இதைப் படித்து முடித்ததும், வாசகர்களுக்கு யுனிக்ஸ் எவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது, பல பயனாளிகளின் புரோகிராம்கள் எப்படி ஒரே நேரத்தில் ஓட வைக்கப் படுகிறது, அதில் எழும் பொதுவான சிக்கல்கள், அதை முறியடிக்கும் யுத்திகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். இப்போது, Design of Unix System by: Maurice Bach என்னும் புத்தகம் இண்டர்னெட்டில் இலவசமாக கிடைக்கும்.
அதை, இந்தப் புத்தகத்தைப் படித்தபின் படித்தால், சுலபமாகப் புரியும். பிறகு இவற்றை ஐ.பி.சி, சிக்னல், சிஸ்டம்கால்களை எப்படி புரோகிராம் மூலம் கையாள்வது என்று தெரிந்து கொண்டால், ஒரு சிஸ்டம் புரோகிராமரா£க வளர வழி செய்யும்.
யுனிக்ஸ் மாணவர்களுக்காக, கேள்விகள், பயிற்சிகள் மற்றும் செய்திகள் உப்யோகமான லிங்க் போன்றவை, கீழேதந்துள்ள, பிளாகில் தொடரும்.
http://unixprogramming-without-tears.blogspot.in/
நடராஜன் நாகரெத்தினம்