ஃபைல்
மற்றும் ஃபைல் சிஸ்டம்
ஃபைலுக்கு, மனிதருக்கு உள்ளது போல ஒரு பெயர் உண்டு.
ஃபைல் பெயருக்கு மனிதரின் பெயருக்குப் பின்னால் இனிஷியல் உள்ளது போல, ஒரு (மூன்று அல்லது நாங்கு எழுத்தில்) ஒரு உபரிப் பெயர். இதை ஃபைல் எக்ஸ்டெண்ஷன் என்று அழைக்கப்படுகிறது.
ஃபைல் சிஸ்டம்.
கந்தசாமி: இந்த அத்தியாயத்தை சுத்தமா மனசிலே ஏற்றிவிட்டால் யுனிக்சின், ஐந்தில் ஒருபாகம் அடிப்படையை, சுத்தமாகத் தெரிந்து கொண்டதாக மகிழலாம். இல்லையா?
நடராஜன்: உண்மைதான். அடுத்து வந்த டீம்-யுனிக்ஸ் கூட்டத்தில் என்ன நிகழ்ந்ததுன்னு சொல்கிறேன்.
அந்த குழுவின் தலைவரான உதவிப் பேராசிரியர் க்ளார்க் ஒரு ஃபைல் எப்படி இருக்கணும், பைல்களை சேமித்து வைத்து, தேவைப்பட்டபோது எளிதாக எடுத்துப் பயன் படுத்த ஒரு பைல் சிஸ்டம் என்ற அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்கினார். அலுவலகங்களில் கூட கிளார்க்குகள் தானே பைல்களை கையாளுகிரார்கள்).
நடராஜன்: உ.பே , திருவாளார் கிளார்க் விளக்குகிரார்.
“யுனிக்ஸின் பார்வையில் கம்ப்யூட்டரில், இயங்குவதும், இயக்குவதும் இயக்கப்படுவதும் ஃபைல்கள் தான்.
உண்மை வாழ்க்கையில் நாம் பைல்களை உருவாக்கி, பத்திரமாக சேமித்து வைத்து பயன் படுத்தும் விதமாக, யுனிக்ஸின் பைல்களையும் வடிவமைத்தால் யுனிக்ஸின் செயல்பாடு சிக்கல் இல்லாமல் இருக்கும் என்றார்.
பைல்களின், பெயரிடுவதில் பயன்பாட்டில், சேமிப்பது, முதலான அனைத்தும் நாம் பயன் த்தும் முறையைக் கையாளவேண்டும்.
அப்பொழுதுதான், யுனிக்ஸ் உருவாகும் போது, பைல் சிஸ்டத்தில் பிரச்சனை வரும். அப்போது உண்மை வாழ்க்கையில் எழும் பிரச்சனையை வைத்து, பைல் சிஸ்டத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எளிதென்றார்.
கந்தசாமி; ஆபீசுலே பைல் காணாமப் போனா பியூனுக்கு காசு தரணும். யுனிக்ஸ் பைல் காணாமப் போனால், அது எங்கே ஓளிஞ்சிருன்தாலும் ( Find, locate) போன்ற கமாண்டுகளைக் கொண்டு ஒரிரு நிமிடங்களில் கண்டு புடிச்சிரலாம். மற்றபடி ஓகோன்னு வித்தியாசம் எதும் இல்லை).
நடராஜன்: தேடுவதற்கு வசதியாக பைலுக்கு பெயர்கள் தேவை.
யுனிக்ஸ் உள்ளே பல ஆயிரக்கணக்கில் தங்கி இருப்பதும், வந்து போவதும், பைல்களே.. எனவே அவற்றை சரியாக அறியவேண்டும்.
ஒரே பெயரில் இரண்டு அல்லது அதிகமான பைல்கள் இருக்கும் வகையில் பெயருண்டு. உலகத்தில், பிறந்த எல்லா, மனிதனுக்கும், ஒரு பெயர் மட்டும் போதாதென்று ..ஊர்ப் பெயர், அப்பா அல்லது அம்மாவோட பெயர் சேர்ப்பது .குழப்பத்தைக் குறைத்தது
இது போதாதென்று செய்யும் தொழிலையும் பெயருடன் சேர்த்து குறிப்பிட்டது ஒரு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். எப்படி?
பெயரைக் கேட்வுடனே இவருக்கு என்ன தொழில் தெரியும் என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள். இது இவரின் பிழைப்பிற்கு உதவும்.
கந்தசாமி; ஆனால் தங்களுக்கு செய்யத் தெரியாத, ஆனால் மூதாதையர் செய்து வந்த, ஒரு தொழிலை தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்வது சரிதானா? வள்ளலார் பாரதியார் போன்ற ஞானிகள் சாதியை ஒழிக்கச் சொல்லிட்டாங்க. ஆனா, அது தான் ஒழியமாட்டேங்குது. போகட்டும் விடுங்க.
எல்லா ஆபீசுலேயும் பைல்கள் இருக்கும். அது அசைஞ்சாத்தான் காரியமே நடக்கும். (அதை அசைக்க பியூன்லேருந்து அதிகாரிவரையும் சில ஆபீசுலே காந்தி போட்டோவைத் தரணுமின்னு கேள்வி)
நடராஜன்: கம்ப்யூட்டர்லே உள்ள சில பைல்களும் அசையணும் எந்த எந்த பைல்கள் எப்போ எங்கே எப்படி அசையுதுன்னு விவரமா பின்னாலே பாக்கப் போறோம்.
கலர்க் கலரா அட்டையிலே பைல் கவர் செஞ்சிருப்பாங்க. அதுலே காகிதங்களை கோத்து வைக்க கயிறு அல்லது உலோகத்தகடு அதில் இணைக்கப்பட்டிருக்கும். அட்டையின் முகப்பின் பெயர் எழுத வசதியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
ஆபீஸ் பைல்லே என்ன இருக்கும்? குறிப்புகள் செய்திகள் மற்றும் உத்தரவுகள், விண்ணப்பங்கள் போன்ற காகிதங்களையும் இதற்கு தமிழ்ப் பெயர் கோப்பு.
கந்தசாமி: நம்ம வீட்டிலே பைல் வச்சிரிப்போம். அதன் உள்ளே, நாம வாங்கின பட்டம், சான்றிதழ்க்ள், வேலைக்கான உத்தரவு போன்ற எல்லா முக்கிய ஆவணங்கள் மற்றும் காகிதங்களை வச்சிருப்போம்.
வீடு வாசல் வசதி உள்ளவங்க பத்திரம், வரி கட்டினதற்கான அத்தாட்சி மற்றும் பல காகிதங்கள் இருக்கும். எல்லாத்தையும் ஒரு தனியா ஒரு கோப்பிலே போட்டிருப்பங்க.
வங்கியிலே பணப் போட்ட காகிதம் எல்லாத்துக்கும் ஒரு தனி கோப்பு இருக்கும் இல்லையா?
இதுலே பாருங்க, எல்லா கோப்பும் வீட்டிலெயா வச்சிருப்போம்? பத்திரங்கள் பத்திரமா இருக்க பெரும்பாலும் பாங்கு லாக்கரில் வக்சு தேவைப்பட்டபோது பாங்கிலேருன்து கொண்டு வந்து பயன்படுத்துவோம், இல்லையா?.
பாங்கிலே வைத்துள்ள பைல்களை, பாங்கிலிருந்து கொண்டு வந்து பயன்படுத்த சிறிது நேரம் செலவாகும் ஆனால், பாங்கிலே இருக்கிற பைல் பத்திரமாக இருக்கும். வீட்டிலே அவ்வளவு பத்திரம் இல்லை.
நடராஜன்: அப்படித்தான், மெமொரியிலே சேமிக்கிர பைல்கள் வீட்டிலே வச்சிருக்கிர பைல் மாதிரி. வேகமா எடுக்கலாம் பத்திரம் இல்லை. கம்ப்யூட்டரில் பவர் இருக்கும் வரைதான் பைல் பத்திரமாக இருக்கும். கம்ப்யூட்டர் மெமொரியிலேயே பைல்களைப் பிராசஸ் செய்வதற்காக வக்சிருப்போம்.
பின்னாளில் பயன்படும் என்றால் பைல்களை பாதுகாப்பா டிஸ்க் டிரைவிலே சேமிக்சு வக்சுடுவோகீம். தேவைப்பட்டபோது மெமொரிக்குக் (காப்பி செய்து) பயன்படுத்துவோம்.
பைலுக்கு ஒரு பெயர்
பைல் அட்டையிலே பெயர் எழுதத் தனியா இடம் ஒதுக்கியிருக்கும் என்று பார்த்தோம்
ஒர் பைலில் பல பைல்களை சேமித்து வைக்கலாம். பைல்கள் அடங்கிய பைலுக்கு போல்டர் (Folder) என்று பெயர். பெயருக்கு ஒரு இனிஷியல்
.பைல் எக்ஸ்டண்ஷன் எதற்காக? நமது பின்னாலே அப்பா பெயர், ஊர்ப் பெயர் மற்றும் ஜாதிப் பெயரை வைக்க என்ன காரணம்? அதேகாரணம்தான். பைல் பின்னாலே உள்ள மூணு அல்லது நாலு எழுத்துகள்.. இந்த உபரி எழுத்துகளை மையமாக வைத்துத்தான் கம்ப்யூட்டரின் முக்கிய பல இயக்கங்கள் நடைபெறுகிறது..
பைல்களை என்னவெல்லாம் செய்யலாம்?
காகித பைலோ இல்லை யுனிக்ஸ் பைலோ, எந்த பைலா இருந்தாலும் அதைப் (1) படிக்கலாம். அதுனுள்ளே (2) எழுதலாம்;.. இரண்டும் செய்யும் முன்னாலே பைலை (3) திறக்கணும். அதன் பிறகு தான் பைலில் படிக்கவோ எழுதவோ முடியும். படிச்சு அல்லது எழுதி முடிஞ்சப்புரம் பைலை, முறையா (4) மூடணும்.. திறந்த பைலில் (பக்கத்தைப் புரட்ட என்று சொல்லுவோமே) அப்படி படிப்பது எழுதுவதல்லாத சில வேலைகளுக்குக் கிழிக்கக் கிழிந்த்தை ஒட்ட என்று கடைசியாக (5) கண்ட்ரோல் என்ற ஒன்றை ஐந்தாவது வேலையாகக் சொல்லலாம். பைல் தொடர்பாக கம்ப்யூட்டர் கமாண்ட் மேலே விளக்கிய ஐந்து கட்டளைக்குள் அடங்கும்.
வாசகர்களே மறக்காதீங்க.!
- கம்ப்யூட்டர்லே நாம பிராசஸ் செய்யக் கொடுப்பதும் பிராசஸ் செய்து பெறுவதும் பைல்களே. முக்கியமா,
- டிஸ்க், பிரிண்டர், நெட்வொர்க் போர்ட் முதலான, கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட எல்லா கருவிகளுக்கும் அனுப்புவதையும், அவற்றிலிருந்து பெறுவதும் ஒரு பைலில் எழுதுவதாக அல்லது படிப்பதாகவே, புரோகிராமர்கள் உணர்வார்கள்.பைல் எக்ஸ்டண்ஷன் எனப்படும் பைல்களின் இணை பெயர்,
பைல் எந்த வகையைக் சேர்ந்தது? அதைப் பயன் படுத்த எந்த மென்பொருள் (சாப்ட்வேர் தேவை என்பதைக் கண்டுபிடிக்க உதவுகிறது..
ஃபைல்களில் வகைகள்
கம்ப்யூட்டர் பைல்களில், சாதாரண பைல் வகைகள், மற்றும் பைல் போல்டர்கள் இரண்டையும் பார்த்தோம். இதல்லாமல், வேறு வகை பைல்கள் உண்டு. அவை;
c, pdf, doc, html, txt, mov, mp3, wav,
(இவற்றின் விளக்கத்தைத் தேடிப் படியுங்கள்.)
பைல்களிலே மேலே போட்ட பட்டியலைத் தவிர வேற சில விதமான பைல்களும் உண்டு. இவற்றை இண்டெர்னெட் உதவியுடன் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Symbol File type
– Regular file
d Directory
l Link
c Special file
s Socket
p Named pipe
b Block device
ஃபைல் சிஸ்டம்
எல்லா பைல்களையும் பத்திரமா வைக்க ஒரு இடம் வேணும் இல்லையா? அதுதான் பைல் சிஸ்டம் என்பது… பைல் சிஸ்டம் ஒரு மென்பொருள்தான் (Software). மேலே விவரித்த நான்கு பாகங்கள் பைல் சிஸ்டத்திலுள்ள பல பைல்களுக்கும், பைல் போல்டர்களுக்கும் பொதுவானது.
இப்போ லைனக்ஸ் பயன் படுத்தும் பைல் சிஸ்டம் ஒன்றின் அதிலுள்ள போல்டர்கள் என்ன என்ன என்பதை விளக்க ஒரு படம் கீழே தரப்பட்டுள்ளது.
நடராஜன் : ஆனால் ஒன்றோ அல்லது அனேக பை சிஸ்டங்களை அமர்த்த , ஒரு ஹார்டுவேர் (Hardware) அவசியம்.
உதவிப் பேராசிரியர் தன் விளக்கத்தைத் தொடர்ந்தார்.
ஒரு அலுவலகம் அமைக்க ஒரு கட்டிடம் கட்ட எதில் எல்லாம் கவனம் தேவையோ, அதே கவனம் பைல் சிஸ்டத்தின் கட்டமைப்பிலும் தேவை.
முக்கியமாக, சேமித்து வைத்த (1) பைல்களின் பாதுகாப்பு, (2) கட்டமைப்பில் உறுதி, (3) பராமரிப்பிலும் செயல்பாட்டிலும் எளிமை, இவற்றை அடிப்படை தேவையயாக முன் வைத்து உள்ளோம். மாதிரி கட்டமைப்பு ஒன்றை, பின் வரும் படத்தில் தந்துள்ளோம்.
டிஸ்குலெ உள்ள இடத்தை சிறிய சிறிய பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கும். அந்தச் சிறிய பகுதி, செக்டார் எனப்படுத்ம். அதன் கொள்ளளவு. 512 பைட் அல்லது அதிகமா 2 அல்லது 4 கிலோ பைட் கூட சேமிக்க இயலும்..
நாம் தினசரி பயன்படுத்தும்,. புத்தகம், நோட்டு ஆகியவற்றில் ஒவ்வொன்றும் வெவ்வேறு நீள அகலங்களில் இருப்பதால் ஒவ்வொறு பக்கத்திலும் கொள்ளளவு வேறுபடுகிறது, இல்லையா?
புத்தகங்களில் ஒவ்வொரு அத்தியாயமும் பல பக்கங்களால் ஆனது. அதேபோல, பைல் சிஸ்டத்தில், ஒரு பைல், பல செக்டார்களாலானது.
பைல் சிஸ்டத்தில் உள்ள Folders:
Sl No Description
1 /root This is the root directory which should contain only the directories needed at the top level. 2 /kernel கெர்னல் சம்பந்தமான பைல்கள்
3 /usr பல பயனாளிகள் பயன் படுத்தும் பைல்கள். administrative commands, shared files, library files
4. /home home directory for users and other accounts.
5 /bin executable files. available to all user.
ஃபைல் சிஸ்டத்தின் நான்கு பாகங்கள்
மொத்த பைல் சிஸ்டத்தை நான்கு பகுதிகளாக பிரித்துள்ளோம்.
(1) பூட் பிளாக், (2) ஐ-நோடு பிளாக், (3) டேட்டா பிளாக் (4) சூப்பர் பிளாக்.
- பூட் பிளாக்: ஆப்பரேடிங் சிஸ்டம் என்பது மொத்தமா ஒரு மென் பொருள்தான். அதற்கென்று தனியாக இடம் வேணும். அதை மற்ற பைல்களிலிருந்து பிரித்து வைக்க வேண்டும். அதற்கென்று ஒரு பிளாக்கை ஒதுக்குவோம். இதன் ஒரு பிரதி, கம்ப்யூட்டரை பவர்-ஆன் செய்யும் பொழுது, பூட் லோடர் புரோகிராம் என்னும் ஒரு சிறிய மூலம், மெமொரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
- சூப்பர் பிளாக்: காலியா இருக்கும் செக்டார்கள்.
- டேட்டா பிளாக் :உபயோகத்தில் உள்ள செக்டர்கள்.
- ஐ – நோடு பிளாக்: பைல்கள் எந்த எந்த செக்டர்களிலே இருக்கிறது என்ற விளக்களைக் கொண்டது.
வரவு – செலவு குறிக்க உதவும் அக்கௌன்ட் நோட்டுப் புத்தகத்திலே Index என்று முதல் சில பக்கங்கள் இருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட தகவல் எந்தப் பக்கத்தில் கிடைக்கும் என்று குறிக்கப் பட்டிருக்கும். இந்த பைல் சிஸ்டத்திலே இருக்கிற ஐ-னோடு (inode) அதே உபயோகம் தருது. இது சொல்லுவது – ஒவ்வொரு பைலும், எங்கே இருக்கு என்னும் தகவல்.
பைல் பெர்மிஷன்; யார்ரெல்லாம் இந்தப் பைலைப் பார்க்கலாம்? படிக்க எழுத இரண்டிற்கும் அனுமதி உண்டா? படிக்க மாத்திரமா?
யார் இதை மாற்றி அமைக்கலாம் என்று பலவித குறிப்பும் உடன் இருக்கணும். (என்போம்).
பைல் சைஸ்; மிகச் சிறிய பைல் ஒரு செக்டாருக்குள்ளே ஒக்காந்திரும். கொஞ்சம் பெரிசா இருந்தா, இரண்டு மூணு செக்டார் வேணும்.. சில பைல்கலுக்கு நூறு செக்டார் கூட போதாது..
பைல் எந்த செக்டாரிலே தொடங்குது / என்னும் விவரம் மட்டும் போதாது, அடுத்தடுத்து பைலோட செக்டார் குறித்த விவரம், கடைசி செக்டார் வரை எல்லா செக்டாரையும் பட்டியல் போடணும்.
கந்தசாமி: இதுவரை வந்த விளக்கம் நல்லா இருக்கு. இதிலே இரண்டு சந்தேகம் என்கிறார், ஒரு பைல், 50 செக்டாரிலே இருந்தா, ஐ-நோடுலே 50 செக்டார்களைக் குறித்த தகவலும் இருக்குமா? அது கொஞ்சம் அனாவசியமா படுதே!
முதல் செக்டாரின் அடையாளமும், அதன் பின் எத்தனை செக்டார்கள் உள்ளன என்று குறிப்பிட்டால் போதாதா?
நடராஜன்: இதே கேள்வியை அந்தக் காலத்திலேயே, கிட்டு என்ற கிருஷ்ணமூர்த்தி கேட்டு உதவிப் பேராசிரியர் க்ளார்க் இதற்கு பதில் சொன்னாராம்..
“குழு உறுப்பினர்களும் நானும் வெவ்வேறு நூலகங்களைப் (லைப்ரிகளை) பார்வையிட்டோம்.. இங்கே.பைல்கள் என்றால் அங்கே புத்தகங்கள். மற்றபடி செயல்பாடுகள், அதில் எழும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் எல்லாவற்றிலும் பல ஒற்றுமைகள் உள்ளன”
“புத்தகங்கள் வாசகர்களிடம் வருவதும் போவதும் வருவதுமாக இருக்கும். சில புத்தகங்ககளை படிக்கலாம் ஆனால் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை”.
லைப்ரேரியன் எதிர்கொண்டு, எப்படி சமாளித்தார்கள் என்று கேட்டு அறிந்தபொழுது பைல் சிஸ்டம் தயாரிப்பது, குழந்தைகளில் விளையாட்டைப் போல, சுலபமாகிவிட்டது”.
உதவிப் பேராசிரியர் க்ளார்க் தொடர்ந்தார். இப்போது நாங்கள் விளக்கிய ஐனோடு பிளாக்கில் பைல்களின் பகுதிகள் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்..
ஒரு பைல், ஹார்டு-டிஸ்கிலெ ஐம்பது செக்டார்களை ஆக்கிரமித்துக் கொண்டால், அந்த ஐம்பது செக்டார்கள் இருக்கும் இடத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஐ-நோடு பிளாக்கில் முதல் பத்து வரிகளில் குறிப்பிடப்படும்.
கந்தசாமி: மீதம் நாற்பது செக்டார் டேட்டாவை எங்கே எழுதணும்? ஐனோடு டேபிளில் உள்ள மீதம் மூணு வரியிலே என்ன எழுதுவோம்?
நடராஜன்: இதை யுனிக்ஸ் டிசைன் புத்தகம் இல்லையினானா இண்டெர்னெட்டுலே சுலபமா தேடி படிச்சுக்கலாம். நாம், பொதுவா புத்தகங்களிலே விளக்காதவற்றை மட்டும் சொல்லப் போறோம். இப்போ, ஏன் என்பதற்கான பதிலை¢, கிளார்க் சொல்கிறார்
ஒரு கம்ப்யூட்டரில், பயனாளிகள், புதிய புதிய பைல்களை அடிக்கடி உருவாக்குவதும், சிலவற்றை அழிப்பதும், மாற்றி அமைப்பதும் ஒரு தவிற்க முடியாத செயல்.
இதன் விளைவாக, தொடர்ந்து உள்ள. இடைவெளி இல்லாத, அதிக அளவிலான ஃப்ரீ பிளாக்ஸ் (டேட்டா பிளாக்ஸ்) கிடைக்காது. அதனால் டிஸ்கிலே உள்ள இடத்ததை முழுமையாக பயன்படுத்த முடியாது..
பைல் சிஸ்டத்தின் பயன்பாட்டில், சில மாதங்களுக்கு பிறகு, தொடச்சியாக பத்து அல்லது நூறு செக்டார்கள் கிடைக்காது. இடைவெளி இல்லாத, தொடர்ந்து உள்ள செக்டார்களில்தான்
.பைல்கள் உருவாக்குவேன் என்று அடம்பிடித்தால், உங்கள் கேள்வி நியாயமானதே! முதல் செக்டர் இருக்கும் இடத்தையும் எத்தனை செக்டார் என்பதைக் குறிப்பிட்டால் போதுமான்து.
அப்படிச் செய்தாலோ, டிஸ்க் முழுமையாக பயன் படுத்தப்பட இயலாது. தொடர்ந்து உள்ள செக்டார்களில் பைல்களை சேமிப்பு மற்றும் பயன்பாட்டிலும், இடைவெளி உள்ள செக்டர்களில் பைல் சேமிப்பதற்கும் வேறுபாடு உண்டு.
அது, பைல்களில் எழுதும் வேகமும் பைலிலிருன்து படிக்கும் வேகமும் குறையும்..
இந்த பிரச்சனையை சரி செய்ய “டீ ப்ராக்மெண்டேஷன்” (Defragmentation) என்னும் software கொண்டு கையாள்கிரோம்.
உண்மையில் அதற்கு என்ன செய்யலாம் என்று விவாதித்த பொழுது மன்னார்குடி மாதவன் என்ற ஆராய்ச்சி மாணவர், இந்தியாவில் பெரிய குடும்பங்கள் ரயில் பயணம் செய்வதை விளக்கினார். அதன் அடிப்படையயில் ஐ நோடு பிளாக்கை வடிவமைத்தோம் என்கிறார்.
பெரிய குடும்பம் செய்யும் ரயில் பயணம்.
ஒரு பெரிய குடும்பம் ரயில் பயணம் செய்யும்போது அடுத்தடுத்து அனைத்து நபர்களுக்கும் இருக்கை (அல்லது ஸ்லீப்பர்) கிடைக்காது. அங்ககொன்ரும் இங்கொன்றுமாகத்தான் கிடைக்கும்.
அதே போல ஒவ்வொருவரும் தன்னுடன் கொண்டு வரும் பெட்டி பைகள் போன்றவை வைக்கவும் தொடராக இடம் கிடைக்காது. கிடைத்த இடத்தில் மனிதரும் பொருட்களும் தனித்தனியாக பயணம் செய்யும். பின் இறங்கும் இடத்தில், பெட்டிகளும் மனிதர்களும் ஒன்று சேர்வதில்லையா?
டிசைனுக்கு சி-புரோகிராம் எழுத வேண்டும் .என்று முடிக்கிறார், உதவிப் பேராசிரியர் க்ளார்க்.
வாசகர்களே லைனக்ஸ் கற்பதின் முழுப்பயன் உங்களை அடைய,: உங்களுக்கு ஒரு பயிச்சி.
- லைனக்ஸ் பைல் சிஸ்டம் என்று கூககுள் செய்து (படத்தில் கண்ட) ஒவ்வொரு வார்த்தை அதன் பயன் -இரண்டையும் படித்து பயன் பெற வேண்டும்.
- இரண்டு அல்லது அதற்கு அதிகமான பைல் சிஸ்டங்களை ஒப்பபிட்டுப் பார்த்து முக்கிய வேறுபாடுகளைப் பட்டியல் போடுங்கள்.
- டி-ஃப்ரேக்மெண்ட் என்றால் என்ன? அதற்கான புரோகிராம் வேலை செய்யும் வித்ததையும் கண்டுபிடியுங்கள்.
வாசகர்கள் கவனிக்க வேண்டியது:
- ஒரு சேமிப்பில் டிஸ்க், பென் டிரைவ், சி டி ரோம் டிரைவ் போன்ற எதுவாக இருந்தாலும் ஒன்று அல்லது அதற்கு அதிகமான பைல் சிஸ்டங்களை வைக்கலாம்..
- டிஸ்கிலே எத்தனை பைல் சிஸ்டம் இருந்தாலும் ஒரே ஒரு பைல் சிஸ்டத்தில்தான் பூட் பிளாக்கில் ஆப்பரேடிங் சிஸ்டம் இருக்கும். மற்ற இடங்கள் காலியாக இருக்கும்.
- ஆப்பரேட்டிங் சிஸ்டம் சேமிக்கப் பட்டிருக்கும். இதர பைல் சிஸ்டங்களின் பூட் பிளாக் காலியாகவே இருக்கும்..
- எல்லா பைலையும் படிக்கலாம் எழுதலாம். ஆனா, எழுதும் முன்னாலே திறக்கணும். எழுதின பிறகு பைலை மூடிடணும்.
மொத்தம் ஐந்து கமாண்டுகள் மூலம் பைல்களைக் கையாள முடியும்.அவை குறிப்பிட்ட பைலை
(1) திறப்பது (2) படிப்பது (3) எழுதுவது (4) மூடுவது (5) ஐ-ஒ கண்ட்ரோல் என்பவை.
ஐ ஓ கண்ட்ரோல் பற்றிய விளக்கம் தற்போது அவசியம் இல்லை. சில மெகானிகல் (டிஸ்க் டிரைவ் பிரிண்டர் வோன்றவை) உபகரணங்களைக் கையாள இந்த கமாண்ட் அவசியம். பைல் சிஸ்டங்களில் பல வகைகள் உண்டு.
இதில் ஒரு வகை, மெயின் மெமொரி என்றெல்லாம் சொல்லப்படும் கம்ப்யூட்டரின் மெமொரியில் அது உருவாகி, கம்ப்யூட்டர் பவர்- ஆஃப் செய்யும்போது அழியும் வகையான பைல் சிஸ்டங்கள்.
சில பைல் சிஸ்டங்கள் லைனக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்காகவே உருவாக்கப் பட்டவை. வாசகர்கள், FAT-16, FAT-32, போன்ற சில பெயர்களை கேட்டிருக்கலாம்..
இவற்றின் அமைப்பையும் இவற்றினிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் கண்டு அறிவது வாசகர்களுக்குப் பயன் தரும்.3. பைல் சிஸ்டங்களுக்குள், வேறுபாடு அதன் கட்டமைப்புகளில் காணப்படும். ஓவ்வொரு வீடு, பள்ளி, மருத்துவ நிலையம் அல்லது ஒரு அலுவலகக் கட்டிடத்தில் அறைகளின் அமைப்புகளில் உள்ளது போல ஃபைல் சிஸ்டங்களுக்குள் அதன் அமைப்பில் காணப்படும்.
இவை சீராகவும் சிறப்பாகவும் வேகமாகவும் செயல்பட பைல் சிஸ்டம் மாடோலில் டேட்டா ஸ்டட்சர்கள் உண்டு.
ஒரு ஆப்பரேடிங் சிஸ்ட்த்திலுள்ள பைல் சிஸ்டம் மாடோல் எல்லாவித பைல் சிஸ்டங்களையும் கையாளா முடியுமா?
VFS வர்ச்சுவல் பைல் சிஸ்டம், என்னும் ஒரு மென் பொருள் இந்த பிரச்சனையை சமாளிக்கும்.கீழே கண்ட வரைபடம் இதன் பயனை தெளிவாக்கும்.
அடுத்த டீம் -யுனிக்ஸ் கூட்டத்தில் ஃபைல் சிஸ்டம் கட்டமைப்பு விளக்கப்பட்டது.
அது சிறப்பாக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. இப்போது, பல யூசர்கள் டிஸ்க்கில் உள்ள ஒரு ஃபைல் சிஸ்டத்திலிருந்து ஒரு அவர்கள் உருவாக்கிய அல்லது பயன் படுத்தும் ஒரு எக்ஸிக்கூட்டபிள் பைல்களை எப்படி ஓடவைப்பது என்பதை எந்தக் குழு எப்படி கையாளப் போகிறது என்று விவாதிக்கலாம் என்றார். தலைமைப் பேராசிரியர்,
இந்த டீம்-யுனிக்ஸ் குழுவில் ஒரு பெர்கலி யுனிவர்சிடி உதவிப் பேராசிரியர் ராம நாராயனன். என்று ஒருவர், இருந்தார். அவர் தூரப்-பார்வை உடையவர் என்ற புகழ் பெற்றவர். அவர், எக்ஸிகூட்டபிள் இல்லாத பைல்களயும் சி.பி.யூ எவ்வாறு கையாளும் என்பதயும் விளக்கணும் என்கிறார்.
அதை ரொம்ப சிம்பிளாக செய்திடலாம். பைல் பேரு பின்னாலே ஒரு வால் வச்சிருக்காங்க இல்லையா, அதை வச்சு அது எந்த விதமான பைல் என்று கண்டு பிடிச்சுடலாம்.
அதை ஆதாரமாக வைத்து எந்த புரோகிராம் வேண்டுமோ அதை முதலில் ஓடவிடணும். உதாரணமா, னீஹ்யீவீறீமீ.ஜீபீயீ என்று ஷெல்லிலே தட்டினா, ஃபைல் ஓட என்னவேணும்? அக்ரோபேட் ரீடர் ஓடணும். அது . னீஹ்யீவீறீமீ.ஜீபீயீ என்கிர பைலை ஓட்டிடும்.
பைல் சிஸ்டம் என்னும் மாட்யூல் என்ன செய்யணும்?
ஃபைல் சிஸ்டம் என்னும் மாடூல். செய்யும் வேலைகளில் முக்கியமானவை:
- தேவைக்கேற்ப புதிய பைல்களை உருவாக்குவது,
- முன்னமே தயாரான பைல்களில் தேவையான மாற்றம் செய்ய வழிசெய்வது,
- தேவை இல்லாத ஃபைல்(களை) போல்டரிலிருந்து நீக்குவது.. மாற்றி அமைக்க அல்லது ஓட்டத் தேவைப்படும் போதெல்லாம்
பைல் சிஸ்டத்தில் உள்ள பைல் மெமொரியில் சேர்க்கப்படும். மாற்றி அமைத்த பிறகு மெமொரியில் உள்ள பைலை ஃபைல் சிஸ்டத்தில் சேர்க்கப்ப்டும்.
பைல் சிஸ்டம் புரோகிராகளை கொண்டு மேலே குறிப்பிட்ட வேலைகளைச் சுத்தமாகவும், பிழை இல்லாமலும் செய்தால் போதும். மற்ற தேவைகளை சமாளிப்பது எளிது என்கிறார்.
உ.தவி பேராசிரியர் கும்மிடிபூண்டி ராமசாமி அவர்கள், இந்த இடத்திலிருந்து பைல் சிஸ்டம் புரோகிராம்களை நாங்கள் கையாளத் திட்டமிட்டுள்ளோம் என்கிறார், அடுத்து வரும் நாட்களில் டீம்-யுனிக்ஸ் கூட்டத்தில் பிராசஸ் மானேஜ்மெண்ட்குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்கிறார்.
ஒரு யூசர் யுனிக்ஸிலே லாகின் (login) செய்துவிட்டு, ஷெல்லிலே எக்ஸிக் என்று தட்டி (பைல் பேரு) அடிக்கணும். அவ்வளவுதான். பிராசஸ் மானேஜர் தன் வேலையை ஆரம்பிக்கும்.
இப்போ மெமொரி மானாஜ்மெண்ட் மாடூலுக்குப் போகலாம். பிறகு பிராசஸ் மானேஜர் மாடூலுக்குப் போகலாம்.