"

6

பயணம்

கடந்து வந்த பயணங்கள்,

கறைந்து செல்லும் காட்சிகள்,

உறைந்து விட்ட உணர்வுகள் இவற்றுடன் ஊடுருவிச் செல்கிறது என் பயணம்,

இந்த பயணத்தில் சுழன்றது கனரக கால் சக்கரம் மட்டுமல்ல என் கனவு சக்கரமும் தான்.

 

 

வான் வெளியில் ஒரு கடல் பயணம்

ஐந்து முறை அலாரம் வைத்து,

அந்த ஐந்திற்க்கும் முன் எழுந்து அதை அணைத்து பரபரப்பாக கிளம்பிய பறக்கும் பயணம்,

பயம் கலந்த முதல் காதல் மட்டுமல்ல பயம் கலந்த முதல் பயணமும் மறக்க முடியாது இதை யாரும் மறுக்க முடியாது.

வான் பயணத்தில் சுவாசிக்க ஆக்சிசன் வறட்சி வரும் என்று வரும்முன் சொன்னவர்களால்,

பயணத்தை கவிதையாக வாசிக்க வார்த்தைகளுக்கும் வறட்சி வரும் என சொல்ல மறந்தது ஏனோ?

உவமைகளாக கேட்ட அனைத்தையும் உருவமாக உணர்கிறேன்,

உயர்ந்த மனதுடன் உயர்ந்த இடத்தில் இருந்து உணர்ந்தவை இவை.