"

யுனிக்ஸின் ஐந்து மாடூல்கள்.

 

ஆறு குழுக்கள் ஐந்து    மாடூல்களைத்  தயாரிக்கும்  பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.

  1. பிராசஸ் மானேஜர், 2… மெமொரி மானேஜர், 3. ஐ ஓ மானேஜர், 4ஃபைல் சிஸ்டம் 5. நெட்வொர்க் மானேஜர்.

இந்தக் கூட்டத்தில் சில முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டன. எந்தக் காரணம்   கொண்டும் பயனாளிகளின்    புரோகிராமில் தவறான  எக்சிகூஷங்கள் நேரக்கூடாது.

ஒருவரின் புரொகிராம் மற்றவரின் புரோகிராமுடன் முட்டி, மோதி சேதம் கொள்ளவோ, சேதம் உண்டாக்கவோ கூடாது.

மேலே குறிப்பிட்ட        ஒவ்வொரு      மாடூலும்,   ஒரு    அல்லது இரண்டு அல்லது அதிகமான  அட்டவணை போன்ற ஒரு ஏற்பாடு தேவை. அதன் மூலம் குறிப்பிட்ட ஒரு யூசர் புரோகிராம் தொடர்பான விவரங்கள் மற்ற மாடூலுக்கு கிடைக்க வழி செய்யவேண்டும்.

பயன் பெறுவோர் அனுமதிக்ககப் பட்டவர்தானா என்று  உறுதி செய்து கொள்வது மிக மிக அவசியம். இதை உருவாகக வேண்டும்.

பயனாளிகள் எத்தனை  நேரம், மற்றும் எத்தனை அளவு கம்ப்யூட்டரை பயன் செய்திருக்கிறார்கள் என்று கணக்கிட்டு அதன் மூலம் ஒரு ’பில்’ தயாரிக்க ஒரு ஏற்பாடு அவசியம்., இப்படியாக, எச்சரிக்கைப் பட்டியல்         நீள்கிறது.

பிராசஸ் மானேஜர் மாடூல் என்ன   என்ன செய்யும்? இதைப் பார்க்கும் முன்னால் ஃபைல் சிஸ்டம் என்ன என்ற பார்க்கலாம்.

கந்தசாமி:    பைல்    சிஸ்டத்தை    ஏன்    முதன்    முதலா தெரிஞ்சுக்கணும்?

நடராஜன்:  யுனிக்ஸுக்கும் கவர்மெண்ட் ஆசீசுக்கும் நிரைய ஒற்றுமை இருக்கு. இரண்டு இடத்திலேயும்  அதிகம் பேசப்படுவது பைலகள்தான். யுனிக்ஸுலே, பிராசஸ் செய்வது, செய்யப்படுவதும், உள்ளே வருவதும், வெளியேறுவதும் பைல்களாகவே கருதப்படுகின்றன. அதுனாலேதான் என்று நினைத்துக்கொள்ளுங்களேன்.

License

Icon for the Public Domain license

This work (தமிழில் யுனிக்ஸ் by nat123; நடராஜன் நாகரெதினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book