அறிவதின் ஆழங்கள்
யுனிக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள என்ன என்ன இருக்கு?
யுனிக்ஸ் ஆப்பரேடிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை பலவிதமான மக்கள் அலுவலர்கள் பயன்படுத்துகிறார்கள். அத்தனைபேரும் யுனிக்ஸ் குறித்து எல்லாமே அறிந்திருக்க வேண்டுமா?
அவசியம் இல்லை.
அதிகமான அளவில் பயனாளிகள் (Users) என்னும் மக்கள் உள்ளார்கள். இவர்களுக்கு குறைந்த அளவு யுனிக்ஸ் அறிவு தேவை. கமாண்ட் அல்ல்து கம்ப்யூட்டருக்குத் தரவேண்டிய கட்டளைகளை அறிந்திருக்கவேண்டும்.
சமீபகாலத்தில், விண்டோஸ் என்னும் ஒரு ஏற்uபாடு மைக்ரோ சாஃப்ட் நிருவனம் தயாரிக்கும் விண்டோஸ் ஆப்பரேடிங் சிஸ்டத்தில் உள்ளது போன்ற ஏற்பாடு தற்போது யுனிக்ஸ் ஆப்பரேடிங் சிஸ்டத்திலும் வ்ந்துவிட்டது.
இதனால், பயனாளிகள் கமாண்டுகளையும் நினைவில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விண்டோவில் காணப்படும் படங்க்ளை வைத்தே, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
அறிவதின் ஆழங்கள்
கந்தசாமி: சாப்ட்வேர் எஞ்சினியர்கள் எல்லோருக்குமே யுனிக்ஸ் அறிவு வேணுமா? கல்வியிலே ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என்று பல நிலைகள் இருக்கு இல்லையா? யுனிக்ஸ் அறிவிலும் நிலைகள் உண்டா?
நடராஜன்; யுனிக்ஸ் பற்றிய அறிவை மூன்று கட்டங்களாளாகப் பிரிக்கலாம்.
- முதல் கட்ட அறிவு: இதுவரை எழுதி வெளியிடப்பட்ட எல்லா புத்தகங்களில் பெரும்பாலாவை ஷெல்-கமாண்ட் (Shell commands) எனப்படும் ஒரே ஒரு பரிமாணத்தை விளக்கும்.மௌசின் உதவியால், படம் ( icon ) பார்த்து கிளிக் செய்யும் உத்தியால், கமாண்ட் கற்க அவசியம் இல்லை. அதற்கு ஒருபுத்தகமும் அவசியம் இல்லை.
இதை யுனிக்ஸ் தொடர்பான முதல் கட்ட அறிபுவாகக் கொள்ளலாம். இவ்வகைப் புத்தகங்கள் யுனிக்ஸ் கம்ப்யூட்டரில் சாதாரணப் பயனாளிகள் (Ordinary users) என்னும் வகை மனிதர்களுக்குப் பயனானாகும்.
கம்ப்யூட்டரில் புரோகிராமர்களால் எழுதப்பட்டு தயாராக உள்ள புரோகிராம்களை தேவைப்பட்ட போதெல்லாம், அதைத் தேர்ந்தெடுத்து ஓட்டி பயன் அடையும் அளவு தேவையான அறிவைத் தரும்.
யுனிக்ஸ் தொடர்பான, அடுத்த கட்ட உயர்ந்த அறிவு என்றால், யுனிக்ஸ- அட்மினிஸ்ட்ரேஷன். எனப்படும் அறிவு. இது எதற்கு?
உயர்ந்த அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை (ரயில் எஞ்சின் ஏரோபிளேன் போன்றவற்றை) வாங்கிய பிறகு அதன் வாழ்னாள் முழுவதிலும் அதை நிர்வகிக்க, பராமரிக்க தனித் திறமையும், சிறப்புத் பயிற்சியும் அவசியம்.
யுனிக்ஸ் ஆப்பரேடிங் சிஸ்டம் ஓடும் கம்ப்யூட்டருக்கும் ஒரு நிர்வகிக்க திறமை உள்ளவர் தேவை. எனவே யுனிக்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற ஒரு தலைப்பில் சில புத்தகங்கள் தவறாமல் பயனுள்ளவை.
- மூன்றாம் கட்டமான அறிவு சிறிது கடினமானது. அதை விளக்கும் புத்தகம் மிகவும் குறைவு. அவை ஆழமானவை.
யுனிக்ஸ் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற தலைப்பில் உள்ள ஒரு சில புத்தகங்கள் இதற்குப் பயன் தரும். இந்த வகை அறிவை முழுமையாக அறிந்தவர் சிஸ்டம் புரோகிராமர் என்ற நிலைக்கு உயரலாம்.
இதுவரை தயாரான ஓரிரு புத்தகங்களைப் படித்து , வல்லுனர்களின் உதவி, இல்லாலாமல் முழுப் பயனை அடைய மிகச் சிலருக்கே சாத்தியமாகும்.
அவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸில் பட்டம் பெற்று அதுவும் முறையாக ஆப்பரேடிங் சிஸ்டத்தின் அடிப்படைகளை ஆர்வத்துடன் கசடரக்கற்று, அதன் கரைகளைக் கண்டவர்களாக இருப்பார்கள். அவர்களால் மாத்திரமே இந்த புத்தங்களை எளிதாகப் படித்துச் சுமாராகப் பயன் பெற முடியும்.
மீது இலவசமாக இண்டர்னெட்டில் கிடைக்கும் கட்டுரைகள் விளக்கங்கள், ஈ-புத்தகங்கள் (e-books) உள்படக் கணக்கில்லாத அளவில் புத்தகங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். புதியதாக ஒரு புத்தகம் எதற்காக?
நடராஜன்; நான் அறிந்த பலருக்கு யுனிக்ஸ் அடிப்படைகளை கற்கவும் சிஸ்டம் புரோகிராமராக வளர ஆர்வம் உண்டு. ஆனால் பயிற்சி தரும் பலருக்கு இந்த அறிவை எளிதாக சொல்லித் தரும்
.பயிற்சி இல்லை என்பது துயரம் தரும் செய்தி.
இந்த புத்தகம் கதைகள் மூலம் எவரும் எளிதாகக் கற்கும் வகையில் எழுதப்பட்டது. இன்த முறையான பயிற்சி, பல முறை மாணவர்கள் மத்தியில் பரிசோதிக்கப்பட்டது.
இன்றும் என்றும் சிறந்த பயிற்சியாளர்களின் உதவி இல்லாமல் யுனிக்ஸ் இன்டர்னல்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு துறையில் பிரகாசிக்க முடியாது என்பது ஒரு நம்பிக்கை.
இந்த நம்பிக்கையை உடைத்து, ஒரு புத்தகத்தைப் படித்தே ஒருவர் யுனிக்ஸ் அடிப்படை அறிவை எளிதாக அடையலாம் என்று உணர இந்தப் புத்தகம் உறுதி செய்யும்…
யுனிக்ஸ் என்று பிறந்து, லினக்ஸ் என்று வேகமாமாக வளர்ந்து வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படை கட்டமைப்பு,, அவை இயங்கும் விதம் இரண்டையும் தெளிவாக விளக்கும் புத்தகமோ அல்லது விளக்கமோ நான் கேட்டதில்லை.
கந்தசாமி: யுனிக்ஸ் ஒரு ஆப்பரேடிங் சிஸ்டம் என்று எல்லோருக்கும் தெரியும். லினக்ஸ், யுனி¢க்ஸோட ஒரு இலவசப் பிறவி என்றும் புரியுது. வேற் ஏதானும் வாசகர்களுக்கு சொல்லணுமா?
நடராஜன்: லினக்ஸ் அல்லது யுனிக்ஸ் ஒரு புரோகிராம்களின் குவியல். அதன் உள்ளே சிறியதும் பெரியதுமான பல நூறு அல்லது சில ஆயிரம் புரோகிராம்கள் உண்டு. இவை இருவிதமாக செயல்படுகின்றன.
முதலாவதாக ஒரு கட்டமைப்பை (கட்டிடம் அல்லது உடல் போன்ற) ஒரு அமைப்பை உருவாக்குகிறது. இரண்டாவதாக அந்த அமைப்பின் உள்ளே பலவிதமான இயக்கும் சக்தியையும் கொண்டுள்ளது.
மாணவர்கள் கண்ணீர்விடமாட்டார்கள்.
கந்தசாமி; இந்த புத்தகத்தின் சிறப்பு அம்சம் என்னவென்று இப்போ சொல்லிடலாம்.
நடராஜன்: உலகில் எல்லாமே, இயற்கையும், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் மற்றும் வாழ்வின் பல நிகழ்வுகளும் சில வரிவடிங்களின் அடிப்படையில் உருவானவை.
தெரிந்த, நம் சூழ்னிலைகளின் நிகழ்வுகளில் அடங்கிய வரிவடிவங்களை (Patters) கண்டு பிடித்து, அறிவியலில் அதே போன்ற வரிவடிவங்களை உணர்ந்து இவற்றை இணத்துச் சொல்லும் போது மாணவர்கள் எளிதாக அறிவார்கள்.
இந்த வகையில் எல்லாவித கல்விக்கும் புத்தங்கள் எழுதப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டால் மாணவர்கள் என்றுமே கண்ணீர் விட மாட்டார்கள். நான் மட்டுமில்லை ஐன்ஸ்டீனும் அதையேதான் சொல்றாரு.
Albert Einstein: Example is not another way to teach. It is the only way.
கந்தசாமி: இந்த புத்தகம் பிறந்த வரலாற்றை எனக்கு சொல்லிட்டீங்க. வாசகர்களுக்கும் சொல்லிடலாம். அதை அறிந்த பின்னால், எந்த சிக்கலான காரியத்தையும் விடா முயற்சியாலவெற்றி பெறலாம் என்ற ஒரு ஆழமான செய்தியும் வாசகர்களைப் போய்ச் சேரும்.
நடராஜன்: பெரிய சாப்ட்வேர் நிருவனங்கள், தனது பயிற்சி¢ கொடுப்பார்கள். பயற்சியை அளிக்க பிரபல பயிற்சி நிருவனங்கள் ஒரு டை-கட்டிய பையனைப் பயிற்சியாளராக அனுப்புவார்கள்,
இந்தப் பயிற்சியில் நான் ஓரு முறை போதாதென்று இரண்டு முறை சேர்ந்தேன். அதன் விளைவாக, இந்தப் பிறவிலே யுனிக்ஸ் கற்றுக் கொள்ளவே வேண்டாம் என்ற ஒரு சோகமான முடிவிற்கு வந்த நினைவு, இன்றும் பசுமையாக உள்ளது.
நான் யுனிக்ஸை விட்டாலும் யுனிக்ஸ் என்னை விடுவதாயில்லை. சில வருடங்களுக்குப் பிறகு, நானே யுனிக்ஸ் பயிற்சியை பல இளம் எஞ்சினிரிங் பட்டதாரிகளுக்கு அளிக்க வேண்டிய ஒரு சூழ்னிலை உருவாகியது.
ஒரு பிரபல புத்தகக் கடையிலிருந்த எல்லா யுனிக்ஸ் புத்தகங்களையும் தருவித்தேன். அவைகளுடன் சில மாதங்கள் மன்றாடி என்னுடன் பணிபுரிந்த பல நிபுணர்களைக் குழப்பி, நானும் குழம்பினேன்.
இந்த முயற்சியில் என்னால் அதிகம் அவதியுற்ற (ஹைதராபாதில் ஒரு பிரபல பயிற்சியாளராகப் புகழப்படும்) திரு கரசாலா ஸ்ரீனிவாஸ் அவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
அதன் விளைவாக, கண்ணீர் வராமல், எளிமையாக, யுனிக்ஸ் எவ்வாறு இயங்குகிறது என்னும் விளக்கத்தை நமது தினசரி வாழ்கையிலிருன்து பல உதாரணங்களையும் மற்றும் கதைகள் மூலமாகவும் விளக்கத் தொடங்கினேன்.
இதன் அடிப்படையில் ஒரு யுனிக்ஸ்-இண்டர்னல் பாடத் திட்டத்தை உருவாக்கி பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். இது ஒரு மிகப் பெறும் வெற்றியை எனக்கும், பயிற்சி பெற்றவர்களுக்கும் தந்தது.
இந்த வகையான பயிற்சி (கல்வி அளிக்கும்) முறை மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இன்றும் என்றும் யுனிக்ஸ் புரோகிராமிங் என்ற துறை மிக உயர்ந்ததாகவும் சிக்கலாகவும் கருதப்படுவதன் காரணம், தவறாக அளிக்கும் பயிற்சி முறை மட்டுமே.
யுனிக்ஸ் பயிற்சி அளிக்கும் அனைவரும் யுனிக்ஸ் பிறந்த காலம் முதல் இந்த நாள் வரை ஒரே ஒரு விதமான பயிற்சி முறையைக் கடைபிடித்து வருகிறார்கள்.
குத்துமதிப்பாக அறிந்த யுனிக்ஸ்
அந்தப் பயிற்சி பெற்றவர்களில் பலர், ஒரு குத்து மதிப்பாகக் கொடுத்த வேலையச் செய்து வந்தாலும் நாம் என்ன செய்கிறோம். இதனால் என்ன விளைகிறது என்று முழுமையாக உணர்வதில்லை.
எனவே இதை மிக சிக்கலான அதிக அறிவு தேவைப்படும், ஒரு தேவ ரகசியமாக இன்றுவரை கருதப்படுகிறது. அந்த முறையில் கற்றவரும் கற்பிப்பவரும் யுனிக்ஸ் செயல்பாட்டில் என்றுமே ஆழ்ந்த அடிப்படை அறிவை அடையாததே முக்கிய காரணம் என்று இந்த புத்தகத்தைப் படித்து முடித்தபின் அறியலாம்.
மனிதரில், சிறந்தவர் என அறியப்பட்டவர் அனைவரும் எளிமையானவர்களே. அது போல மிகச் சக்திவாய்ந்த ஒரு மென் பொருளாக யுனிக்ஸ் காணப்பட்டாலும், அவை மிக எளிமையான பல அடிப்படைகளில், உருவாவாக்கிய பல மின் பொருட்களின் (புரொக்ராம்களின்) குவியலாக அறியலாம்.
தினம் சுமார் மூன்று மணி நேரம் அளவில் நான்கு நாள் பாடமாக இந்த வகையில் வகுப்பு அறைப் படங்களும் அதே அளவு செயல் முறை பயிற்சிகளும் ஒரு சிறந்த பொரியியல் நிபுண்ரை உருவாக்கும்.
சுமார், மூன்று வருடங்கள் நடத்தி வந்த அனுபவம் இந்த புத்தகம் வெளிவர முக்கிய காரணம். சமீப காலத்தில்க் கணியம் என்னும் தமிழ் லைனக்ஸ் மின்பத்திரிக்கையில் இதையே தொடராக வெளி வந்தது.