரைய ஐடியா கொடுத்தார். ராமசாமி அவர்கள் தயாரித்த பட்டியல் ஒன்று சி பி யூ செய்ய வேண்டிய வேலைகளையும், செய்யும் விதத்தையும் கீழே கண்டதைப் போல தெளிவாகத் தெரிவித்திருந்தது.
- வடிவமைக்கும் பொழுது கம்ப்யூட்டரை, ஒரு கணித இயந்திரமாக இல்லாமல், ஒரு சேவை நிறுவனமாக மனதில் உருவகம் செய்து கொள்ள வேண்டும்
- சி பி யூ வின் செயல்பாட்டை ஒரு சேவை தரும் நிருவனத்தில் ஒரு பணி செய்பவராக எண்ணிப் பார்க்க வேண்டும்.
- ஒவ்வொரு பயனாளியின் புரோகிராமையும் ஒரு உயிருள்ள பயனாளியாகவே பார்க்க வேண்டும்.
- மெமொரி, டிஸ்க் ஆகியவற்றை புரோகிராம், மற்றும் டேட்டா என்ற ஒரு மென் பொருள் தங்கும் இடமாகக் கருதாமல் மனிதர்கள் தங்கும் இடமாகவே நினைத்துப் பார்க்க வேண்டும்..
- ஒரு ஒழுங்கான வரிசையில் அமர்த்தப் பட்டுள்ள ஒவ்வொரு (பயனாளிகளின்) புரோகிராமையும் ஒரு (Time-slice) சிறிய மணித்துளி (200 அல்லது 500 மில்லி செகண்டு) அளவில் ஓட்டப்படும்.
(இதன் அளவை கூட்டவோ குறைக்கவோ இயலும். ஒரு புரோகிராம் ஒரு நேரத் துளி¢ ஓட்டிய பிறகு, அது நிறுத்தப்பட்டு, அடுத்தடுத்துள்ள புரோகிராம்கள் ஒவ்வொன்றாக (அதே நேர அளவு ஓட்டப்படும். இந்த முறை ரவுண்டு ராபின் (Round Robin) எனப்படும்.
- இப்படி, வரிசையில் காத்திருக்கும் எல்லா புரோகிராமையும் ஒரு சுற்று முடிந்த பிறகு, மீண்டும் முதலிலிருந்து துவங்கும்.
புரோகிராம்களின் தன்மை, நீளம் ஆகிவற்றைப் பொருத்து ஒவ்வொரு புரொகிராமும், முழுமை பெற பல சுற்றுக்கள் தேவைப்படும். இதன் காரணமாக சிறிய புரோகிராம்கள் குறைந்த நேரமும் பெரிய புரோகிராம் அதிக நேரமும் எடுத்துக் கொள்ளும்.
- சிபியூ ஒரு உயிரில்லாத மின் இயந்திரம்- இதனால் தனித்து செயல்பட இயலாது. அது செயல்பட ஒரு சக்தி தேவை.
உ.பே ராமசாமி சொல்கிறார்; சி பி யூ வின் இயக்கத்தை உயிரரூட்டவும், சரியாக வழி நடத்தவும் கட்டுப்படுத்தவும், ஒரு மேல் அதிகாரிகளைப் போன்ற ஒரு அமைப்பு தேவை.
அதற்கு கெர்னல் என்ற பெயரிடுவோம். அதில் என்னென்ன புரோகிராம் எழுதிச் சேர்ப்பது என்பததைப் போகப்போக முடிவு செய்வோம்.
சிபியூ பிராசஸிங் செய்யவேண்டிய பயனாளிகளின் புரோகிராம்களை சரிபார்த்து ஒரு வரிசையில் தயாராக வைக்க தேவையான புரோகிராம்களை எழுத தனியாக பிராசஸ் மானேஜர் மாடூல் ஒன்றை உருவாக்க குழு எண் 2 க்கு , சிபியூ குழு சிபாரிசு செய்கிறது.
இதை ஏற்ற பயனாளிகளின் புரோகிராம் கையாளும் குழு எண் 2, சிபாரிசுகளைத் தன் பட்டியலில் சேர்த்துக்கொண்டது. எல்லாக் குழுக்களும், தங்கள் பட்டியலுடன் அடுத்த டீம்-யுனிக்ஸ் கூட்டத்திற்கு தயாரானார்கள்.